கைலாசகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பூங்கா
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kailasagiri" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:38, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

கைலாசகிரி என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகரில் மலைமீது அமைந்த பூங்காவாகும்.[3] இந்த பூங்காவை விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (வி.எம்.ஆர்.டி.ஏ) உருவாக்கியது. இப்பூங்காவானது 380 ஏக்கர்கள் (150 ha) பரப்பில் தாவரங்கள் மற்றும் வெப்பமண்டல மரங்களால் நிறைந்து காணப்படுகிறது. இந்த மலையானது 173 மீட்டர்கள் (568 அடி), உயரமாகவும், விசாகப்பட்டினம் நகரத்தைக் கவனிக்கச் சிறந்த இடமாகவும் உள்ளது.

Kailasagiri
Shiva-Parvati Statue at Kailasagiri
அமைவிடம்Visakhapatnam, Andhra Pradesh, India
ஆள்கூறு17°44′56″N 83°20′32″E / 17.748992°N 83.342236°E / 17.748992; 83.342236 (Kailasagiri)
பரப்பு380 acres
Elevation173 மீட்டர்கள் (568 அடி)[1]
Operated byVisakhapatnam Metropolitan Region Development Authority
வருகையாளர்3500-3600 daily[2]
Websitevmrda.gov.in/kailashgiri.aspx

ஆந்திர அரசு 2003 ஆம் ஆண்டில் கைலாசகிரியை "சிறந்த சுற்றுலா இடமாக" அறிவித்து பரிசு வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக முப்பதாயிரம் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவிற்கு வருகை தருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, வி.எம்.ஆர்.டி.ஏ நிறுவனம் இந்த மலையை நெகிழி இல்லாத மண்டலமாக அறிவித்துள்ளது.[3] ஆந்திராவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட கம்பிவட கார் மலையின் உச்சியினை இணைகிறது.[4] விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து கைலாசகிரி 10 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினம் துவாரகா பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

மலைஉச்சியிலிருந்து காட்சிகள்

Visakhapatanam city skyline as seen from Kailasagiri

கேலரி

மேற்கோள்கள்

  1. "Kailasagiri Walkway". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 11 February 2018.
  2. "Kailasagiri Hills reopens to visitors". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 11 February 2018.
  3. 3.0 3.1 "VUDA park". Vizag Urban Development Authority. Archived from the original on 31 May 2014. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
  4. "Rope Way". Visakhapatnam Urban Development Authority. 2010. Archived from the original on 13 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசகிரி&oldid=3045191" இலிருந்து மீள்விக்கப்பட்டது