"சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்)
சி (பராமரிப்பு using AWB)
 
== வாழ்க்கை வரலாறு ==
[[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தில்]] (பழைய [[சேலம்]] மாவட்டத்தின்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.<ref> {{cite web | last = மணியன் | first = தமிழருவி | title = ராஜாஜி என்ற ராஜரிஷி | publisher = தி தமிழ் இந்து | date = டிசம்பர் 25, 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/article5498814.ece | accessdate = டிசம்பர் 25, 2013 | archiveurl = http://tamil.thehindu.com/opinion/columns/ | archivedate = டிசம்பர் 25, 2013}}</ref>
ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். [[1900]]இல் தமது [[வழக்கறிஞர்]] தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து [[ரௌலத் சட்டம்|ரௌலத் சட்டத்திற்கெதிரான]] இயக்கம், [[ஒத்துழையாமை இயக்கம்]], [[வைக்கம் சத்தியாகிரகம்]] போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு [[மகாத்மா காந்தி]]யின் [[உப்பு சத்தியாகிரகம்|தண்டி யாத்திரை]]யை ஒட்டி [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.[[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]] [[ஜெர்மனி]]யுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் [[வெள்ளையனே வெளியேறு போராட்டம்|வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு]] எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் [[முகமது அலி ஜின்னா]]வுடனும் [[அகில இந்திய முஸ்லிம் லீக்]]குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் ''சி ஆர் பார்முலா'' என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், [[கல்வி]] மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 
[[படிமம்:Karaikudi.jpg|thumb|அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், [[சா. கணேசன்]], ராஜாஜி, பாகனேரி பில்லப்பா, [[காமராஜர்]], [[ரா. கிருஷ்ணசாமி நாயுடு]]]]
 
 
==குடும்பம்==
.
==இந்தி திணிப்பு==
1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். <ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 512, 527</ref>
 
== மதுவிலக்கு ==
இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். <ref name ="rajaji"> [http://patrikai.com/rajaji-hande.html கருணாநிதி சொல்வது பொய்! ஆதாரம் நீட்டுகிறார் ஹண்டே!] </ref>
 
==நினைவுச் சின்னங்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2717582" இருந்து மீள்விக்கப்பட்டது