சீபோர்கியம்
அணு எண் 106 கொண்ட வேதித் தனிமம்
சீபோர்கியம்(Seaborgium) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Sg, அணு எண் 106. சீபோர்கியம் கதிரியக்கத் தனிமம் ஆகும். இதன் ஓரிடத்தான் 271Sg ஆகும். சீபோர்கியம்-271 இன் அரைவாழ்வுக் காலம் 2.4 மணித்துளிகள்.
இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ் சீபோர்கியம் இருக்கும் என்று கணித்தார். தனிம அட்டவணையில் தங்குதன் கீழே இருப்பதால் எகா-தங்குதன் என்று அழைத்தார்.