புவியியல் ஆள்கூற்று முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 4:
 
* [[அகலாங்கு]] என்பது எந்தவொரு புள்ளிக்கும் மத்திய கோட்டுக்கும் இடையான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமாந்தரமான கற்பனைக் அகலாங்கு கோடுகள் பூமியின் மேற்பரப்பில் [[சிறு வட்டம்|சிறு வட்டங்களை]] அமைக்கின்றன. [[மத்திய கோடு]] 0 பாகை அகலாங்காகும். இது ஒரு [[பெரு வட்டம்|பெருவட்டத்தை]] அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்காகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).
 
* [[நெட்டாங்கு]] என்பது ஒரு புள்ளி ஒரு ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் சந்திகின்றது.
 
இவ்விரு ஆள்கூறுகளை கையாள்வதன் மூலம் புவி மேற்பரப்பின் எந்தவொரு புள்ளியையும் அடையாளப்படுத்தலாம்.
 
உதாரணமாக, [[சென்னை]] மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும்.
 
பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/புவியியல்_ஆள்கூற்று_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது