இராபர்ட்டு புரூசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 31:
'''முதலாம் இராபர்ட்டு''' (''Robert I'', 11 சூலை 1274 – 7 சூன் 1329), பரவலாக '''இராபர்ட்டு புரூசு''' (''Robert the Bruce'', பண்டைய கேலிக்: ''Roibert a Briuis''; [[சுகாத்திசு கேலிக்கு|தற்கால இசுக்காத்திய கேலிக்]]: ''Raibeart Bruis''; நார்மன் பிரான்சியம்: ''Robert de Brus'' அல்லது ''Robert de Bruys'') 1306இலிருந்து 1329இல் தனது மரணம் வரை [[இசுக்கொட்லாந்து|இசுகாத்திய]] அரசராக இருந்தவர். அவரது [[தலைமுறை]]யில் மிகச் சிறந்த போர்வீரராகத் திகழ்ந்த இராபர்ட்டு [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்திற்கு]] எதிரான முதல் விடுதலைப் போரை நடத்தியவர். இசுக்கொட்லாந்து ஓர் தன்னாட்சி பெற்ற நாடாக மீட்பதற்கு போராடி வெற்றி கண்டார்; இன்றும் இவர் இசுக்கொட்லாந்தின் தேசிய நாயகராக கருதப்படுகின்றார்.
== இளமை வாழ்க்கை ==
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.<ref name="RMS9">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), p. 9 {{ISBN|0-7867-0329-6}}</ref> ஆறாம் இராபர்ட் புரூசிற்கும் கார்ரிக் கோமகள் மர்ஜோரிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.<ref name="RMS9"/> இராபர்ட்டின் குடும்பம் [[பிரான்சு|பிரான்சிலிருந்து]] குடிபெயர்ந்தவர்கள். பிரான்சின் வடபகுதியில் உள்ள [[நார்மாண்டி]]யில் புரூசு என்றவிடத்திலிருந்து வந்தவர்கள்.<ref name="GWRS82">George Way; Romilly Squires, ''Scottish Clan & Family Encyclopedia'' (Glasgow: HarperCollins Publishers, 1994), p. 82 {{ISBN|0-00-470547-5}}</ref> 1066இல் இதே பெயருடைய இவரது மூதாதை ஒருவர் [[இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்|முதலாம் வில்லியமுடன்]] இங்கிலாந்து வந்துள்ளார்.<ref name="GWRS82"/> மற்றுமொரு இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்தின் முதலாம் டேவிடுடன் வந்துள்ளார்.<ref name="GWRS82"/>
 
1286இல் இசுக்கொட்லாந்தின் மூன்றாம் அலெக்சாண்டர் மரணமடைந்தார்.<ref name="JBPI7-8">''The Scots Peerage, Founded on Wood's Edition of Sir Robert Douglas's Peerage of Scotland'' ed: James Balfour Paul, Vol. I (Edinburgh: David Douglas, 1904), pp. 7-8</ref> அடுத்த அரசியாக பதவியேற்கவிருந்த அவரது பேத்தியும் மரணமடைந்தார்.<ref name="JBPI7-8"/> 1292இல் புரூசு குடும்பமும் பேலியோல் குடும்பமும் தங்களில் ஒருவரை இசுக்கொட்லாந்து அரசராக நியமிக்கும்படி இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு அரசரை வேண்டினர். எட்வர்டு அரசர் பேலியோல் குடும்பத்தின் ஜானை தேர்ந்தெடுத்தார். <ref>Herbert Maxwell, ''Robert the Bruce and the Struggle for Scottish Independence'' (New York; London: G.P. Putnam's Sons, 1906), pp. 63-4</ref>
 
1292இல் இசுக்கொட்லாந்திலுள்ள அனைத்து புரூசு வம்சத்தினருக்கும் தலைவராக இராபர்ட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), p. 33</ref> 1297இல், இங்கிலாந்து அரசர் இசுக்கொட்லாந்தை பிரான்சிற்கு எதிராக போர்புரியக் கட்டளையிட்டார். இதற்கு இசுக்கொட்லாந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கிலாந்து மன்னருக்கு எதிராக நடைபெற்ற [[கிளர்ச்சி]]யில் இராபர்ட்டும் பங்கேற்றார். இந்த இசுக்கொட்லாந்திய போராளிகளுடன் நடந்த பல சண்டைகளில் எட்வர்டு வெற்றி பெற்று வந்தார். இறுதியில் எட்வர்டு விரும்பியதை இராபர்ட்டுக்குச் செய்ய வேண்டியதாயிற்று.<ref>Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), p. 42</ref>
வரிசை 39:
1306இல் ஜான் கோமின் என்பவரை தேவாலயமொன்றில் இராபர்ட்டு சந்தித்தார். இவரும் இசுக்கொட்லாந்திய அரசராக விரும்பியவர். இவர்களுக்கு இடையே எழுந்த சண்டையில் இராபர்ட்டு ஜானைக் கொன்றார்.<ref>Herbert Maxwell, ''Robert the Bruce and the Struggle for Scottish Independence'' (New York; London: G.P. Putnam's Sons, 1906), pp. 129-30</ref> இதனையடுத்து இராபர்ட்டு இசுக்கூன் என்றவிடத்திற்குச் சென்றார். இங்கு இங்கிலாந்து அரசருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த இசுகொத்திய அரச அங்கிகளை இசுக்கொத்திய பிரபுக்கள் கொண்டுவந்தனர். இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.<ref>John Barbour; John Pinkerton, ''The Bruce: Or, The History of Robert I. King of Scotland'', Vol. 1 (London: Printed by H. Hughs, for G. Nicol, bookseller to His Majesty, 1790), p. 42</ref>
 
இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார். முதலாம் எட்வர்டு அரசருடனும் பின்னர் அவரது மகன் இரண்டாம் எட்வர்டு அரசருடனும் சண்டைகள் புரிந்தார். 1314இல் பன்னோக்பர்ன் சண்டையில் இராபர்ட்டின் படைகள் இரண்டாம் எட்வர்டின் படைகளை வெற்றி கண்டனர்.<ref>Alan Young; Michael J. Stead, ''In the Footsteps of Robert the Bruce'' (Stroud: Sutton Publishing Limited, 1999), pp. 6, 124 {{ISBN|0-7509-1910-8}}</ref>
 
1315இல் இராபர்ட்டு புரூசு தனது படைகளை [[அயர்லாந்து|அயர்லாந்திற்கு]] அனுப்பினார்.<ref name="RMS173-74">Robert McNair Scott, ''Robert the Bruce; King of Scots'' (New York: Carroll & Graf Publishers, Inc., 1999), pp. 173-74</ref> இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.<ref name="RMS173-74"/> இசுக்கொட்லாந்து படையினருக்கும் அயர்லாந்து மக்களுக்கும் சண்டைகள் எழுந்தவண்ணம் இருந்தன. 1318இல் எட்வர்டு புரூசு கொல்லப்பட்டதுடன் இசுகொட்லாந்து அயர்லாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இராபர்ட்டு_புரூசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது