மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB
வரிசை 1:
[[படிமம்:Shanghaiviewpic1.jpg|thumb|250px|உலகின் மிகப்பெரிய மாநகரமான சாங்காய்.]]
[[படிமம்:Skyscrapers of Shinjuku 2009 January.jpg|thumb|right|250px|உலகின் மிகப்பெரிய மொட்ரோபோலீசான டோக்கியோ]]
'''மாநகரம்''' என்பது ஒப்பீட்டளவில் பெரிய, நிரந்தரமான [[குடியிருப்பு]] ஆகும்.<ref name="Goodall">Goodall, B. (1987) ''The Penguin Dictionary of Human Geography. London: Penguin.</ref><ref name="Kuper and Kuper">Kuper, A. and Kuper, J., eds (1996) ''The Social Science Encyclopedia''. 2nd edition. London: Routledge.</ref> இதை '''மாநகர்''', '''பெருநகரம்''', '''பெருநகர்''' போன்ற பெயர்களாலும் குறிப்பது உண்டு. பெரிய [[நகரம்|நகரமே]] பொதுவாக '''மாநகரம்''' (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. மாநகரத்தை, நகரத்திலிருந்து வேறுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடு இல்லை. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக [[வரலாறு|வரலாற்று]], [[நிர்வாகம்|நிர்வாக]] மற்றும் [[பண்பாடு|பண்பாட்டுக்]] காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன.
 
எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான [[மசச்சூசெட்சு|மசச்சூசெட்சில்]] உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[கூட்டிணைப்பு விதி]]கள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலும்]], சில [[பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளிலும் மாநகரம் என்பது [[அரச பட்டயம்|அரச பட்டயத்துடன்]] கூடிய ஒரு குடியிருப்பு ஆகும்.<ref name="Goodall"/> முற்காலத்தில் [[ஐரோப்பா]]வில் [[பேராலயம்]] ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது.
 
மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன. மாநகரங்கள் இன்னொரு நகரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்தால் அந்நகரங்களை உள்ளடக்கிய பகுதி [[நகரக்கூட்டம்]] (conurbation) எனப்படும்.
வரிசை 11:
[[படிமம்:ChacaoAltamiraView2004-8.jpg|thumb|250px|[[கராகாசு]], [[வெனசுவேலா]]]]
[[படிமம்:Tour Eiffel, École militaire, Champ-de-Mars, Palais de Chaillot, La Défense - 01.jpg|thumb|250px|[[பாரிசு]], [[பிரான்சு]]]]
முதல் மாநகரங்கள் தோன்றியமைக்கான நிலைமைகளை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. மாநகரங்கள் தோன்றியமைக்கான முன்நிபந்தனைகள், இவ்வுருவாக்கத்துக்கு உந்து விசையாக இருந்திருக்கக்கூடிய அடிப்படையான பொறிமுறைகள் என்பன குறித்துப் பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமக்குச் சரியெனத் தோன்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
 
=== கோட்பாடுகள் ===
வரிசை 23:
 
== உருவானதற்கான காரணங்கள் ==
மக்கள் ஏன் தொடக்கத்தில் ஒன்றாக ஓரிடத்தில் சேர்ந்து அடர்த்தியாக வாழத் தலைப்பட்டனர் என்பதற்கு, கோட்பாட்டாளர்கள் பலவகையான காரணங்களை முன்வைத்துள்ளனர். [[பிரெண்டன் ஓ'பிளகேர்ட்டி]] என்பவர் தான் எழுதிய ''நகரப் பொருளியல்'' ''(City Economics)'' என்னும் நூலில், "அவற்றினது சாதகத் தன்மைகள், பாதகத் தன்மைகளைவிடக் கூடுதலாக இருந்தால் மட்டுமே, பல ஆயிரம் ஆண்டுகள் இருந்ததைப்போல, நகரங்கள் நிலைத்திருக்கும்" என்றார்<ref>O'Flaherty 2005</ref>. ஓ'பிளகேர்ட்டி, கவரத்தக்க இரண்டு சாதக நிலைமைகளை எடுத்துக் காட்டுகிறார். ஒன்று, economies of scale மற்றது, [[உயரும் விகித அளவு விளைவு]] (increasing returns to scale). இக்கருத்துருக்கள் பொதுவாக நிறுவனங்களுடன் தொடர்புள்ளவை. எனினும், மிக அடிப்படையான பொருளாதார முறைமைகளில் கூட இவற்றின் பயன்பாட்டைக் காணலாம். எல்லா உள்ளீடுகளையும் இரண்டு மடங்காகக் கூட்டும்போது, விளைவு இரண்டு மடங்குக்கும் மேலாகக் கூடுமானால் அங்கே "உயரும் விகித அளவு விளைவு ஏற்படுவதாகக் கூறலாம். அதே வேளை விளைவு இரண்டு மடங்காகும்போது செலவு இரண்டு மடங்கிலும் குறைவாக இருக்குமானால் அந்நடவடிக்கை economies of scale ஐக் கொண்டிருக்கிறது எனக் கூறமுடியும்<ref>O'Flaherty 2005, pp. 572–573</ref>. இந்தக் கருத்துருக்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருவதற்காக, ஓ'பிளகேர்ட்டி, நகரங்கள் உருவானதற்கான மிகப் பழைய காரணங்களுள் ஒன்றான "பாதுகாப்பு" என்பதைப் பயன்படுத்துகிறார். இந்த எடுத்துக்காட்டில், பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுவும் எதுவும் (எகா. மதில் சுவர்) உள்ளீடு ஆகும். பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியும், அங்கேயுள்ள பெறுமதியானவை அனைத்தும் ஒருங்கே "விளைவு" என்பதற்குள் அடங்கும். பாதுகாக்கப்பட வேண்டிய நிலப்பகுதி சதுரமானது என்றும், அதிலுள்ள ஒவ்வொரு எக்டெயர் நிலமும் ஒரேயளவு பாதுகாப்புப் பெறுமானம் கொண்டது என்றும் எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பின் சாதக விளைவு பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியின் பரப்பளவுக்கு [[விகித சமன்|விகித சமனாக]] இருக்கும்.
 
 
எனவே, இதைப் பின்வருமாறு குறிக்கலாம்:
வரி 38 ⟶ 37:
:(3) '''<math>O = I^2/16</math>'''. சமன்பாடு (1) ல் '''<math>s</math>''' க்கான பெறுமதியைக் கண்டு அதைச் சமன்பாடு (2)ல் பதிலீடு செய்வதன் மூலம் ஊள்ளீடுகளின் சார்பில் விளைவின் பெறுமதி கிடைத்தது. இதன்படி உள்ளீடு இரண்டு மடங்காகும்போது விளைவு 4 மடங்காக உயர்வதைக் காணலாம்.
 
அத்துடன் economies of scale உம் இதில் காணப்படுகிறது. இதனால் நகரங்கள் பாதுகாப்பில் செலவுகளைக் குறைக்கின்றது. எனவே மக்கள் தம்மையும், தமது செல்வத்தையும் சூறையாடும் [[காட்டுமிராண்டி]]ப் படைகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான தேவை, நகரங்கள் உருவானதற்கான ஒரு காரணம் எனலாம்.
 
அத்துடன் economies of scale உம் இதில் காணப்படுகிறது. இதனால் நகரங்கள் பாதுகாப்பில் செலவுகளைக் குறைக்கின்றது. எனவே மக்கள் தம்மையும், தமது செல்வத்தையும் சூறையாடும் [[காட்டுமிராண்டி]]ப் படைகளிடமிருந்து காத்துக் கொள்வதற்கான தேவை, நகரங்கள் உருவானதற்கான ஒரு காரணம் எனலாம்.
 
 
பொருட்கள், மக்கள், எண்ணக்கருக்கள் போன்றவற்றுக்கான போக்குவரத்துச் செலவு குறைவது நகர உருவாக்கத்துக்கான காரணம் என்பதை [[எட்வார்ட் கிளீசர்]] என்பாரும் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். தூரம் குறைவதன் நன்மைகள் பற்றி விளக்கிய கிளீசர், மாநகரின் அளவு இரட்டிக்கும்போது, தொழிலாளர் 10% கூடுதலான [[கூலி]]யைப் பெறுகின்றனர் என்கிறார். பெரிய மாநகரங்கள் ஒரே [[உற்பத்தித் திறன்|உற்பத்தித் திறனுக்கு]] சிறிய நகரங்களிலும் கூடுதலான கூலி கொடுப்பதில்லை எனக் கூறும் கிளீசர், தொழிலாளர்கள் பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது அவர்களுடைய செயற்றிறன் அதிகமாவதாலேயே அவர்களது [[வருமானம்]] கூடுகிறது என விளக்குகிறார். எனினும், இரண்டு மடங்கு பெரிய நகரங்களுக்கு இடம்பெயரும்போது கிடைக்கும் 10% கூலி அதிகரிப்பு தொழிலாளர்களுக்கு அதிக பயனைக் கொடுப்பதில்லை. உயர்ந்த வாழ்க்கைச் செலவு கூடுதல் வருமானத்தை அவர்களிடன் இருந்து எடுத்துக்கொள்கிறது. ஆனாலும், நகரத்தில் வசிப்பதால் வேறு பயன்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன.
 
== புவியியல் ==
நகரங்கள் எவ்வாறான வடிவங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கேள்விக்குப் பதிலாக நகரத் திட்டமிடலில் பல்வேறு வகையான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. பொதுவாகப் பரவலாக அறியப்பட்ட வடிவங்களுள் ஒன்றாக "வலையமைப்புத் தளக்கோலம் கொண்ட நகரங்கள் விளங்குகின்றன. இத்தகைய நகருக்கான தளக் கோலம் சீனாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பயன்பட்டு வருகின்றது. பேரரசர் அலெக்சாண்டரின் நகரத் திட்டமிடலாளரும், இவ்வாறான தளக்கோலத்தைத் தனியாக உருவாக்கினார். இவரது வடிவமைப்பை, உரோமர் விரும்பி ஏற்றுக்கொண்டனர். அயர்லாந்தின் திட்டமிடப்பட்டு 1613 இல் வேலைகள் துவக்கப்பட்ட முதல் நகரம் டெர்ரி ஆகும், இந்த நகர் கட்டுமானப் பணிகளில் சுவர்களை கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. நகரத்தைச் சூழ்ந்த இந்தச் சுவர்களில் நான்கு வாயில்களைக் கொண்டதாக மைய வைரம் போன்ற பாதுகாப்புமிக்க ஒரு நல்ல வடிவமைப்பு என்று கருதப்பட்டது. இவ்வடிவமைப்புகொண்ட கட்டடங்கள் பிரித்தானிய வட அமெரிக்காவின் காலனிகளில் பரவலாக பரவியது.
 
பண்டைய கிரேக்கர்கள் பெரும்பாலும் மத்தியதரைக் கடல் பகுதியில் தங்கள் குடியிருப்பு கட்டங்களை திட்டமிட்ட வகையில் அமைத்தனர். இதற்க்குஇதற்கு பிரையன் நகரமானது ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நகரம் இன்றைய திட்டமிடப்பட்ட நகரங்களைவிட பல வகைகளில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது, பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முற்காலத்திய, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்தைச்]] சேர்ந்தவர்கள் [[மொகெஞ்சதாரோ]] போன்ற நகர கட்டுமானங்களைப் பயன்படுத்தி வழ்ந்துவந்தனர். மத்திய காலங்களில் சிறந்த திட்டமிடலோடு கட்டப்பட்ட நகரங்கள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. பிரான்சின் தெற்கே பல்வேறு ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட நகரங்களும், பழைய டச்சு மற்றும் பிளெமெய்ஷு நகரங்களின் நகர விரிவாக்கங்களும் இவற்றிர்க்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
 
19 ஆம் நூற்றாண்டில் திட்டமிடப்பட்ட நகரங்கள், குறிப்பாக [[பாரிஸ்]] நகரத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இவ்வாறான திட்டங்கள் பிரபலமாக உருவாயின. இவற்றின் காரணமாக பழைய பாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் தனது புதிய நிலப்பகுதிகள் மற்றும் நகரங்களில் திட்டமிடப்பட்ட கட்ட அமைப்புகளை கட்டாயப்படுத்தியது, அமெரிக்காவின் மேற்க்குப்பகுதிகளான [[சால்ட் லேக் நகரம்]] மற்றும் [[சான் பிரான்சிஸ்கோ]] போன்ற இடங்களில் இவ்வாறு கட்டமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டன.
 
மற்ற வடிவங்களில் ஆரக்கால் கட்டமைப்பை உள்ளடக்கியிருக்கலாம், இதில் பிரதான சாலைகள் ஆரக்கால் போன்று மையப் புள்ளியில் இணைகின்றன. இது பெரும்பாலும் ஒரு வரலாற்று வடிவம் ஆகும், நகரம் வளரவளர நகர கட்டுமானம் நீண்ட காலமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்ததில் விளைவு ஆகும். அண்மைக்கால வரலாற்றில், இத்தகைய வடிவங்கள் நகரத்தின் புறநகர்பகுதிகளை சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின. பல டச்சு நகரங்கள் இவ்வாறான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன: செறிவான சாலைகளால் சூழப்பட்ட ஒரு மையச் சதுரம். அதிலிருந்து நகரத்தின் ஒவ்வொரு விரிவாக்கமும் ஒரு புதிய வட்டமாக (நகர சுவர்கள் கொண்ட சாலை) குறிக்கப்படும். ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம் மற்றும் [[மாஸ்கோ]] போன்ற நகரங்களில், இந்த மாதிரியான இன்னும் தெளிவாக தெரியும் எடுத்துக்காட்டுகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது