மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை வழங்குகிறது.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மலேசியாவில் உள்ள அனைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:20, 16 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

மலேசியாவில் உள்ள அனைத்துத் தனியார்; வணிக வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள் (நம்பர் பிளேட்டுகள்) காட்டப்பட வேண்டும் என்பது அரசு சட்டமாகும். போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (மலாய்: Jabatan Pengangkutan Jalan Malaysia) வழங்குகிறது.

மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையை, மலேசியாவில் சுருக்கமாக ஜே.பி.ஜே. (JPJ) என்று அழைக்கிறார்கள். மிக அண்மையில் வழங்கப்பட்ட போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை வலைத்தளம் மூலம் சரிபார்க்கலாம். [1]

தற்போது பயன்படுத்தப்படும் வடிவங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;

பதிவெண்களின் வகை தளவமைப்பு
தனியார் மற்றும் வணிக வாகனங்கள் ABC 4567 அல்லது WD 4567 C அல்லது QAA 4567 C அல்லது SAB 4567 C அல்லது KV 4567 B
வாடகை மோட்டார் (Taxi) HAB 4567
இராணுவம் (Military) ZA 4567
தற்காலிகம் (Temporary) A 2341 A (W/TP 2341 for Kuala Lumpur)
தூதரகங்கள் (Diplomatic Corps) 12-34-DC
அரச குடும்பங்கள்; அரசாங்கம் (Royals and government) முழுப் பெயர் (Full title)

வடிவமைப்பு

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது போக்குவரத்துப் பதிவெண்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் 1932-ஆம் ஆண்டு மாற்றம் கண்டது. ஆங்கில எழுத்துருவான தடித்த ஏரியல் (Arial Bold) பயன்படுத்தப் படுகிறது.[2]

தீபகற்ப மலேசியா

தற்போதைய வடிவம்

ALU 1128
தீபகற்ப மலேசியா பதிவெண்கள்
முன்னொட்டு மாநிலம் முன்னொட்டு மாநிலம்
A பேராக் M மலாக்கா
B சிலாங்கூர் N நெகிரி செம்பிலான்
C பகாங் P பினாங்கு
D கிளாந்தான் R பெர்லிஸ்
F புத்ரா ஜெயா[3] T திரங்கானு
J ஜொகூர் V புத்ரா ஜெயா
K கெடா W கோலாலம்பூர்
(முதல் அறிமுகம்)

சான்றுகள்

  1. https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini
  2. "Standardised number plate production coming later this year". 13 January 2016.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; careta என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை