சங்கர நேத்ராலயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

16:43, 2 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு லாபம் ஈட்டா பொதுசேவை செய்யும் தொண்டு நிறுவனம் சங்கர நேத்ராலயாஆகும். கண் மருத்துவத்துறையில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் முதலாவது பெயரான சங்கரா என்பது காஞ்சி காமகோடி பீடத்தை சார்ந்த ஆதிசங்கராச்சாரியார் அவர்களையும் நேத்ராலயா என்பது கண்களுக்கான ஆலயம் என்பதையும் குறிப்பதாகும். இந்தியா முழுவதிலுமிருந்தும் மற்றும் சர்வதேச அளவிலும் பல கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் இந்த நிறுவனம் ஆயிரம் ஊழியர்களுடன் ஒரு நாளைக்கு 1200 நோயாளிகளுக்கு சிகிச்சையும் நூறு கண் அறுவை சிகிச்சைகளும் தினந்தோறும் அளித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் வருட வருமானம் கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

சங்கர நேத்ராலயா
வகை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
Eye கண்களுக்கான சிறப்பு மருத்துவமனை

வரலாறு

1976ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் அப்போதைய மடாதிபதியாக இருந்த ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மருத்துவர்களுக்கான உள்ளரங்கு கூட்டம் ஓன்றில் பேசும்போது தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதை குறிப்பிட்டார். அதை கருத்தில் கொண்டு மருத்துவர் செங்கமேடு ஸ்ரீனிவாச பத்ரிநாத் (எஸ் எஸ் பத்ரிநாத்) அவர்கள், தன்னைப் போன்று தொண்டுள்ளம் கொண்ட மருத்துவர்களுடன் இணைந்து கண் மருத்துவத்திற்கான ஒரு பொதுச் சேவை நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சி விஜயா மருத்துவமனையில் மருத்துவர் அகர்வால் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கண்களுக்கான கோவில் என்று பொருள்படும் வகையில் இந்த மருத்துவமனை சங்கர நேத்ராலயா என்ற பெயரில் இயக்கத்திற்கு வந்தது.

ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை கண் மருத்துவ சிகிச்சையில் வெற்றிகரமாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் இந்த நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஐந்து இடங்களிலும், கொல்கத்தா நகரத்திலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகரத்திலும் கிளைகளை அமைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டு மக்களில் மருத்துவ சேவையை பூர்த்தி செய்து வருகிறது.

சங்கர நேத்ராலயா நிறுவனம் மருத்துவ சேவை மட்டுமல்லாது பல்வேறு மருத்துவ பிரிவுகளில் பாடங்களையும் கற்பித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றவர்களை உருவாக்க சங்கர நேத்ராலயா கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறது அதன் மூலம் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் கண் மருத்துவ பிரிவில் நடத்திவருகிறது. மேலும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாநிலத்தில் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்திலும் இந்நிறுவனத்தின் சார்பில் கண் மருத்துவ படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

சங்கர நேத்ராலயா மருத்துவமனை கண் மருத்துவ சேவைக்காக பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களும் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு சங்கர நேத்ராலயா எகனாமிக் டைம்ஸ் குழுமத்தால் வழங்கப்பட்ட பெருநிறுவன குடிமக்கள் விருது அதன் சிறப்பான நிர்வாக நடவடிக்கைக்காக பெற்றது.[1] இந்திய வாராந்திர நாளிதழான அவுட்லுக் 2002ம் ஆண்டு நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த கண் மருத்துவமனையாக சங்கர நேத்ராலயா தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் த வீக் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அளவில் சிறந்த கண் மருத்துவமனை ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு நாஸ்காம் நிறுவனத்தால் சுகாதார நிறுவனங்களில் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் முதன்மையான நிறுவனமாக விருது வழங்கப்பட்டது.

  1. Dr S S Badrinath, Chairman Emeritus, Sankara Nethralaya has won the Economic Times Award for Corporate Excellence 2006-07
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_நேத்ராலயா&oldid=2886615" இலிருந்து மீள்விக்கப்பட்டது