ஜேன் ஆஸ்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பிரிட்டன் - link(s) தொடுப்புகள் ஐக்கிய இராச்சியம் உக்கு மாற்றப்பட்டன)
}}
 
'''ஜேன் ஆஸ்டின்''' (''Jane Austen'', டிசம்பர் 16, [[1775]] – ஜூலை 18, [[1817]]) ஒரு [[பிரிட்டன்ஐக்கிய இராச்சியம்|பிரிட்டானியபிரிட்டானியப்]]ப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய [[நேசப் புனைவு]]கள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன.
 
[[18ம் நூற்றாண்டு|18ம் நூற்றாண்டின்]] இறுதியில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கீழ் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஆஸ்டின். தன் தந்தை மற்றும் சகோதரர்கள் மூலம் கல்வி கற்றார். அவருடைய எழுத்துப்பணியை அவரது குடும்பத்தார் பெரிதும் ஊக்குவித்தனர். இளம் வயதில் பலதரப்பட்ட இலக்கிய பாணிகளில் பரிசோதனையாக எழுதிப்பார்த்த ஆஸ்டின், பின் தனக்கே ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். 17ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த ”உணர்ச்சிகரமான புதின”ப் பாணியை நிராகரித்த ஆஸ்டினது படைப்புகளில் யதார்த்ததைமும், நகைச்சுவையும் இழைந்தோடுகின்றன. அவரது புதினங்கள் [[18ம் நூற்றாண்டு]] ஆங்கிலப் பெண்கள் சமூகத்தில் முன்னேறவும் பொருளதார ஆதாயத்திற்காகவும் ஆண்களையும், திருமணத்தையும் சார்ந்திருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. 1811 முதல் 1816 வரை வெளியான ''[[சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்)|சென்ஸ் அண்ட் சென்சிபிளிட்டி]]'', ''பிரைடு அண்ட் பிரிஜுடைஸ்'', ''மான்ஸ்ஃபீல்டு பார்க்'', ''எம்மா'' ஆகிய நான்கு புதினங்கள் ஆஸ்டினுக்கு சிறிதளவு பேரையும் புகழையும் பெற்றுத் தந்தன. அவர் மறைவுக்குப் பின் ''நார்த்தாங்கர் ஆப்பி'', ''பெர்சுவேஷன்'' என்று மேலுமிரு புதினங்களும் வெளியாகின. ஆஸ்டின் வாழ்ந்த காலத்தில் அவர் இலக்கிய உலகில் பெரிதாக அறியப்படவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப்பின் 1869ல் வெளியான ''எ மெமயர் ஆஃப் ஜேன் ஆஸ்டின்'' என்ற அவரது வாழ்க்கை வரலாறு சமூகத்தின் பார்வை அவர் படைப்புகளின் மீது திரும்பக் காரணமானது. அதன் பின்னர் அவரது புகழ் பரவி, அவரது புதினங்களுக்கு பெரும் வரவேற்பு உருவானது. தற்போது ஆஸ்டின் தலை சிறந்த ஆங்கில எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆஸ்டினது படைப்புகள் பலமுறை தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன; உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
1,74,019

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975655" இருந்து மீள்விக்கப்பட்டது