ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''ஆர்.என்.ஏ நகலாக்கம்''' அல்லது '''ஆர்.என்.ஏ படியெடுத்தல்''' (RNA transcription) என்பது [[டி.என்.ஏ]] வில் இருந்து [[ஆர்.என்.ஏ]] வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான [[நொதி]]கள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன <ref>MedicineNet.com. "Transcription definition". http://www.medterms.com/script/main/art.asp?articlekey=5835. Retrieved 11 October 2009</ref>. இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த [[ஆர்.என்.ஏ பாலிமரசு]] (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் [[தயமின்]] என்னும் மூலக்கூறு [[யுரசில்]] (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.
 
நகலாக்கம் என்னும் நிகழ்வு ஒரு [[மரபணு]]வை வெளிப்படுத்தும் முதன்மையான நடப்பு ஆகும்.ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் டி.என்.ஏ க்கள் [[ஆர்.என். ஏ முதிர்வாக்கம்]] என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தப்பட்டு செய்தி ஆர்.என்.ஏ (mRNA) வாக மாற்றப்படும். பின் இவை [[ரைபோசோம்|ரிபோசொமில்]] சேர்க்கப்பட்டு [[புரதம்|புரத]] உற்பத்திக்கு பயன்படுகின்றன. மாற்றாக, நகலாக்கம் செய்யப்பட ஆர்.என்.ஏ-க்கள் டி- ஆர்.என்.ஏ (tRNA) மற்றும் ஆர்.ஆர்.என்.ஏ (rRNA) வாக மாற்றப்படும். இவைகளும் புரத உற்பத்திக்கு இன்றியமையாத ஒன்றாகும். [[குறு ஆர்.என்.ஏ]] களும், ஆர்.என்.ஏ நகலாக்கம் என்னும் நிகழ்வின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஒரு மரபணுவை வெளிப்படுத்தலை ஒருங்கமைவு (regulation) பணிகளில் ஈடுபடுகின்றன. [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரிகளில்]], வெளிப்படும் மரபணு [[ஒற்றை சிசுத்ரோன்]] (Mono Cistronic) ஆகும் (சிசுத்ரோன் என்பது ஒரு மரபணு வெளிப்படும் நிறைவான அமைப்பு ஆகும்). ஆனால் [[நிலைக்கருவிலி|நிலைக்கருவிலிகளில்]] பல சிசுத்ரோன் (poly Cistronic) ஆகும் (ஒரு நிகழ்வில் ஈடுபடும் அனைத்தும் மரபணுக்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன).
வரிசை 7:
ஆர்.என்.எ உற்பத்தியில், ஐந்து நிலைகள் உள்ளன. அவைகள்
 
'''௧.முன்-தொடராக்கம்- Pre-Initiation'''
 
'''௨. தொடராக்கம் - Initiation'''
 
'''௩.தொடரி கடத்தல்- promoter Clearance'''
 
'''௪. விரிவாக்கம் அல்லது நீட்டித்தல்- elongation'''
 
'''௫. நிறைவடைதல் அல்லது முழுமையாதல்- Termination'''
வரிசை 19:
== நிலை மற்றும் நிலை கருவற்ற உயிர்களில் நடைபெறும் ஆர்.என்.எ உற்பத்தியில் உள்ள வேறுபாடுகள் ==
 
நிலை கருவற்ற உயிர்களில், அதனின் பெயரை போல நிலையற்ற உட்கரு உள்ளதால், அதனின்ல் நடைபெறும் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் உயிரணுவின் நுங்கில் (Cytoplasm) இடம்பெறும். மாறாக நிலை கருவுள்ள உயிர்களில், உயிரணுக்கள், மிக தெளிவான முறையில் நுங்கு என்றும், உயிரணு கரு (உட்கரு, nucleus) என்று பிரிக்கப்பட்டு இருக்கும். அதனால் நடைபெறும் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் உயிரணு கருவில் இடம்பெற்று, பின் உயிரணுவின் நுங்குக்கு இடம்பெயரும்.
 
நிலை கருவுள்ள உயிர்களில், இடம்பெறும் நொதிகள், நிலை கருவற்ற உயிர்களில் நடைபெறும் நொதிகளிடம் இருந்து வேறுப்பட்டவை.
வரிசை 30:
 
[[Image:Helicase.jpg|thumb|450px|டி.என்.ஏ தளர் நொதியின் செயலாக்கத்தை இப்படத்தில் காணாலாம். டி.என்.ஏ பாலிமரசு அல்லது ஆர்.என்.ஏ. பாலிமரசு செயலாக்கத்தின் போது, டி.என்.ஏ வின் மேற்பகுதிகள் இறுக்கப்படகூடும்.டி.என்.ஏ தளர் நொதியால் ஏற்படுத்தும், தளர்வால் டி.என்.ஏ தளர்வாக்க்கப்பட்டு டி.என்.ஏ அச்செடுத்தல் அல்லது ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் சீராக நடைபெற உதவுகிறது]]
நிலை கருவுள்ள உயிர்களில் ஆர்.என்.ஏ. பாலிமரசு (RNA polymerase) என்னும் நொதி மூலம் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் அல்லது மரபணு வெளிபடுதல் நடைபெறுகிறது. [[ஆர்.என்.ஏ. பாலிமரசு]], ஒரு மரபணு வெளிபடுவதற்க்கு, டி.என்.எ வரிசையில் உள்ள தக்க தொடரி (core promoter) வரிசையெய் சார்ந்துள்ளது. பொதுவாக தொடரிகள், ஒரு மரபணு வெளிபடுவதற்க்கு இன்றியமையாதது ஆகும். இவைகள் ஒரு [[மரபணு]] வெளிப்படும் தொடக்க புள்ளியில் இருந்து -10 - 35 இணை வரிசைகள் (bp) ,[[மரபணு]]வின் மேல் வரிசைகள் அமைந்து இருக்கும்.[[ஆர்.என்.ஏ. பாலிமரசு]], இத்தொடரி வரிசையில் இணைந்து, [[ஆர்.என்.ஏ]]. பிரித்துருவாக்கத்தை தொடக்கி வைக்கும் தன்மை கொண்டது. தொடரி வரிசைகள் டாட்டா (TATA) என்ற இணை துகளால் உள்ளதால், இவைகளை [[டாட்டா பேழை]] (TATA box) என அழைக்கப்படும். இவ்வரிசைகளில், டாட்டா பிணைவு புரதங்கள் பிணைந்து அல்லது தொடராக்கிகள் இணைந்து ஒரு கலவை உருவாக்கும்.தொடரக்கிகளில் மிக முக்கியமான தொடராக்கி II D (transcription factor II D) ஆகும். இக்கலவைக்கு முன்-தொடராக்க கலவை எனப்பெயர். மேலும் இக்கலவையுடன் இணையும் [[தொடர்ரூக்கிகள்]] (activation factors) அல்லது[[தொடர் மட்டுபடுத்திகள்]] (repressors), ஒரு மரபணு வெளிப்படுத்த வேண்டுமா? இல்லையா ? என்பதை உறுதிப்படுத்தும்.
 
இந்நிகழ்வில் [[டி.என்.எ தளர் நொதி]] (DNA Helicase), இன்றியமையாத பணியெய் செய்கிறது. நன்கு முறுக்கப்பட்ட இரு கயிறை நினைவில் கொள்ளுங்கள்.முறுக்கப்பட்ட இரு கயிறை, ஒரு முனையில் தளத்தும் அல்லது அவிழ்க்கும் பொழுது, அதனின் மேல் பகுதி மிக இறுக்கமாக பிணைவதை கவனியுங்கள். டி.என்.எ என்பது இரு நூல்கள் நன்கு முறுக்கப்பட்ட ஒரு மரபு நூல் ஆகும். ஒரு முனையில் முன்- தொடராக்க கலவை, டி.என்.எ. வை தளர்த்தி, ஆர்.என்.எ பிரித்துருவாக்கத்தை கொண்டு வரும். அவ்வாறு வருகையில், டி.என்.எ வின் மேல்பகுதி சுற்றி நன்கு இறுக்கப்படும். டி.என்.ஏ மறு முனையில் நன்கு சுற்றி இறுக்கப்படும் பொழுது , முன்-தொடராக்க கலவைகளின் நகர்தல், தடுக்கப்பட்டு பிரித்துருவாக்க நிகழ்வு தடைபடக்கூடும். எனவே [[டி.என்.எ தளர் நொதி]] (DNA Helicase), டி.என்.எ வின் மேல் பகுதியில் பிணைந்து ஒரு பிளவை (nick or cleavage) ஏற்படுத்தும். இதனால் டி.என்.எ க்கள் சுற்றி இறுக்கப்படுவது தடுக்கப்படும்.இந்நிகழ்வின் மூலம் ஆர்.என்.ஏ பிரிதுருவாக்கம் சீராக நடைபெறும்.
வரிசை 40:
[[படிமம்:Simple transcription initiation1.svg|thumb|right|350px|மாற்றுருவாக்கத் தொடக்கத்தைக் காட்டும் எளிய படம். ஆர்.என்.ஏ.பி (RNAP) என்று காட்டப்பட்டுள்ளது ஆர்.என்.ஏ பாலிமரேசு (RNA polymerase)]]
 
நிலை கருவற்ற உயிர்களில் நடைபெறும் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம், நிலை கருவுள்ள உயிர்களை போல் அல்லாமால், எளிய முறையில் நடைபெறுகிறது. நிலை கருவற்ற உயிர்களின் ஆர்.என்.ஏ. பாலிமரசு பல உள் அலகுகளை கொண்டு இருக்கும்.இவ்வலகுகளை
 
௧. 2 α
 
௨. 1 β
 
௩. 1 β'
 
௪. 1 ω, என பிரிக்கப்படுகிறது. இந் நொதி, சிக்மா செயலியுடன் (sigma factor) இணைந்து தொடரியுடன் பிணையும் தன்மை கொண்டது. இதன் மூலம், ஆர்.என்.ஏ. பிரித்ருவாக்கத்தின் தொடக்கத்தை துவக்கும்.
 
நிலை கருவுள்ள உயிர்களில், ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தின் தொடக்கம் மிகவும் சிக்கலானது ஆகும். மேலும் ஆர்.என்.ஏ. பாலிமரசு, மூன்று வகையாக பிரிக்கப்பட்டு இருக்கும். அவைகள்,
 
'''ஆர்.என்.ஏ பாலிமரசு I''':
 
இந் நொதி ரிபோசோமல் ஆர்.என்.எ மற்றும் 28S, 18S, 5.8S (S- என்பது ஒரு அலகு) உற்பத்தியில் ஈடுபடுகிறது. இவைகள் ரிபோசோமில் காணப்படும்.
 
'''ஆர்.என்.எ பாலிமரசு II''':
 
செய்தி ஆர்,என் .எ மற்றும் அதற்கு முந்திய ரிபோ கரு அமிலம் உற்ப்பத்தி செய்கிறது. முந்திய ரிபோ கரு அமிலத்தில் மரபணு பகுதி, மரபணு அற்ற என்ற பகுதிகள் மிகுந்து காணப்படும். மரபணு அற்ற பகுதிகள் (introns or non-coding region) ஆர்.என்.எ முதிர்வாக்கம் ( RNA Splicing) என்ற நிகழ்வினால் செய்தி ஆர்.என்.எ வாக (mRNA) மாற்றப்படும். மேலும் இந் நொதி [[குறு ஆர்.என்.ஏ]] (micro RNA) உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. இவைகள் மரபணு வெளிப்படும் அளவுகளை ( gene expression) கட்டுப்படுத்துகின்றன.
 
'''ஆர்.என்.ஏ பாலிமரசு III:'''
 
இந் நொதி டி.ஆர்.என்.ஏ உற்பத்திக்குப் பயன்படுகிறது. ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கதின் தொடக்க நிலைக்கு, ஆர்.என்.ஏ.பாலிமரசுடன் மற்ற செயலிகள் பிணைந்து தொடராக்க கலவையேய் (Initiation complex) உருவாக்கும். பின் இவைகள் தொடரியுடன் இணைந்து ஆர்.என்.ஏ. பிரித்ருவாக்கத்தின் தொடக்கத்தை துவக்கும்.
வரிசை 73:
]]
 
டி.என்.எ வில் சுற்றி இறுக்கப்பட்ட இரு இழைகளில் 3' முனை - 5' முனை இழை மரபணு இழை (Coding strand) எனப்படும். இவற்றின் தொடக்க புள்ளியில், ஆர்.என்.ஏ. 5' முனை பகுதியில் இருந்து ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தை ஆர்.என்.ஏ பாலிமரசு உருவாக்கும். மேலும் ஆர்.என்.ஏ உருவாகும் போது, டி.என்.எ வின் நேர் எதிரான துகள் இணைக்கப்படும்.
 
ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கத்தின் போது, பல ஆர்.என்.ஏ பாலிமரசுகள், ஒரு குறிப்பிட்ட டி.என்.எ வுடன் செயலாக்கம் செய்து பல ஆர்.என்.ஏ க்களையும் உருவாக்கும். மேலும் இச்சுற்று பல தடவை திரும்ப நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
 
விரிவடைதலின் போது, ஆர்.என்.ஏ வில் ஏற்படும் பிழைகளை அல்லது தவறுகளை (Proofreading activity) ஆர்.என்.ஏ பாலிமரசு நொதி மூலம் பழுது பார்க்கப்படும். மேலும் இதற்கென உள்ள [[ஆர்.என்.ஏ தணிக்கை செயலிகள்]] (RNA editing factors) பல உள்ளன.
வரிசை 81:
== முழுமையாதல் ==
 
நிறைரி வரிசை (terminator sequence) அல்லது வரிசைகள் என்பது ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் (RNA transcription) முழுமையாதால் நிலையில் (termination phase) வரும் ஒரு வரிசை ஆகும்.
 
[[Image:Simple transcription termination1.svg|thumb|500px|ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் முழுமையாதலை விளக்கும் படம்]]
 
இதில் முழுமையாதல் நிலையில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய பயன்படும் வரிசைகளே நிறைரி வரிசை எனப்படும். செயற்கையாக [[பக்டிரியல் படிவாக்கம்]] செய்யப்படும் [[பரப்பி]]களில் நோசு (NOS) (பயிரில் மட்டும் ) எனப்படும் மரபணுவின் வரிசைகள் நிறைரியாக பாவிக்கப்படுகின்றன. ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய இவ்வரிசைகள் பயன்படுகின்றன. இந்நிகழ்வு இரு வழிகளில் நடைபெறலாம். இதற்க்கு [[ரோ]] (ஆர்.என்.ஏ எளிகேசு புரதம், Rho-RNA Helicase protein) எனப்படும் மரபணு பயன்படுவதால் , அதனை பொருத்து
 
* ரோ சார்ந்த முழுமையாதல்
 
* ரோ சாரா முழுமையாதல்
 
வரி 106 ⟶ 105:
 
* [[மரபிழை நகர்தல் முறை]] (Nuclear Run-on assay):- இம்முறையின் மூலம் புதியதாக உற்பத்தி செய்யப்பட ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை காணலாம்.
 
* RNase protection assay (RNAP) and நிறமியன் எதிர் வீழ்படிவு முறை (Chromatin immuno precipitation assay, Chip)ChIP-Chip of RNAP: detect active transcription sites.
 
* ஆர்.டி. பி.சி ஆர் (RT-PCR): இதன் மூலம் ஒரு உயிரணுவின் உள்ள ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை காணலாம்.
 
* அளவு காண் பி.சி.ஆர் (qPCR, quantification real-time PCR) மூலம், ஒரு குறிப்பிட்ட ஆர்.என்.ஏ களின் அளவுகளை துல்லியமாக கணிக்கலாம்.
 
* டி.என்.ஏ குறு-வரிசை முறை (DNA Microarrays) : இதன் ஒரு செல்லின் உள்ள அனைத்து ஆர்.என்.ஏ க்களின் அளவுகளை காணலாம்.
 
* [[நார்த்தர்ன் படிவு]]
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது