கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
==பண்புகள் ==
[[File:Burning-sulfur.png|thumb|left|150px|கந்தகம் எரிக்கும்போது இரத்தசிவப்பு நிற திரவமாக உருகுவதோடு இருட்டில் நன்கு தெரியும் நீலநிற சுடர் விட்டு எரிகிறது.]]
கந்தகம் , வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட, மணமற்ற, எளிதில் உடைந்து நொருங்கக் கூடிய திண்மமாகும். இது நீரில் கரைவதில்லை என்றாலும் கார்பன் டை சல்பைடில் கரைகிறது.<ref name="Greenwd">Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. {{ISBN|0-7506-3365-4}}.</ref> S என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கந்தகத்தின் அணு எண் 16; அணு நிறை 32.06;அடர்த்தி 2070 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 386 K(113&nbsp;°C), 717.8 K(445&nbsp;°C) ஆகும். கந்தகம் மின்சாரத்தையும், வெப்பத்தையும் மிகக் குறைவாகக் கடத்துகிறது. இது காற்று வெளியில் நீல நிற சுவாலையுடனும் ஆக்சிஜன் வெளியில் [[அவுரி]] நீல நிற சுவாலையுடனும் எரிந்து கந்தக டை ஆக்சைடு, கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற வளிமங்களை வெளியேற்றுகின்றது சூடு படுத்தினால் [[தங்கம்]], [[பிளாட்டினம்]] மற்றும் [[இருடியம்]] தவிர்த்த பிற உலோகங்களுடன் இணைகிறது. [[செம்பு]], [[இரும்பு]]டன் சேரும்போது சுடரொளி வீசுகிறது.
 
திண்ம, நீர்ம மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite journal |title = Solid Sulfur Allotropes Sulfur Allotropes| first1 = Ralf |last1 = Steudel|first2 = Bodo|last2 = Eckert|journal = Topics in Current Chemistry |year = 2003 |volume = 230 |pages = 1–80 |doi = 10.1007/b12110}}</ref> இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.<ref name="Steudel 1982 149–176">{{cite journal| doi=10.1007/3-540-11345-2_10 |last = Steudel|first = R. |title = Homocyclic Sulfur Molecules |journal = Topics in Current Chemistry |year = 1982 |volume = 102 |pages = 149–176}}</ref> சாய் சதுரமுகி அல்லது எண்முகி<ref name="Steudel 1982 149–176"/> (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள்.<ref name="Greenwd"/><ref>{{cite journal |last1 = Tebbe |first1 = Fred N. |last2 = Wasserman |first2 = E. |last3 = Peet |first3 = William G. |last4 = Vatvars |first4 = Arturs |last5 = Hayman |first5 = Alan C. |title = Composition of Elemental Sulfur in Solution: Equilibrium of {{chem|S|6}}, S<sub>7</sub>, and S<sub>8</sub> at Ambient Temperatures |journal = Journal of the American Chemical Society|year = 1982 |volume = 104 |issue = 18 |pages = 4971–4972 |doi = 10.1021/ja00382a050}}</ref> இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8&nbsp;°C உருகு நிலையும் கொண்டிருக்கிறது. இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது.
 
[[File:Cyclooctasulfur-above-3D-balls.png|thumb|left|150px|The structure of the cyclooctasulfur molecule, S<sub>8</sub>.]]
ஒற்றைச் சாய்வுடைய (monoclinic) அறுங்கோணமுகி (Prismatic) அல்லது பீட்டா கந்தகம் என்ற கந்தகத்தை அதன் உருகு நிலையில் உருக்கி புறப்பரப்பு உறையுமாறு குளிர்வித்து திண்மமாய் உறைந்த பகுதியில் ஒரு சிறிய துளையிட அதன் வழியாக வெளியேறுபடி செய்வார்கள். இது கொள்கலனின் சுவர்களில் ஊசிப் படிவுகளாகப் படியும். இதன் நிறம் சற்று அழுத்தமான மஞ்சளாக உள்ளது. அடர்த்தி சற்று குறைந்து 1960 கிகி/கமீ ஆகவும், உருகு நிலை சற்று அதிகரித்து 119.25&nbsp;°C ஆகவும் உள்ளது.
 
நெகிழ்மக் கந்தகம் அல்லது காமாக் கந்தகம் [[இரப்பர்]] போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ. இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை. நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகாத, உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது. நெகிழ்மக் கந்தகம் கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள். படிக உருவமற்றவை(amorphous), மிதமக்கந்தகம்(colloidal) எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர்.
வரிசை 32:
== ஆக்சைடுகள், ஆக்சோ அமிலங்கள், ஆக்சோ எதிர்மின் அயனிகள் ==
கந்தகத்தை எரிப்பதால் முக்கியமான கந்தக ஆக்சைடுகள் தோன்றுகின்றன.
:S + O<sub>2</sub> → SO<sub>2</sub> ([[கந்தக டை ஆக்சைடு]])
:2 SO<sub>2</sub> + O<sub>2</sub> → 2 SO<sub>3</sub> ([[கந்தக டிரை ஆக்சைடு]])
கந்தகத்தின் பல ஆக்சைடுகள் அறியப்படுகின்றன. கந்தக மோனாக்சைடு, இருகந்தக மோனாக்சைடு, இருகந்தக ஈராக்சைடு மற்றும் உயர் ஆக்சைடுகளைக் கொண்டுள்ள பெராக்சோ குழுக்கள் உள்ளிட்டவை கந்தகத்தை மிகுதியாகக் கொண்ட ஆக்சைடுகள் ஆகும்.
வரிசை 68:
* [http://www.sulphurinstitute.org/ The Sulphur Institute]
* [http://www.nutrientstewardship.com/partners/products-and-services/sulfur-institute Nutrient Stewardship and The Sulphur Institute]
 
 
{{கந்தகச் சேர்மங்கள்‎}}
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது