லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரித்தானிய மெய்யியலாளர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
}}
 
'''லுட்விக் விட்கென்ஸ்டைன்''' எனச் சுருக்கமாக அழக்கப்படும் '''லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன்''' (Ludwig Josef Johann Wittgenstein - 26 ஏப்ரல் 1889 – 29 ஏப்ரல் 1951) என்பவர், [[தருக்கம்]], [[கணித மெய்யியல்]], [[மனம்சார் மெய்யியல்]], [[மொழிசார் மெய்யியல்]] போன்ற துறைகளில் பணிபுரிந்த ஒரு [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] மெய்யியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களுள் ஒருவரான இவரது செல்வாக்கு பரவலானது ஆகும்.
 
62 ஆவது வயதில் இவர் இறப்பதற்கு முன் எழுதிய ஒரே [[நூல் அமைப்பு|நூல்]], ''டிரக்டாட்டஸ் லோஜிக்கோ-பிலோசோபிக்கஸ்'' ''(Tractatus Logico-Philosophicus)'' என்பது. இவர் தனது [[வாழ்க்கை]]யின் இறுதி ஆண்டுகளில் எழுதிய ''மெய்யியல் ஆய்வு'' (Philosophical Investigations) என்னும் நூல் இவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களும், பகுத்தாய்வு மெய்யியல் துறையில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளன.
 
குறிப்பாக பிளாட்டோ, நீட்சே. கீககாட், சாத்ரே போன்ற எல்லோரையும் விட இவர் முக்கியமானவராகத் திகழ்ந்தார். ஏனைய சிந்தனையாளர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சிந்தனையைத் தழுவியவர்களாக இருந்தார்கள். ஆனால் லுட்விக் விட்கென்ஸ்டைனிடம் சில விசேட பண்புகள் காணப்பட்டன. எதையும் தெளிவாகச் சிந்திக்கும் சிந்தனைத்திறன் இவரிடம் இருந்தது. இவரது கருத்துக்கள் சக்தி மிகுந்தவையாகவும், புதியனவாகவும் காணப்பட்டன.
 
விட்கென்ஸ்டைன் சிந்தனை செய்வதற்கான பல புதிய விதிகளை உருவாக்கி அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். புதிய வினாக்களை எழுப்பினார். அவர் மெய்யியல் சிந்தனையை நீந்துதலுக்கு ஒப்பிட்டார். நீந்தும் போது மனித உடல் நீரில் மிதக்கிறது. நீரின் ஆழத்திற்குச் செல்ல வேண்டுமாயின் ஒரு தாக்கமான உடற்பலம் பிரயோகிக்கப்பட வேண்டும். சிந்தனையும் அவ்வாறே. மெய்யியல் பிரச்சினைகளின் அடிஆழத்திற்குச் செல்ல வேண்டுமாயின் ஒரு பாரிய மனவேகம், ஆற்றல் தேவைப்படுகின்றது. இந்தவகையில் விட்கென்ஸ்டைனின் பல பங்களிப்புகள் தற்கால மெய்யியல் சிந்தனையில் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணின. இவருடன் ஒப்பிடுவதற்கு வேறு யாருமில்லை எனக்கூறக்கூடிய அளவுக்கு தற்கால மெய்யியலில் அவர் இடம் பிடித்துள்ளார்.
வரிசை 27:
# விட்கென்ஸ்டைன் காட்டுமிராண்டித்தனமான முறையில் மெய்யியலை அழித்தொழித்தார்.
 
விட்கென்ஸ்டைனைப் பற்றி பர்டன் ரஸ்ஸல் " எனது வாழ்வில் சந்தித்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆய்வறிவாளன். அற்புத ஆய்வு மனப்பான்மை கொண்டவர்." என்றும், அதேபோல் G.E..Moore " 1912ல் நான் விட்கென்ஸ்டைனைச் சந்தித்தபோது மிக விரைவாகவே மெய்யியலில் அவரை ஒரு கெட்டிக்கரனாக அறிந்து கொண்டேன். ஆழமான சிந்தனைத்திறனும், சிறந்த அகப்பார்வையும் அவரிடம் காணப்பட்டது " என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
 
விட்கென்ஸ்டைனை 1. முந்திய விட்கென்ஸ்டைன் 2. பிந்திய விட்கென்ஸ்டைன் என அவரால் எழுதப்பட்ட இரண்டு பிரபலமான நூல்களைக் கொண்டு பிரித்து நோக்கும் போது, '''Tractatus Logico-Philosophicus''' என்னும் நூல் அவரது இளமைக்காலத்தில் எழுதப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்டதும் மிகக் கடினமான உவமான தன்மையுடைய வாக்கியங்களையும் கொண்டதாக உள்ளது. நுணுக்கத்தன்மை வாய்ந்ததாகவும், மேலோட்டமான வாசிப்புக்கு உட்படாததாகவும், ஒரு புனித நூல் போன்றும் அது அமைந்துள்ளது. இந்த நூலில் விட்கென்ஸ்டைன் பலவகையான விளக்கங்களை எடுத்துக்கூறியிருந்த போதிலும், அதன் சில பகுதிகள் கருத்து முரண்பாடுபாடுகளையும் கொண்டிருந்தன. ஆனால் விட்கென்ஸ்டைன் Tractatus இல் திருப்திகரமான, திட்டவட்டமான விளக்கங்களை முன்வைத்துள்ளதாகக் கருதினார்.
வரிசை 37:
பொருட்களின் இணைவுகளிலிருந்துதான் ஒரு நிகழ்வு அர்த்தம் பெறுகிறது. பொருட்களில், நிகழ்வுகளில் ஒன்றுக்கொன்று திட்டவட்டமான உறவுகள், தொடர்புகள் காணப்படுகின்றன. இதனால் நேர்வுகளைப் பற்றிப் பேசுவது சிக்கலானதாகும். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நேர்வுகள் இவ்வுலகை ஸ்திரமாக்கிக் காட்டும் ஒன்று எனவும், நேர்வுகள் இவ்வுலகை விபரிக்கின்றன எனவும் Tractatus ல் கூறப்பட்டுள்ளது. நேர்வுகள் இவ்வுலகை சித்திரமாக்கிக் காட்டுவதும், விபரிப்பதும் மொழியினால்தான்.
 
விட்கென்ஸ்டைனின் கருத்தில் உலகம் நேர்வுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிக்கல் குறைந்த நேர்வுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. சிக்கல் குறைந்த நேர்வுகளிலிருந்து மேலும் சிக்கல் குறைந்த நேர்வுகளை உருவாக்கலாம். இவ்வாறு குறைத்துக் கொண்டே சென்றால் இறுதியில் அணு நேர்வுகள் என்ற நிலைக்கு வந்து சேரலாம். " அணு நேர்வுகள்தான் உலகைக் கட்டியெழுப்பும் கட்டிடக் கற்கள் போன்று செயற்படுகின்றன " இதை நாம் விட்கென்ஸ்டைன் குறிப்பிடும் மூல எடுப்புக்கள் என்பதுடன் தொடர்புபடுத்தலாம். எடுப்புக்கள் இலக்கண வரம்புகளினால் உருவாக்கப்பட்டு மொழியினால் வெளிப்படுத்தப்படுகின்றன.
 
தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் என எந்த மொழியாயினும் எடுப்புக்களில் எந்த வித்தியாசமுமில்லை. எடுப்புக்களுக்குரிய இலட்சணங்களைக் கொண்டிருந்தால் போதும். மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். உண்மை அல்லது பொய் கூறுவதாக இருக்கலாம். அல்லது உண்மை பொய் இல்லாததாக இருக்கலாம். எந்த வசனத்தை எதற்குமேல் குறைக்க முடியாதோ அல்லது பகுக்க முடியாதோ அதுதான் மூல எடுப்பு, அடிப்படை எடுப்பு (elimentary proposition) என விட்கென்ஸ்டைன் குறிப்பிட்டார். மேலும் மூல எடுப்பு எனும்போது அங்கு பெயர்கள் மட்டுமே உள்ளன என Tractatus குறிப்பிடுகிறது. பெயர் என்பதின் அர்த்தத்தை மிக நுணுக்கமான முறையில் அவர் எடுத்துக் காட்டினார். பெயர் என்பது மேலும் துண்டுகளாக நறுக்கப்பட முடியாதது. அது மூலாதாரமான அடையாளம் என்றார்.
வரிசை 60:
கூற்று 2 : தும்புத்தடி ஒரு மூலையில் உள்ளது. அதில் ஒரு கட்டு தும்பும் சேர்ந்துள்ளது.
 
இங்கு கூற்று 1 உம் கூற்று 2 உம் ஒரே மாதிரியானவையா? தும்புத்தடி என்ற சொல் எல்லாவற்றையும் உள்ளடக்குகிறது. சந்தேகத்திற்கு இடமற்ற முறையில் தும்பும், தடியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இதுதான் தும்புத்தடி என்பதன் கருத்தாகும்.
 
வார்த்தைகளை நாம் பயன்படுத்துகையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஒரு துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இன்னுமொரு துறையிலும் பயன்படுத்துகிறோம். இதனால் பகுப்பாய்வு என்பது மட்டும் மேற்குறித்த விடயங்களைத் தீர்மானிப்பதில்லையென விட்கென்ஸ்டைன் கருதினார். ஒரு பிரச்சினைக்கு மெய்யியல் ரீதியான தீர்வு என்பது ஒரு நோய்க்குச் செய்யும் பரிகாரம் போன்றதாகும். மொழிகளில் ஏற்படும் பிரச்சினைகள், அவை மனித சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கம், வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகிறார். மொழி, மொழியின் அலங்காரத்தினால் எமது அறிவில் ஏற்படும் வசீகரத்தன்மைக்கு எதிராக நடத்தப்படும் யுத்தமே மெய்யியல் எனக் குறிப்பிட்டார். நேரம், இடம், மனம் போன்ற வார்த்தைகளை சாதாரண மக்களும் உபயோகிக்கின்றனர். மெய்யியலாளர்களும் உபயோகிக்கின்றனர். வார்த்தைகளை, சொற்களை எமது பேச்சிலும், எழுத்திலும் உபகரணங்களாகப் பயன்படுத்துகின்றோம். அதாவது இவை எமது பேச்சுக்களில் கருவிகளாகக் கையாளப்படுகின்றன. ஒரு கருவியைக் கொண்டு பல இயந்திரங்களை அமைப்பது போன்றதே இதுவாகுமென்றும், மொழியின் பலவகையான செயற்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை மொழி விளையாட்டுக்கள் என்றும் பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகின்றார்.
 
அளவையியல் ரீதியான பகுத்தறிவுக் கோட்பாடு ஏற்கப்படக்கூடியதாயினும் மற்றொரு புறத்தில் அங்கு தீர்மானிக்க முடியாத முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலை மெய்யியலாளர்களுக்கு மகிழ்ச்சியற்றதொன்றாகும். " Tractatus இல் நான் கூறிய மொழியின் அளவையியல் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்படாவிட்டால் அது தொடர்பாக நான் சொல்ல நினைத்து பூர்த்தியாகாது. அது மனவேதனையைத் தருகிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பவன் தன்னுடைய முயற்சியில் எப்பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லையென்றால் அவனுடைய முயற்சி திருப்தியற்றதாகும். மக்கள் புதிர்களில் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிர்கள் இல்லையென்றால் அவர்கள் ஆச்சரியத்தை அடைகின்றனர். அர்த்தமற்ற பிரச்சினைகளைக் கடந்து செல்ல வழிகாட்டுவதே என்னுடைய நோக்கமாகும். மெய்யியல் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தாம் அறிந்துள்ளது சிறிதளவே என்பதை உணர்வர் ". என்றார். இது சோக்கிரட்டீசின் கருத்தை ஒத்ததாகும்.
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது