டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன்

டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் (Dimethyldiethoxysilane) என்பது C6H16O2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். பாலிடைமெத்தில்சிலாக்சோன் எனப்படும் சிலிக்கோன் பலபடிகளை உருவாக்கும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது கருதப்படுகிறது.

டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன்
Structural formula of dimethyldiethoxysilane
Ball-and-stick model of the dimethyldiethoxysilane molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன்
முறையான ஐயூபிஏசி பெயர்
டையீத்தாக்சிடைமெத்தில்சிலேன்
இனங்காட்டிகள்
78-62-6 Y
Abbreviations DMDEOS
Beilstein Reference
1736110
ChemSpider 56117 Y
EC number 201-127-6
InChI
  • InChI=1S/C6H16O2Si/c1-5-7-9(3,4)8-6-2/h5-6H2,1-4H3 Y
    Key: YYLGKUPAFFKGRQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H16O2Si/c1-5-7-9(3,4)8-6-2/h5-6H2,1-4H3
    Key: YYLGKUPAFFKGRQ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 62322
வே.ந.வி.ப எண் VV3590000
SMILES
  • O(CC)[Si](OCC)(C)C
  • O(CC)[Si](OCC)(C)C
UN number 2380
பண்புகள்
C6H16O2Si
வாய்ப்பாட்டு எடை 148.28 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.865 கி செ.மீ−3
உருகுநிலை −87 °C (−125 °F; 186 K)
கொதிநிலை 114 °C (237 °F; 387 K)
கரைதிறன் கார்பன் டெட்ரா குளொரைடு கரைசலில் கரையும்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கரிமத்தொகுப்பு வினைகளில் ஐதராக்சில், அமினோ குழுக்களை செயலொடுக்கம் செய்யும் ஒரு பயனுள்ள இடைநிலை சிலேனாக டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் பயன்படுகிறது. இந்த சிலைலேற்றப் படிநிலை ஐதராக்சில், அமினோ குழுக்களை செயலொடுக்கம் செய்து பின்னர் அடுத்தடுத்த வினைகளை அனுமதிக்கிறது. செயலொடுக்கம் செய்யப்பட்ட இரு தொகுதிகளையும் தொடரும் நீராற்பகுப்பு வினையின் மூலமாக மீளப்பெற இயலும். நீர் எதிர்ப்பு மற்றும் வெளியிடும் பொருட்களைத் தயாரிக்கவும் தூள்களின் பாய்வை அதிகரித்தலிலும் டைமெத்தில்டையீத்தாக்சிசிலேன் பயன்படுத்தப்படுகிறது [2] [3].

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–180, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Merhari, Lhadi (2009), Hybrid Nanocomposites for Nanotechnology, Springer, pp. 184–185, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-72398-3, பார்க்கப்பட்ட நாள் 2009-07-19
  3. http://www.gpcsilicones.com/silanes/exp49.html