மங்கோலியப் பீடபூமி

மங்கோலியப் பீடபூமி மத்திய ஆசியப் பீடபூமியின் ஒரு பகுதியாக உள்ளது. இது 37 ° 46'-53 ° 08'N மற்றும் 87 ° 40'-122 ° 15'E புவியியல் ஆள்கூற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இது சுமார் 32 இலட்சம் சதுர கி.மீ. (12 இலட்சம் சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. இதன் கிழக்கில் கிரேட்டர் ஹிங்கன் மலைகள் , தெற்கில் இன் மலைகள் , மேற்கில் அல்டாய் மலைகள் , வடக்கில் சியான் மற்றும் கென்டீ மலைகள் உள்ளன. [1] இப்பீடபூமியில் கோபி பாலைவனமும், உலர்ந்த புல்வெளி மண்டலங்களும் அடங்கும். இது ஏறக்குறைய 1,000 முதல் 1,500 மீட்டர் உயரம் கொண்டது. இதில் குலுன்புயிர் மிகக் குறைவான இடமாகவும், அல்டாய் மிக உயர்ந்த இடமாகவும் உள்ளது.[1]

மங்கோலியப் பீடபூமி
சீன எழுத்துமுறை 蒙古高原
எளிய சீனம் 蒙古高原

அரசியல் ரீதியாக, பீடபூமி மங்கோலியா, சீனா மற்றும் உருசியா இடையே பிரிக்கப்பட்டுள்ளது. சீனாவில், உள் மங்கோலியா மற்றும் சிஞ்சியாங் சுயாட்சி மண்டலங்களின் பகுதிகள் பீடபூமியில் உள்ளன. உருசியாவில், பீடபூமி புர்யத்தியா மற்றும் தெற்கு இர்குத்சுகு பகுதிகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Zhang, Xueyan; Hu, Yunfeng; Zhuang, Dafang; Qi, Yongqing; Ma, Xin (2009). "NDVI spatial pattern and its differentiation on the Mongolian Plateau". Journal of Geographical Sciences (Springer-Verlag) 19: 405. doi:10.1007/s11442-009-0403-7. 

வெளி இணைப்புகள் தொகு

  • John, Ranjeet; et al. "Vegetation response to extreme climate events on the Mongolian Plateau from 2000 to 2010". IOP Publishing. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016. {{cite web}}: Explicit use of et al. in: |last2= (help)
  • "Mongolian Plateau region, Mongolia and China". Britannica.com. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2 August 1999. பார்க்கப்பட்ட நாள் 26 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலியப்_பீடபூமி&oldid=3316950" இலிருந்து மீள்விக்கப்பட்டது