சலில் சௌதுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு மொழிதெலுங்கு,)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
வரிசை 44:
இன்றைய இந்திய திரையிசையின் அனைத்து பாணிகளிலும் ஆழமாக ஊடுருவிய தனித்துவம் மிக்க இசை மரபுக்கு சொந்தக்காரர் சலீல் சௌதுரி. மொழியின் எல்லைகளைக் கடந்து நிலவியல் தனித் தன்மைகளைக் கடந்து [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] பல்வேறு உணர்ச்சிகரங்களின் தருணங்களை இசையில் பதிவுசெய்தது அவரது பாணி. [[லதா மங்கேஷ்கர்]] முதல் [[ராஜ் கபூர்]] வரை திரையுலகின் முதல்வர்கள் அவரை ' எக்காலத்திற்கும் உரிய திரையிசை மேதை ' என்று புகழ்ந்தனர். இசையமைப்பாளர்களான [[சங்கர் ஜெய்கிஷன்]] முதல் [[இஸ்மாயில் தர்பர்]] வரையிலானவர்கள் அம்மேதையின் இசையில் உணர்ச்சிகளுடன் கருவிகளின் இசையை இணைக்கும் அமைப்புமுறையை கண்டு பிரமித்துப் பாராட்டினர். ஆகவேதான் சலீல் சௌதுரி வங்க இசையில் தாகூருக்குப் பின்பு உருவான மிகப்பெரிய அலையை உருவாக்கியவர் என்று கருதப்படுகிறார்.
 
சலீல் சௌதுரி இசையமைக்கத் தொடங்கியது 60 ஆண்டுகளுக்கு முன்பு. [[வங்காளம்]], [[இந்தி]], [[மலையாளம்]],. [[தமிழ்]], [[கன்னடம்]], [[தெலுங்கு மொழிதெலுங்குமொழி|தெலுங்கு]], [[மராத்தி]], [[குஜராத்தி]], [[ஒரியா]], [[அஸாமியம்]] என ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் சலீல் சௌதுரி இசையமைத்துள்ளார். அவர் அடிபப்டையில் ஒரு [[கவிஞர்]], [[பாடலாசிரியர்]], [[எழுத்தாளர்]], [[நாடகாசிரியர்]] அத்துடன் வங்கத்தின் முக்கியமான அரசியல் செயல்வீரரும்கூட . மார்க்ஸியராக இருந்த சலீல் சௌதுரி அரசியல் போராட்டத்தில் [[சிறைவாசம்|சிறைவாசமும்]] அனுபவித்திருக்கிறார்.
 
== கேரளாவில் ==
"https://ta.wikipedia.org/wiki/சலில்_சௌதுரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது