நகர்ப்புற அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நகரப் புவியியல்
வரிசை 11:
==ஆரைத்துண்டு மாதிரி==
{{main|ஆரைத்துண்டு மாதிரி}}
நகர்ப்புற அமைப்புக் குறித்த இந்த இரண்டாவது கோட்பாட்டு மாதிரி 1939 ஆம் ஆண்டில் பொருளியலாளரான [[ஓமெர் ஓயிட்]] (Homer Hoyt) என்பாரால் முன்வைக்கப்பட்டது. ஆரைத்துண்டு மாதிரி என்னும் இந்த மாதிரி, நகரங்கள் வளைய அமைப்பில் வளர்வதில்லை என்றும், ஆரைத்துண்டு அமைப்பிலேயே வளர்கின்றன என்றும் கூறுகிறது. [[தற்செயல்|தற்செயலாகவோ]], அல்லது [[புவியியல்]], சூழல் காரணங்களாலோ நகரத்தில் சில பகுதிகள் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைகின்றன. இதனால் அக் குறிப்பிட்ட இடங்களில் நிலைகொள்ளும் அந்நடவடிக்கைகள், நகரங்கள் வளரும்போது வெளிப்புறமாக ஒரு ஆரைத்துண்டு வடிவில் வளர்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு குறித்த பகுதியில் உயர் வருவாயுள்ளோரின் குடியிருப்பு அமைந்தால், அது வளரும்போது நகர மையத்துக்கு எதிர்ப்புறமாகவுள்ள வெளி விளிம்பில் இருந்தே விரிவடையும்.
 
ஒரு வகையில் இந்த மாதிரி முன்னர் கூறிய வலய மாதிரி அல்லது ஒருமைய மாதிரியின் திருந்திய வடிவமேயன்றி அடிப்படையான வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஓயிட், புர்கெசு ஆகிய இருவருமே சிக்காகோவின் அமைப்பு தத்தம் மாதிரிகளுக்குப் பொருத்தமாக அமைவதாகக் கூறியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புற_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது