வானக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''வானக்கோளம்''' (''celestial sphere'') என்பது ஒரு கற்பனைக் கோளம். இது [[பூமி]]யை மையமாகக் கொண்டு எவ்வித ஆரத்துடனும் கற்பனை செய்யப்பட்ட ஒரு கோளம். இந்த [[வானியல்]] கருத்து நம்மிடையே தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ளது. இதனால் வானத்தில் பூமியிலிருந்து காணப்படும் எவற்றையும் படிமத்தில் இடம் காட்டமுடிகிறது. ஒவ்வொரு வானப் பொருளுக்கும் ஆயங்கள் கொடுத்து அவைகளின் இடத்தை வரையறுக்கலாம்.
 
== கருத்தின் தோற்றம் ==
 
பழையகாலத்து தத்துவியலர்கள்தான் இதை முதன் முதலில் உருவாக்கியிருக்க வேண்டும். வானியலிலும் [[கப்பற் பயணத்திலும்]] மிகவும் பயன்பட்ட, பயன்படுத்தப்படுகிற, இக்கருத்து ஆரம்பகாலத்தில் உண்மையாகவே ஒரு வானக்கோளம் இருப்பதாக நினைக்கப் பட்டிருந்தாலும், காலப் போக்கில் இது ஒரு கற்பனை தான், ஆனால் தேவையான கற்பனை, என்பது மனித சமூகத்திற்குப் புரிந்தது.
 
== கருத்து ==
வரிசை 12:
[[படிமம்:Celestial_sphere-ta.svg|right|thumb|200px|வானக்கோளம் வான நடுவரையால் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது]]
 
[[படிமம்:Slide language ta.svg|right|thumb|400px|]]
 
[[படிமம்:Sidereal day (prograde).png|right|thumb|300px|நேரம் 1 இல் சூரியனும் ஒரு தூர நட்சத்திரமும் உச்சியில் உள்ளது. நேரம் 2 இல் (மறுநாள்) பூமி 360 பாகை தன்னைச்சுற்றி வந்ததும் தூர நட்சத்திரம் மறுபடியும் உச்சியில் வருகிறது. நேரம் 3 இல் (நேரம் 2க்கு 4 நிமிடம் கழித்து) சூரியனும் தலைக்கு மேலே வருகிறது.]]<br />
 
வானத்தை கோள உருவில் பார்க்கத்தொடங்கினதும், பூமியில் இடங்களை வரையறுப்பதுபோல் வானத்தில் தோன்றும் பொருள்களையும் வழிப்படுத்தலாம். பூமிக்கோளத்தின் படிமத்தில் இரண்டுவிதமான வட்டங்கள் கையாளப்படுகின்றன. வடதுருவம், தென் துருவம் இரண்டின் வழியாகப்போகும் வட்டங்களுக்கு '''உச்சிவட்டங்கள்''' (meridians) என்று பெயர். இவை முதல் வகையான வட்டங்கள். இவைகளை நேர்கோணத்தில் வெட்டும் வட்டங்கள் ஒன்றுக்கொன்று இணையாக இருப்பன. அவை '''அகலாங்கு இணை வட்டங்கள்''' (parallels of latitude) எனப் பெயர் பெறுவன. அவைகளில் இரண்டு துருவங்களுக்கும் சம தூரத்தில் (மையத்தில்) இருக்கும் வட்டத்திற்கு '''[[நிலநடுவரை]]''' (earth’s equator) என்று பெயர். இதையே எல்லா திசைகளிலும் நீட்டி வானக் கோளத்தை தொடவைத்தால், அந்த வட்டம் '''வான நடுவரை'''யாகும் (celestial equator).
 
கோளத்தின்மேல், கோளமையத்தை மையமாகக் கொண்டிருக்கும் வட்டம் '''பெருவட்டம்''' எனப்படும். உச்சிவட்டங்கள் யாவும், மற்றும் நிலநடுவரையும், பெருவட்டங்கள். நிலநடுவரையைத் தவிர மற்ற அகலாங்கு இணைவட்டங்கள் எதுவும் பெருவட்டங்கள் அல்ல. அவை '''சிறு வட்டங்கள்''' எனப்படும்.
 
[[வட் துருவம்|வட துருவத்தையும்]] (p) தென் துருவத்தையும் (p') சேர்க்கும் அச்சைச் சுற்றித்தான் பூமி 24 மணி நேரத்திற்கொருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. இந்த அச்சை இரண்டு பக்கமும் வானக் கோளத்தைத் தொடும் வரையில் நீட்டினால் PP' என்ற '''வான அச்சு''' கிடைக்கும். P, P' இரண்டும் '''வானதுருவங்கள்'''. அதிருஷ்டவசமாக கற்பனை வான வடதுருவமான P க்கு வெகு அருகாமையில் உண்மையிலேயே ஒரு நட்சத்திரம் உள்ளது. அதனால் அதற்கு '''துருவ நட்சத்திரம் ''' (Pole Star, Polaris) என்றே பெயர்.
 
பூமியிலுள்ள ஒவ்வொரு நோக்குநருக்கும் துருவநட்சத்திரம் நேர் வடக்கில் இருக்கும். நான்கு பக்கமும் நாம் தடங்கல் எதுவுமில்லாமல் பார்க்க முடியும்போது பூமி ஒரு தட்டையான வட்டத் தட்டாகத்தெரியும். இவ்வட்டத் தட்டின் விளிம்புதான் நமக்கு '''தொடுவானம்''' (horizon). இதனுடைய மையம் நோக்குநரின் இடமே. வானத்தில் ஒரு பொருள் தென்பட்டால் அது தொடுவானத்திலிருந்து இருக்கும் தூரத்திற்கு அதனுடைய '''உயரம்''' (altitude) என்று பெயர். வானக்கோளத்தின்மேல் (ஏன், எந்தக்கோளத்தின் மேலும்) இருக்கும் இரண்டு புள்ளிகளின் தூரம் அவை மையத்தில் எதிர்கொள்ளும் கோணமே.
 
'''துருவநட்சத்திரத்தின் உயரம் = நோக்குநர் பூமியில் இருக்கும் இடத்தின் பூகோள அகலாங்கு'''.
 
இது வானியல் கணிதத்தின் முதல் தேற்றம். இதனால் நிலநடுவரையிலிருந்து பார்க்கும் நோக்குநருக்கு துருவ நட்சத்திரம் நேர் வடக்கே தொடுவானத்தில் இருக்கும். நோக்குநர் பூமியில் வடக்கே செல்லச்செல்ல துருவநட்சத்திரத்தின் உயரம் கூடிக்கொண்டே போகவும் செய்யும். பூமியின் வடதுருவத்திலிருந்து பார்க்கும் நோக்குநருக்கு துருவ நட்சத்திரம் தலைக்கு மேலே இருக்கும்.
 
தலைக்கு மேலே வானக்கோளத்திலுள்ள புள்ளிக்கு உச்சி (Zenith) என்று பெயர். ஒரு நோக்குநருக்கு உச்சி, துருவநட்சத்திரம், இரண்டின் வழியாகவும் செல்லும் பெருவட்டத்திற்கு '''வான உச்சி வட்டம் ''' (celestial meridian) அல்லது '''உச்சி வட்டம்''' என்று பெயர்.
வரிசை 35:
 
== குறிப்பிட்ட நட்சத்திரத்தை வானில் மறுமுறை பார்க்கக்கூடிய கால அட்டவணை ==
 
 
{| class="wikitable"
வரி 73 ⟶ 72:
 
* Robin Kerrod. The Star Guide.1993. Prentice Hall General Reference. New York. {{ISBN|0-671-87467-5}}
 
* V.Krishnamurthy. The Clock of the Night Sky.1998. UBS Publishers. New Delhi
* V. Krishnamurthy. Culture, Excitement & Relevance of Mathematics.1990. Wiley Eastern Limited. New Delhi. {{ISBN|81-224-0272-0}}
 
{{வானியல்-குறுங்கட்டுரை}}
* V. Krishnamurthy. Culture, Excitement & Relevance of Mathematics.1990. Wiley Eastern Limited. New Delhi. {{ISBN|81-224-0272-0}}
 
{{[[பகுப்பு:வானியல்-குறுங்கட்டுரை}} ]]
[[பகுப்பு: வானியல்விண்மீன்கள்]]
[[பகுப்பு: விண்மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வானக்கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது