ஆசனிக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-syn +செயற்கை)
No edit summary
வரிசை 59:
 
சாம்பல் ஆர்சனிக்கு ஒரு குறை உலோகம் என்றாலும் அதை படிக உருவமற்றதாக்கினால் 1.2–1.4 ஏலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் கொண்ட குறைக்கடத்தியாக மாற்றலாம்<ref>{{cite book|author=Madelung, Otfried |title=Semiconductors: data handbook|url=https://books.google.com/books?id=v_8sMfNAcA4C&pg=PA410|date=2004|publisher=Birkhäuser|isbn=978-3-540-40488-0|pages=410–}}</ref>. சாம்பல் ஆர்சனிக் மிகவும் நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு வடிவமாகும். மஞ்சள் ஆர்சனிக் மென்மையானதும் மெழுகுத்தன்மை கொண்டதுமாகும். டெட்ராபாசுப்பரசை ஒத்த வடிவமைப்பில் இது காணப்படுகிறது. இரண்டிலும் நான்கு அணுக்கள் ஒரு நான்முகி அமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணுவும் ஒற்றை பிணைப்பு மூலம் மற்ற மூன்று அணுக்களில் ஒவ்வொன்றுடனும் பிணைக்கப்பட்டுள்ளன. நிலைப்புத்தன்மை அற்ற புறவேற்றுமை வடிவ ஆர்சனிக்கு எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், அடர்த்தி குறைந்தும் அதிக நச்சுத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஆர்சனிக் ஆவியை குளிர்விப்பதன் மூலம் மஞ்சள் ஆர்சனிக்கை தயாரிக்க இயலும். இதனுடைய அடர்த்தி 1.97 கிராம்/செ.மீ3 ஆகும். ஒளியின் மூலம் இதை சாம்பல் ஆர்சனிக்காக மாற்ற இயலும். கருப்பு பாசுபரசின் வடிவத்தையே கருப்பு ஆர்சனிக்கும் பெற்றுள்ளது ஆர்சனிக்கு ஆவியை 100-220° செல்சியசு வெப்பநிலைக்கு குளிர்வித்தால் கருப்பு ஆர்சனிக்கு கிடைக்கிறது. இது கண்ணாடியைப் போன்று பளபளப்பாகவும் நொறுங்கக் கூடியதாகவும் உள்ளது. மின்சாரத்தை குறைவாகவே கடத்தும்<ref>[http://www.chemicool.com/elements/arsenic.html Arsenic Element Facts]. chemicool.com</ref>.
 
== ஐசோடோப்புகள் ==
 
இயற்கையில் ஆர்சனிக் நிலைப்புத்தன்மை கொண்ட <sup>75</sup>As ஐசோடோப்பாலான ஒற்றையைசோடோப்புத் தனிமாக தோன்றுகிறது<ref name="NUBASE">{{NUBASE 2003}}</ref>. 2003 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி அணுநிறை அளவு 60 முதல் 92 முடிய உள்ள ஏறத்தாழ 33 கதிரியக்க ஐசோடோப்புகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டன. இவற்றுள் <sup>73</sup>As என்ற ஐசோடோப்பு 80.30&nbsp;நாள்கள் என்ற அரை வாழ்வுக் காலத்தைக் கொண்டு அதிக நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. <sup>71</sup>As (''t''<sub>1/2</sub>=65.30 மணி நேரம், <sup>72</sup>As (''t''<sub>1/2</sub>=26.0 மணி நேரம், <sup>74</sup>As (''t''<sub>1/2</sub>=17.77 நாள்கள், <sup>76</sup>As (''t''<sub>1/2</sub>=1.0942 நாள்கள்), <sup>77</sup>As (''t''<sub>1/2</sub>=38.83 மணி நேரம்) என்ற அரை வாழ்வுக் காலத்தைக் கொண்ட இவற்றைத் தவிர மற்ற ஐசோடோப்புகள் அனைத்தும் ஒரு நாளைக்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டவையாகும்.
 
 
நிலைப்புத்தன்மை மிகுந்த <sup>75</sup>As ஐசோடோப்பைக்காட்டிலும் இலேசான ஐசோடோப்புகள் பீட்டா கதிர்களை உமிழ்ந்து பீட்டா சிதைவும், இதைவிட கனமான ஐசோடோப்புகள் சில விதிவிலக்குகளுடன் கூடிய பீட்டா சிதைவும் அடைகின்றன. இதே போல குறைந்தது 10 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அணுக்கரு மாற்றியன்கள் 66 முதல் 84 வரையிலான அணுநிறை அளவு வீச்சுடன் விவரிக்கப்படுகின்றன. <sup>68m</sup>As என்ற மாற்றியன் 111&nbsp;நொடிகள் என்ற அரைவாழ்வுக்காலத்துடன் அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது<ref name="NUBASE" />
 
=== வேதியியல் ===
 
ஆர்சனிக் அதன் அமைப்புக்கு இணையான தனிமமான பாசுபரசை ஒத்த மின்னெதிர்ப்பு சக்தியையும் மற்றும் அயனியாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. மேலும். இது பெரும்பாலான அலோகங்களுடன் எளிதாகச் சேர்ந்து சகப்பிணைப்பு மூலக்கூறுகளை உருவாக்குகிறது. வறண்ட காற்றில் நிலைப்புத் தன்மையுடன் இருந்தாலும் ஈரப்பதத்தில் வெளிப்படுத்தும்போது ஆர்சனிக் ஒரு தங்க-வெண்கல நிறத்திற்கு மாறுகிறது. இறுதியில் கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக மாறுகிறது<ref name=Greenwood552>Greenwood and Earnshaw, pp. 552–4</ref>. காற்றில் ஆர்சனிக்கை வெப்பப்படுத்தும்போது ஆக்சினேற்றமடைந்து ஆர்சனிக் டிரையாக்சைடாக மாறுகிறது. இவ்வினையிலிருந்து வெளியாகும் புகை பூண்டு போன்ற நெடியை வெளிப்படுத்துகிறது. ஆர்சனோபைரைட் போன்ற ஆர்சனைடு கனிமங்களை வலிமையாக அடிக்கும்போதும் இத்தகைய நெடி உண்டாகிறது.
 
இது ஆக்சிசனில் எரிந்து ஆர்சனிக் டிரையாக்சைடு மற்றும் ஆர்சனிக் பென்டாக்சைடு போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. இவை மிகவும் பிரபலமாக அறியப்படும் பாசுபரசு சேர்மங்களைப் போலவே பண்புகளை வெளிப்படுத்துகின்றன. புளோனுடன் சேர்ந்து ஆர்சனிக் பெண்டா புளோரைடையும் கொடுக்கிறது<ref name=Greenwood552/>. வளிமண்டல அழுத்தத்தில் பாசுபரசு மற்றும் அதன் சேர்மங்கள் சிலவற்றை சூடுபடுத்தினால் திரவநிலைக்குச் செல்லாமல் {{convert|887|K|செல்சியசு}} வெப்பநிலையில் <ref name="Gokcen1989" /> நேரடியாக பதங்கமாகின்றன. முந்நிலைப் புள்ளியான 820 செல்சியசு வெப்பநிலை மற்றும் 3.63 மெகா பாசுகலில் ஆர்சனிக்கு தனிமம் திட, திரவ, வாயு மூன்று நிலைகளிலும் காணப்படுகிறது<ref name="Holl" /><ref name="Gokcen1989" />. அடர் நைட்ரிக் அமிலத்துடன் ஆர்சனிக்கு சேர்ந்து ஆர்சனிக் அமிலத்தைக் கொடுக்கிறது. நீர்த்த நைட்ரிக் அமிலத்துடன் சேரும்போது ஆர்சனசு அமிலமும், அடர் கந்தக அமிலத்துடன் வினைப்படும்போது ஆர்சனிக்கு டிரையாக்சைடும் உருவாகின்றன. நீர், காரங்கள் அல்லது ஆக்சிசனேற்றிகள் அல்லாத அமிலங்களுடன் ஆர்சனிக்கு வினைபுரிவதில்லை<ref>{{cite EB1911|wstitle=Arsenic |volume=2 |pages=651–654}}</ref>. ஆர்சனிக் உலோகங்களுடன் வினைபுரிந்து [[ஆர்சனைடு]]களை உருவாக்குகிறது. இருப்பினும் இவை அயனச் சேர்மங்கள் அல்ல என்றாலும் As<sup>3−</sup> அயனிகளைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய எதிர்மின் அயனிகள் உருவாக்கம் நிகழும்போது உயர் வெப்பம் உட்கொள்ளப்படுகிறது. குழு 1 ஆர்சனைடுகள் கூட உலோகமிடை சேர்மங்கள் போன்ற பண்புகளுடன் காணப்படுகின்றன<ref name=Greenwood552/>3டி இடைநிலை தனிமங்கள் செருமேனியம், செலீனியம், புரோமின் ஆகியனவற்றை போல +5 ஆக்சிசனேற்ற நிலையில் அதன் செங்குத்து வரிசை தனிமங்களான பாசுபரசு மற்றும் ஆண்டிமனியைக்காட்டிலும் ஆர்சனிக்கு மிகக்குறைவான நிலைப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறது. எனவே ஆர்சனிக் பெண்டாக்சைடும் ஆர்சனிக்கு ஆக்சைடும் சிறந்த ஆக்சிசனேற்றிகளாகச் செயல்படுகின்றன<ref name=Greenwood552/>.
 
== சேர்மங்கள் ==
 
ஆர்சனிக் சேர்மங்கள் சில பண்புகளில் தனிமவரிசை அட்டவணையில் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாசுபரசை ஒத்திருக்கின்றன. ஆர்சனிக்கு பொதுவாக -3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆர்சினைடுகளாக உள்ளது. இவை உலோகங்களிடை கலப்புலோகங்கள் போன்ற பண்புகள் கொண்டுள்ளன. +3 ஆக்சிசனேற்ற நிலையில் ஆர்சினைட்டுகளாகவும் +5 ஆக்சிசனேற்ற நிலையில் ஆர்சனேட்டுகளாகவும் கரிம ஆர்சனிக்கு சேர்மங்களாகவும் ஆர்சனிக்கு காணப்படுகிறது. சிகட்டெரூடைட்டு கனிமத்தின் As{{su|b=4|p=3−}} சதுர அயனிகளில் ஆர்சனிக்கு தனக்குள்ளேயே பிணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறது<ref>{{cite book | doi = 10.1016/S0080-8784(01)80151-4 | title = Recent Trends in Thermoelectric Materials Research I: Skutterudites: Prospective novel thermoelectrics | date = 2001 | last1 = Uher | first1 = Ctirad | isbn = 978-0-12-752178-7 | volume = 69 | pages = 139–253| series = Semiconductors and Semimetals | chapter = Chapter 5 Skutterudites: Prospective novel thermoelectrics }}</ref> +3 ஆக்சிசனேற்ற நிலையில் ஆர்சனிக்கு குறிப்பாக கூர்நுனிக் கோபுர அமைப்பை ஏற்றுகொள்கிறது<ref name="Norman" /><!--page 30-->
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆசனிக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது