பிங்க் ஃபிலாய்டின் ஆரம்ப காலங்கள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:13, 23 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("பிங்க் ஃபிலாய்ட் (Pink Floyd), 1960..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பிங்க் ஃபிலாய்ட் (Pink Floyd), 1960களின் இயங்கிய ஒரு ஆங்கில ராக் இசைக்குழு, மனதை மயக்கும் மற்றும் அதிரவைக்கும் இசையினால் அவர்கள் பெரிதும் அடையாளம் காணப்பட்டார்கள், 1970களில் அவர்களது முற்போக்கான ராக் இசையினால் சிறந்து விளங்கினர். பிங்க் ஃபிலாய்ட்டின் தயாரிப்புகள், தத்துவம் நிறைந்த பாடல் வரிகள், ஒலி சார்ந்த சோதனை முயற்சிகள், புதுமையான ஆல்ப மேலட்டைகள் மற்றும் விரிவான நேரடிக் காட்சிகளால் குறிப்பிடப்பட்டு பேசப்பட்டன. இவர்களின் ராக் இசைகள் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் வணிகரீதியான வெற்றியையும் பெற்றது.

ஆரம்ப காலங்கள் (1963–1967)

நிக் மசோன் (1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 அன்று பிறந்தவர்)[1] மற்றும் ரோகர் வாட்டர்ஸ் ( 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6  அன்று பிறந்தவர்)[2] லண்டனில் உள்ள ரிஜெண்ட் ஸ்ட்ரீட் பாலிடெக்னிக்கில் கட்டடக்கலை படித்துக்கொண்டிருந்த போது இருவரும் சந்தித்தனர். 1963 ஆம் ஆண்டில் மசோனின் காரை வாட்டர்ஸ் இரவல் கேட்ட பொழுது முதல் முறையாக இருவரும் பேசிக்கொண்டனர். மசோன் அவருடைய பருவ வயதில் த ஹாட்ரட்ஸ் என்ற இசைக்குழுவிற்காக டிரம்ஸும், வாட்டர்ஸ் கிட்டாரும் வாசித்துக்கொண்டிருந்தனர். இருவரும் ரேடியோ லக்சம்பர்க்கின் தீவிர ரசிகர்களாக இருந்தனர், மேலும் இசை ஆர்வத்தின் ரசனையை இருவரும் பகிர்ந்துகொண்டது, அவர்களின் நட்பு வளரக்காரணமாக அமைந்தது.[3]

அவ்வப்போது பாடும் பாடகியாக இருந்த கைத் நோபலின் சகோதரியான சைலாவுடன் இணைந்து நோபில் மற்றும் கிலிவ் மெட்கால்ப் மூவரும் உருவாக்கிய இசைக்குழுவில், முதல் முறையாக இந்த கலைஞர்கள் இணைந்து பணியாற்றினர். பிறகு இருவரும் சக மாணவரான ரிச்சர்ட் ரைட் ( 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 அன்று பிறந்தவர்) மூலமாக மீண்டும் இணைந்தனர்.[4] ரைட் இவர்களுடன் இணைந்ததால் இசைக்குழு ஆறு பேர் கொண்ட குழுவாக மாறியது, மேலும் சிக்மா 6 என்ற பெயரையும் பெற்றது.[5] ரைட்டின் தோழியான ஜூலியட் கல், அடிக்கடி இதில் கெளரவ கலைஞராக பணியாற்றினார். மேலும் வாட்டர்ஸ் முதலில் கிட்டார் வாசித்துக்கொண்டிருந்தார், பிறகு பேஸ் கலைஞராக மாறினார். தொடக்கத்தில் தனியாளர் விழாக்களின் பாட அவர்கள் அழைக்கப்பட்டனர், மேலும் இந்த இசைக்குழு ரிஜெண்ட் ஸ்ட்ரீட் பாலிடெக்னிக்கின் அடித்தளத்தில் உள்ள டீ ரூம்மில் ஒத்திகை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஆறு கலைஞர்களும் த சர்ச்சர்ஸுக்காக பாடல்களைப் பாடி வந்தனர், அத்துடன் இந்தப் பாடல்கள் சக மாணவரான கென் சப்மனால் எழுதப்பட்டது, பிற்காலத்தில் இவர் பாடலாசியராகவும் அவர்களது மேலாளராகவும் பொறுப்பேற்றார்.[5] ரைட் அவருடைய 12வது வயதில் அவராகவே கிட்டார் வாசிக்க தொடங்கினார், மேலும் ட்ரம்பெட் மற்றும் பியானோவையும் வாசித்தார்,[6] ஆனால் அவரது எதிர்கால வாழ்க்கைப் பிடிப்பிற்காக ரிஜெண்ட் ஸ்ட்ரீட் பாலிடெக்னிக்கில் 1962 ஆம் ஆண்டு சேர்ந்தார்.[7] அவர் எரிக் கில்டர் இசைப்பள்ளியில் இசைத்தத்துவம் மற்றும் இசை இயற்றுதலைப் பற்றித் தனியாக பாடங்கள் படித்தார்,[5] எனினும் மசோன் மற்றும் வாட்டர்ஸ் இருவரும் தகுதிவாய்ந்த மாணவர்களாக இருந்தனர், ரைட் கட்டடக்கலையிலும் சிறிது ஆர்வம் கொண்டிருந்தார், ஆனாலும் அந்த வருடத்திற்குப்பிறகு பாலிடெக்னிக்கில் அவரது படிப்பை விட்டு லண்டன் இசைக்கல்லூரியில் சேர்ந்தார்.[6]

963 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், மசோன் மற்றும் வாட்டர்ஸ் இருவரும் ஸ்டன்ஹோப் கார்டன்ஸின் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்தளத்திற்கு குடிபெயர்ந்தனர், இந்த வீடு ரிஜெண்ட் ஸ்ட்ரீட் பாலிடெக்னிக்கில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றிய மைக் லியோனர்டுக்கு சொந்தமானதாகும். லியோனர்டு ஒளி இயந்திரங்களின் வடிவமைப்பாளர் ஆவார், (மின் இயக்கிகளினால் முறுக்கி துளையிடப்பட்ட தட்டுகள் ஒளியை சுவர்களில் அடிக்கும்; இதனைப்பற்றிய விளக்கங்கள் டுமாரோஸ் வேர்ல்டின் முந்தைய பதிப்பில் கூறப்பட்டுள்ளது), மேலும் நேரம் இருக்கும்போது குழுவிற்கு கீபோர்டு கலைஞராகவும் பணியாற்றினார். அவர்கள் ஒத்திகைகளுக்கு வீட்டின் முன் அறையை உபயோகித்துக்கொண்டனர்.[8] பிறகு மசோன் அந்தக்குடியிருப்பை விட்டு வெளியேறினார், மேலும் திறமையான கிட்டார் கலைஞரான பாப் குளோஸ் இவர்களுடன் இணைந்தார். மெகாடெத்ஸ் என்ற பெயரிலிருந்து ஆர்க்கிடெக்சுரல் அப்டப்ஸ் மற்றும் த டீ செட் என இந்த இசைக்குழுவின் பெயர் பல முறை மாற்றப்பட்டுள்ளது.[8][9] அதற்குப்பிறகு, விரைவில் மெட்கல்பே மற்றும் நோபல் இருவரும் இந்த இசைக்குழுவை விட்டு வெளியேறினர்.[10]

1963 ஆம் ஆண்டில் இலையுதிர்காலத்தில், சைட் பரெட் அவருடைய 17வது வயதில்,[2] கம்பெர்வெல் கலைக்கல்லூரியில் படிப்பதற்காக லண்டனுக்கு வந்தார்.[11][12] இவருடைய இளம் வயதில் பியானோ, பாஞ்சோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை வாசிப்பதற்கு அவருடைய அப்பாவால் ஊக்குவிக்கப்பட்டிருந்தார், பரெட்டின் 14 வயதில் அவருடைய அப்பா காலமானார். பரெட்டை துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக இவருடைய அம்மா, அவர்களுடைய வீட்டின் முன்பக்க அறையில் த மோட்டோஸ் இசைக்குழுவை செயல்பாடுகளை நிகழ்த்திக்கொள்ள ஊக்குவித்தார். வாட்டர்ஸும், பரெட்டும் குழந்தைப்பருவ நண்பர்கள், இந்த இசை நிகழ்ச்சிக்கு வாட்டர்ஸ் அடிக்கடி வருகை தந்தார்.[13] 1964 ஆம் ஆண்டில் இவர் த டீ செட்டுடன் இணைந்தார், மேலும் குளோஸ் மற்றும் வாட்டர்ஸுடன் ஸ்டன்ஹோப் கார்டன்ஸுக்கு குடிபெயர்ந்தார்.[10] மேலும் அவர்களுடைய முதல் சந்திப்பை மசோன் நினைவுகூர்ந்து, அவரை நண்பராகப் பெற்றதற்கு "மகிழ்ச்சியுறுவதாகக்" கூறியுள்ளார்.

In a period when everyone was being cool in a very adolescent, self-concious way, Syd was unfashionably outgoing; my enduring memory of our first encounter is the fact that he bothered to come up and introduce himself to me.

—Nick Mason, [12]

"த பிங்க் ஃபிலாய்ட் சவுண்ட்" என்ற பெயரில்

நோபல் மற்றும் மெட்கல்பின் குரல் இசையின் போதாமையால் த டீ செட் இசைக்குழுவில் குரல் இசை போதிய சிறப்புடன் இல்லை, ராயல் விமானப்படையின் தொழில்நுட்ப வல்லுநரான கிரிஸ் டென்னிஸை குளோஸ் குழுவினருக்கு அறிமுகப்படுத்தினார்.[14] டென்னிஸ்' இருந்த காலத்தில், இசைக்குழுவிற்கு த டீ செட்டுக்கு பதிலாக த பிங்க் ஃபிலாய்ட் சவுண்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.[nb 1] இந்தப்பெயர் பரெட்டின் ரெக்கார்டு சேகரிப்புகளில் இருந்த இரண்டு புளூஸ் இசைக் கலைஞர்களான பிங்க் ஆண்டெர்சன் மற்றும் ஃபிலாய்ட் கவுன்சில் என்ற பெயர்களின் இருந்து எடுக்கப்பட்டது[[.|.[15]]] தங்கள் நிகழ்ச்சிகளில் ஒன்றில் டீ செட் என்ற இந்தப்பெயரைக் கொண்டுள்ள மற்றொரு இசைகுழுவும் நிகழ்ச்சி நடத்தப் போவது தெரிந்த போது உடனடியாக பரெட் இந்தப் பெயரை உருவாக்கினார்.[16]

டென்னிஸ் அவருடைய வேலைக்காக பக்ரைனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார், இதனால் பரெட் இசைக்குழுவிற்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.[14] 1964-1965 கால கட்டத்தில் படிப்புக்கு இடைவேளை கொடுத்துவிட்ட மைனஸ் ரைட் ஆகியோர் ஸ்டுடியோவில் பணியாற்றினர். மேலும் பரெட்டால் எழுதப்பட்டு "ஐ'அம் எ கிங் பீ" என்ற கவர் வெர்ஷன் பாடல் பதிவு செய்யப்பட்டது, அவர்கள் அதை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தினர். இடைப்பட்ட நேரத்தில், ரைட் £75 முன்பணமாகப் பெற்று பதிவுசெய்த "யூ'ஆர் த ரீசன் ஒய்" என்ற பாடல் வெளியிடப்பட்டப்பட்டது. பிறகு அவர்கள் லண்டனில் கென்சிங்டன் ஹை ஸ்ட்ரீட் அருகிலுள்ள கவுன்டவுன் கிளப்பில் தங்கி அங்கேயே பணிபுரிந்தனர், மேலும் நடுஇரவிலிருந்து விடிகாலைக்கு முன்பு வரை, 90 நிமிடங்கள் கொண்ட மூன்று தொகுப்புகளாக இசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினர். மசோனைப் பொறுத்தவரை, இந்தக் காலம்"… நீண்ட தனிப்பாடல்களால் பாடல்களை நீட்டிக்கலாம் என்பதை உணர்வதற்குத் தொடக்கமாக அமைந்தது."[17] அவர்கள் ரெடி ஸ்டெடி கோ! என்ற ITV நிகழ்ச்சியில் (நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அடுத்த வாரங்களில், அவர்களை மீண்டும் ஸ்டுடியோ பார்வையாளர்களின் முன் வரவழைக்க மிகுந்த ஆர்வமாக இருந்தனர்), மற்றொரு கிளப் மற்றும் இரண்டு ராக் போட்டிகளில் தங்களது பங்கு பெறுவதற்கான தேர்வு சோதனையில் பங்குபெற்றனர். பாப் குளோஸ் அவருடைய அப்பா மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 1965 ஆம் ஆண்டில் குழுவை விட்டு வெளியேறினார்,[18] இதனால் பரெட் லீட் கிட்டார் வாசிக்கும் பொறுப்பை ஏற்றார்.[19]

1966 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பீட்டர் ஜென்னரால் பார்வையாளராக வந்திருந்த மார்க்யூ கிளப் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சி நடத்தும் இடங்களிலிருந்தும் முன்பணம் கொடுத்து அவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இந்த இசைக்குழு அதிகமாக ரிதம் மற்றும் புளூஸ் பாடல்களை பாடினர், ஆனால் அவர்களுடைய நிகழ்ச்சிகளில் பரெட் மற்றும் ரைட்டினால் உருவாக்கப்படும் விசித்திரமான ஒலியின் விளைவுகளால் ஜென்னர் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.[16] ஜென்னர், அவருடைய தொழில் பங்குதாரரும் நண்பருமான ஆண்ட்ரிவ் கிங் இருவரும், வாட்டர்ஸ் மற்றும் மசோனை அவர்களுடைய குடியிருப்பில் சந்தித்தனர்,[20] பின்னதாக இருவரையும் அவர்களுக்கு கீழ் மேலாளராக பணியாற்ற வரும்படி கேட்டனர். இந்த இருவருக்கும் இசைத்துறையில் சிறிது அனுபவமே இருந்தது எனினும், அவர்கள் இசையில் உள்ள ஆர்வத்தையும், அவர்களது குழந்தைப்பருவ வரலாற்றையும் பகிர்ந்துகொண்டனர். அவர்களிடம் இருந்த பாரம்பரிய சொத்தை வைத்து பிளாக்கில் எண்டர்பிரைசஸை ஆரம்பித்தனர் மற்றும் செல்மர் PA கருவி உள்ளிட்ட இசைக்குழுவுக்கான புதிய கருவிகளையும் வாங்கினர்.[21] அவர்களின் வழிநடத்தலில், லண்டனில் அவர்களது இசை நிகழ்ச்சிகள் நடக்கத்தொடங்கியது. குறிப்பாக நோட்டிங் கில்லில் உள்ள லண்டன் ப்ரீ ஸ்கூலில் நிகழ்ச்சி நடத்தப் பதிவுசெய்தனர். ஆல் செய்ண்ட் ஹாலின் உறுப்பினர்களாக இருந்த பார்வையாளர்கள் அடிக்கடி போதைப் பழக்கத்திற்குட்பட்டவர்களாகவும், குறைந்த அல்லது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவர்களாகவும் இருந்தனர்,.[22] ஒவ்வொரு நிகழ்ச்சியைத் தொடர்ந்தும், கேள்விபதில் பகுதிகளும் அடிக்கடி நடக்கும். த பிங்க் ஃபிலாய்ட் சவுண்ட் குழுவினர், கவுன்டவுன் கிளப்பில் அவர்களது ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் அவர்களின் திறமைக்காக ஊக்குவிக்கப்பட்டனர், மேலும் அடிப்படை ஒளி நிகழ்ச்சிகளில் பலமான தாக்கத்திற்காக நிறங்களை மாற்றும் அட்டைகளும் வண்ண விளக்குகளும் உபயோகப்படுத்தப்பட்டன.[23][24] இலவச பள்ளி இதழான இண்டர்நேஷனல் டைம்ஸ் தொடங்குவதை கொண்டாடுவதற்காக நடந்த த ரெளண்ட்ஹவுஸ் நிகழ்ச்சியைப் பார்க்க பிரபலங்களான அலெக்சாண்டர் த்ரோச்சி, பால் மெக்கார்டினி மற்றும் மரியன் பெய்த்புல் உள்ளிட்ட 2000 பேர் கொண்ட பலமான கூட்டம் கூடியிருந்தது.[25] ஜென்னர் மற்றும் கிங்கின் ஆகியோரின் பலவகைப்பட்ட வரிசையுடைய புகழத்தக்க சமூக தொடர்புகளின் மூலம், த பைனான்சியல் டைம்ஸ் மற்றும் த சன்டே டைம்ஸ் இதழ்களில் இந்த இசைக்குழுவைப் பற்றிய சிறப்புச் செய்தித்தொகுப்புகள் வெளியாயின.[26]

At the launching of the new magazine IT the other night a pop group called the Pink Floyd played throbbing music while a series of bizarre coloured shapes flashed on a huge screen behind them. Someone had made a mountain of jelly which people ate at midnight and another person had parked his motorbike in the middle of the room. All apparently very psychedelic.

The Sunday Times, [27]
படிமம்:Hapshash-UFO.jpg
1967 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, பிங்க் ஃபிலாய்ட்க்கான சுவரொட்டி ஹப்ஷா அண்ட் த கலர்டு கோட்டின் சார்பில் CIA-UFO மன்றத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்த இசைக்குழு அதிகமாக பரெட்டின் பாடல்களைப் பாடின, அவையே பிங்க் ஃபிலாய்ட்டின் முதல் ஆல்பத்திலும் பின்னர் இடம்பெற்றன.[24] பிளாக்ஹில் எண்டர்பிரைசுடன் வைத்திருந்த நட்பு, அவர்கள் முழு பங்குதாரர்கள் ஆனவுடன் மேலும் உறுதியானது, இதுவரை இல்லாத வகையில் ஆறில் ஒன்று என்ற விகிதத்திலான பங்கு ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது.[21] காமன்வெல்த் நிறுவனத்திற்காக நடத்திய நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தினர் மற்றும் கத்தோலிக்க இளைஞர்களின் கிளப்புக்காக நடத்திய நிகழ்ச்சியில்[28], அதன் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இசைக்குழுவின் நிகழ்ச்சியில் "இசை தரமானதாக இல்லை" எனக் கூறிய அந்த கிளப்பின் உரிமையாளருக்கு சாதகமாக குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.[29] இந்த ஒரு நிகழ்ச்சி மட்டுமல்லாமல், எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான விமர்சனங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் லண்டனில் உள்ள UFO கிளப்பில் நடத்திய நிகழ்ச்சியில் அவர்களுக்கு நல்ல புகழ் கிடைத்தது. அவர்கள் அங்கு நிகழ்ச்சி நடத்துவதை விரும்பினர் மற்றும் அங்கு நல்ல தாக்கத்திற்காக உள்ளரங்கு விளக்குகளை பயன்படுத்தினர்.[30] பரெட் அவரது திறமையை நன்றாக வெளிப்படுத்தினார், "… அவர் வெறிப்பிடித்தைப் போன்று தாவிக்குவிப்பதும் மற்றும் முன்னேற்பாடின்றி செயல்படும் அவரின் செய்கைகளுக்காக… அவர் ஊக்கமூட்டப்பட்டார். மற்ற எவராலும் செய்ய முடியாத அளவில், இந்த இடங்களில் வரம்புகளை மீறி இவர் தொடர்ந்து சமாளிக்கும் திறன் மிக, மிக நன்றாக இருந்தது.[31] இவர்களின் இசை பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது, ஆனால் மாறாக அவர்களின் சில பார்வையாளர்கள் இதனால் அதிகமாக மயக்கப்படவில்லை—"நாங்கள் இதற்கு வெளியில் உள்ளோம், போதைக்கு அடிமையாக அல்ல, ஆனால் இந்த செயல்களுக்கு வெளியில் உள்ளோம், UFOவின் உடை மாற்றும் அறையில் மாட்டிகொண்டுள்ளோம்."[32]

எனினும் 1967 ஆம் ஆண்டில், மசோன் சைக்டெலிக் வகை இசைகளை அவர்களது நிகழ்ச்சிகளில் சேர்த்தார், "எங்களை சுற்றிய இடங்களை எடுத்துக்கொண்டனர்—எங்களுக்குள் அல்ல" என்று கூறியுள்ளார்,[33] த பிங்க் ஃபிலாய்ட் சவுண்ட் இந்தப் புதுவிதமான இசையை அறிமுகப்படுத்தியதில் சிறந்து விளங்கியது. இக்குழுவின் மேல் பதிவு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர், மேலும் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோ பாய்ட் இவர்களின் இயக்குநராகப் பொறுப்பேற்றார், மேலும் வெஸ்ட் ஹாம்ப்ஸ்டெட்டில் உள்ள சவுண்ட் டெக்னிக் ஸ்டுடியோவில் "அர்னால்ட் லேன்" உள்ளிட்ட பல பாடல்களை பதிவு செய்தனர். மேலும் "இண்டெர்ஸ்டெல்லர் ஓவர்ரைடின்" மற்றொரு பதிப்பினையும் வெளியிட்டனர். "அர்னால்ட் லேனுக்காக" ஸசக்ஸுக்கு பயணம் செய்து சிறிய இசைத்திரைப்படத்தையும் பதிவு செய்தனர். எனினும் பாலிடர் இசைக்குழுவின் மேல் உள்ள ஆர்வத்தினால், இவர்களின் இசைக்குழு EMIயுடன் ஒப்பந்தம் செய்து அதற்காக £5,000 முன்பணம் வாங்கியது, மேலும் பாய்ட் எதிர்பாராத விதமாக அந்த ஒப்பந்ததிலிருந்து வெளியேறினார்.[34][35]

EMIயுடன் ஒப்பந்தம்

நேரடி நிகழ்ச்சிகளுக்கு செல்வது அதிகமான காரணத்தால், கல்லூரிப் படிப்பு மற்றும் வழக்கமான வருமானம் வரும் பணிகளை செய்ய முடியாமல் போனது, இதனால் கட்டடக் கலைஞராக இருந்த வாட்டர்ஸ் அவரது வேலையை விட்டு விலகினார்; தொடக்கத்திலேயே ரைட் கம்பெர்வெல் கலைக்கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு தன்னை இசைக்காக அர்ப்பணித்திருந்தார்; மற்றும் மசோன் அவரது கல்லூரி படிப்பிலிருந்து நீண்ட விடுமுறையை எடுத்தார். அவர்களின் போதைப்பழக்கம் தொடர்பாக EMI எழுப்பிய விவகாரங்களால், அதைப்போன்ற தொடர்புகளிலிருந்து தங்களை பிரித்துக்காட்ட இந்த இசைக்குழு பல நேர்காணல்களை செய்தியாளர்களுடன் நடத்தியது. 1967 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று, முதல் தனிப்பாடலான "அர்னால்ட் லேன்" வெளியிடப்பட்டது.[36] இந்தப் பாடல் தெளிவில்லாத வக்கிரமான பாலியல் கருத்துக்களை கொண்டிருப்பதாகக்கூறி, பல வானொலி நிலையங்களில் இப்பாடலைத் தடைசெய்தனர். ஆனால் சில ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் இசைத்துறை சார்ந்த கடைகளில் இது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. UK வரலாற்றில் இதன் விற்பனை தரப்பட்டியலில் 20ஆம் இடத்தை அடைந்து உயரத்திற்குச் சென்றது.[37]

பிங்க் ஃபிலாய்ட் (1967 ஆம் ஆண்டில் அப்போது வரையறு சுட்டு கைவிடப்பட்டது)[38] அவர்களுடைய பழைய பெட்போர்ட் வேனை மாற்றி போர்ட் டிரான்சிட் வகை வேனை வாங்கியது,[39] மேலும் 1967 ஆம் ஆண்டில் இந்த வேனை உபயோகித்து 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது (முந்தைய வருடத்தை விட பத்து மடங்கு அதிகம்). பின்பு பரெட்டுடன் அவருடைய குடியிருப்பில் வசித்த ரோடு மேனேஜரான பீட்டர் வைன் வில்சனுடன் இணைந்தனர்.[40] வில்சன் அவருடைய புதுமையான யோசனைகளால் பொலரைசர் கண்ணாடிகள் மற்றும் வளையத்ததக்க இரப்பர்களை உபயோகப்படுத்தி புதுவிதமான ஒளி விளக்குகளை இந்த இசைக்குழுக்காக உருவாக்கினார்.[41] ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களுடைய வேன் காவலர்களால் மடக்கப்பட்டது, குழுவைச் சார்ந்த ஒருவர் கத்திரிக்கோலால் ஆணுறைகளை வெட்டுவதை நேரடியாகப் பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.[31] சில இடங்களில், அரங்கத்தில் ஒளி எழுப்புவது ராக் இசைக்குழுவினக்கு பிரச்சனையாக அமையும், அடிக்கடி இதைப்போன்ற பிரச்சனைகளை இக்குழுவினர் காற்று குழல்துப்பாக்கிகளை பயன்படுத்தி சரிசெய்வார்கள்.[37] அவர்களின் நிதிநிலைமை மிக மோசமாக இருந்ததால் அவர்களுடைய சொந்த வெகுமதிகள் இல்லாமல் அவர்களால் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல இயலாது; இதன் உச்சமாக ஒரு படகுப்பயணத்தில் குழுவைச்சார்ந்த ஒருவர் வாட்டர்ஸிடம் படகின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு நாயைப்போன்று குரைத்துக்கொண்டு தவழ்ந்து செல்லும்படி £20க்கு பந்தயம் கட்டினார் — பின்னர் அந்த சாவலில் அவர் வெற்றிபெற்றார்.[42]

"சீ எமிலி ப்ளே", பிங்க் ஃபிலாய்ட்டின் இரண்டாவது வெளியீடாகும், இதை லண்டனில் உள்ள சவுண்ட் டெக்னிக் ஸ்டுடியோவில் அவர்கள் பதிவு செய்தனர்.[43] "கேம்ஸ் பார் ப்ளே", என்று முதலில் இதற்கு பெயர் வைத்திருந்தனர், மேலும் 1967 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று இதை வெளியிடும் முன்பாக, இதன் முதல் காட்சி லண்டனில் உள்ள குவின் எலிசபெத் ஹாலில் நடந்தது.[44] இவர்களின் முதல் காட்சிக்காக அஜிமுத் கோ-ஆர்டினேட்டர் என அழைக்கப்படும் கருவி(முதலில் குவாட்ராபோனிக் கருவி எனப்பட்டது) அபே ரோடு ஆல்பத்தின் பொறியாளரால் உருவாக்கப்பட்டது. குமிழ்விடும் கருவியை இவர்கள் உபயோகப்படுத்துவதும் மற்றும் பூக்களை சிதற விடுவதும் இந்த அரங்கத்தில் தடைசெய்யப்பட்டது. அவர்கள் BBCயின் லுக் ஆப் த வீக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர், அந்நிகழ்ச்சியில் ஹன்ஸ் கெல்லரால் கடுமையான கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது. வாட்டர்ஸுடன் இணைந்து, பரெட்டும் திறமைமிக்கவராகத் தோன்றினார்.[45] இந்தத் தனிப்பாடல், "அர்னால்ட் லேனை" விட நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தரவரிசையில் #17வது இடத்தைப் பெற்றது. இக்குழுவினர், BBC'யின் டாப் ஆப் த பாப்ஸில் இந்த தனிப்பாடல் நிகழ்ச்சியை நடத்தினர், மேலும் அது #5வது இடத்தைப் பெற்றதால் மற்றொரு நிகழ்ச்சி கிடைத்தது. பரெட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்ததால், மூன்றாவது தடவையாக நடக்க இருந்த நிகழ்ச்சி தடைபட்டது.[43] அந்த நேரத்தில், இக்குழுவின் சக உறுப்பினர்கள் பரெடின் நடவடிக்கையில் உள்ள மாறுதலை கண்டுகொண்டனர்.[46] 1967 ஆம் ஆண்டின் முற்பகுதியில் லிசெர்ஜிக் ஆசிட் டிதைலெமடி (LSD) எனப்படும் சைக்டெலிக் போதைப்பொருளை இவர் தொடர்ந்து உபயோகப்படுத்தத் தொடங்கினார், மேலும் தொடக்கத்தில் இதைப்பார்க்கும் போது ஈர்ப்பையும், ஆக்கத்திறனுக்கும் வழிவகுத்தது,[47] ஹாலந்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்பு மசோன், பரெட்டிடம் இருந்த மாறுதல்களை கண்டுள்ளார், "நடக்கும் நிகழ்வுகளிலுருந்து முழுவதுமாக விலகிச்சென்றார், நரம்பு சார்ந்த உடல் தொந்தரவு ஏற்பட்டிருக்கலாம், இருந்தாலும் இன்றும் எனக்கு நடந்தது என்ன என்று தெரியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.[46]

த பைப்பர் அட் த கேட்ஸ் ஆப் டாவ்ன்

ஒப்பந்தத்தின் காரணமாக[48] லண்டனில் அபே ரோடு ஸ்டுடியோவில் இக்குழுவினரால் EMIக்கான முதல் ஆல்பம் பதிவு செய்யப்பட்டது. EMIயுடனான ஒப்பந்தம் உருவாவதில் முக்கியக் காரணமாக குழுவின் முகவரான ப்ரென் மோரிசன் இருந்தார், இதைத் தயாரிப்பாளரான நூர்மென் ஸ்மித்திடம் மூலமாகப் பெற்றுத்தந்தார்.[49] 2005 ஆம் ஆண்டில் மசோன் அவருடைய சுயசரிதையில் இந்தக் காலகட்டம் சிக்கலில்லாததாக இருந்ததாகக் கூறியுள்ளார், ஆனால் ஸ்மித் இதை மறுத்தார் முன்னர் இருந்தது போலவே பரெட் தனது புதிய பாடல்களைப் பாடுவது பற்றிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் ஏற்க மறுத்ததாகவும் கூறினார். அவர்கள் மியூசிக் கான்கிரிட் இசைவகையையும் பரிசோதித்துப் பார்த்தனர், மேலும் ஒரு சமயத்தில் த பீட்லெஸ் இசைக்குழுவின் பதிவான "லவ்லி ரிட்டா" பாடலைக் காண அழைக்கப்பட்டனர்.[50] ஜெப் ஜரெட் அந்த சமயத்தில் டேப் இயக்குபவராக பணியாற்றினார், மேலும் அவர்களது நேரடி நிகழ்ச்சிகளில் மிகவும் ஆர்வமிக்கவராகவும் இருந்தார். ஜரெட் மற்றும் வாட்டர்ஸ் இருவரும் குழுவினரின் மனதை மயக்கும் வர்ண மயமான சைக்டெலிக் இசைக்கு, சுமித்தினால் இயற்றப்படும் இசையை ஒழுங்குப்படுத்தும் முறை ஒத்து வராது என நினைத்தனர் மேலும் அவரின்மேல் திருப்தி இல்லாமலும் இருந்தனர்.[51]

த பைப்பர் அட் த கேட்ஸ் ஆப் டாவ்ன் 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. ப்ங்க் ஃபிலாய்ட் தொடர்ந்து UFO கிளப்பில் நிகழ்ச்சிகளை நடத்தியது, மேலும் அங்கு அவர்களுக்காக பெரிய கூட்டமும் கூடியது, ஆனால் பரெட்டின் மோசமான நடவடிக்கைகள் மிகவும் கவலையை ஏற்படுத்தியது. குழுவினர் பரெட் இந்த மோசமான நிலையிலிருந்து சீக்கிரம் மீண்டு வருவார் என நம்பினர், ஆனால் ஜெனிபர் மற்றும் ஜீன் சைல்ட்[nb 2] உள்ளிட்ட பிற நபர்கள் நிகழ்ச்சியில், இவரது பங்களிப்பு மிகவும் யதார்த்தமான உள்ளது எனக் கூறினர்.

… I found him in the dressing room and he was so … gone. Roger Waters and I got him on his feet, we got him out to the stage … and of course the audience went spare because they loved him. The band started to play and Syd just stood there. He had his guitar around his neck and his arms just hanging down.

—June Child, [53]

இவரது நடவடிக்கையால், விண்ட்சர் ஜாஸ் விழாவின் போது அவர்களது நிகழ்ச்சியை குழுவினர் இரத்து செய்தனர், மேலும் பரெட் 'நரம்புச் சோர்வு' நோயினால் அவதிப்படுவதாக செய்தியாளர்களுக்கு அறிவித்தனர். ஜெனிபர் மற்றும் வாட்டர்ஸ் இருவரும், மன நோய் மருத்துவரை பார்ப்பதற்கு பரெட்டுக்கு ஏற்பாடு செய்தனர், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இசைத்துறையில் மிகவும் போற்றப்பட்ட சாம் ஹட் என்ற மருத்துவருடன் பார்மெண்ராவிற்கு அனுப்பப்பட்டார், ஆனாலும் பின்னர் இவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. செப்டம்பரில் சில நாட்கள் இசைக்குழு தனது முதல் அமெரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றது,[54] அவருடைய டூர் மானேஜராக இருந்த ஆண்ட்ரிவ் கிங், நியூ யார்க் சென்று ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மிகவும் மோசமான பிரச்சனைகளைக் குழுவினர் சந்தித்தனர். தொடர்ச்சியாக தொலைபேசியில் "பதற்றமான" அழைப்புகள் வந்து கொண்டிருந்ததாலும் விசா கிடைக்காத காரணத்தாலும் முதல் ஆறு நாட்கள் நிகழ்ச்சியை இவர்கள் இரத்து செய்தனர்.[55] எலெக்ட்ரா ரெக்கார்ட்ஸ் இசைக்குழுவினரின் வருகையால் பிங்க் ஃபிலாய்ட் பின்னுக்குத் தள்ளப்பட்டனர், மேலும் EMIயின் சகநிறுவனமான கேப்பிட்டோலால் கையாளப்பட்டு, பதிவுகளைச் செய்ய அதன் துணை நிறுவனமான டவர் ரெக்கார்ட்ஸை இக்குழுவுக்கு ஒதுக்கித்தந்தது. த பைப்பர் அட் த கேட்ஸ் ஆப் டவ்னில் இருந்து விடுபட்ட பதிவை டவர் வெளியிட்டது(விடுபட்ட பாடல்களை தனியாக வெளியிட ஏதுவாக இச்சம்பவம் நிகழ்ந்தது) அதே நாளில் இசைக்குழுவின் அமெரிக்க நிகழ்ச்சியான த பில்மோர் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று கலிபோர்னியாவில் அரங்கேறியது. நிறுவனத்திற்கும் இசைகுழுவிற்கும் உள்ள தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டது, மேலும் டவர் மற்றும் கேபிட்டோல், பிங்க் ஃபிலாய்ட் உடனான நட்புறவு மிகவும் மோசமாக இருந்தது. பரெட்டின் மனநிலையில் கிங் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சனைகள் தெரிந்தது;[56] விண்டர்லேண்ட் பால்ரூமில் குழுவினரின் "இண்டர்ஸ்டெல்லர் ஒவர்டிரைவ்" நிகழ்ச்சி நடந்தபோது, பரெட் அவருடைய கிட்டாரின் கம்பி அறுந்துவிழும் வரை ட்யூனிங் செய்து கொண்டே இருந்தார். இவருடைய விந்தையான செயல்கள், தொடர்ந்த நிகழ்ச்சிகளில் மிகவும் மோசமானது, த பாட் போன் ஷோவுக்கான ஒத்திகை பதிவு நடந்தபோது அவர் மிகவும் நன்றாக பாடல் பாடினார், அதன்பிறகு பதிவின் போது அசைவில்லாமல் அவர் நின்று கொண்டிருந்தது அதன் இயக்குநரை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. விரைவில் கிங் அவர்களின் அமெரிக்க நிகழ்ச்சி பயணத்தைக் கட்டுப்படுத்தி, அடுத்த விமானத்தில் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பினார்.[57] ஒருசமயத்தில், ஒரு மோட்டல் அறையில் பரெட் தூங்குவதை வாட்டர்ஸ் பார்த்தபோது பரெடின் விரல்களை சிகரெட் சுட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்.(இக்காட்சி, 1982 ஆம் ஆண்டில் வெளியான த வால் திரைப்படத்தில் வந்த காட்சிக்கு காரண பாதிப்பாக இருந்தது).[சான்று தேவை] விரைவில் அமெரிக்காவிலிருந்து அவர்கள் திரும்பிய பிறகு, 14 நவம்பரிலிருந்து இங்கிலாந்து நிகழ்ச்சிக்கான பயணத்தில் ஜிமி ஹெண்டிரிக்கு ஆதரவாகச் சென்றனர்,[57] ஆனால் ஒரு நிகழ்ச்சியில் பரெட் வராமல் போனதால் அவருக்குப் பதிலாக டேவிட் ஓ'லிஸ்டை சேர்க்க நிர்பந்திக்கப்பட்டனர்.[54] இந்த நிகழ்ச்சிகள் நடந்த காலகட்டத்தில் பரெட்டின் மனநிலை மிகவும் மோசமடைந்தது.[58] ஹெண்டிரிக் சுற்றுலாவின் முடிவில் வைன் வில்சன் அவரது லைட்டிங் மேனேஜர் பதவியை விட்டு விலகினார், மேலும் பரெட்டுடன் தன்னை இணைத்துக்கொண்டார் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்த பரெட்டுக்கு இது பதவிக்கான பாதுகாப்பின்மையை வழங்கியது. அவரது இடத்தில் ஜான் மார்ஷ் நியமிக்கப்பட்டார்.[59] "ஆப்பில்ஸ் அண்ட் ஆரஜெஸை" பிங்க் ஃபிலாய்ட் வெளியிட்டது, ஆனாலும் இசைக்குழுவின் மீதமிருந்த பாடல்களின் நிகழ்ச்சிகளின் போது பரெட் நிலை மிகவும் மோசமடைந்தது, இதனால் அவர்கள் ஒரு புதிய உறுப்பினரைக் குழுவில் சேர்த்து மீத படைப்புகளை வெளியிட்டனர்.[54]

மேற்கோள்கள்

  1. Blake 2008, ப. 36
  2. 2.0 2.1 Blake 2008, ப. 13
  3. Mason 2005, ப. 15–19
  4. Blake 2008, ப. 38
  5. 5.0 5.1 5.2 Blake 2008, ப. 38—39
  6. 6.0 6.1 Mason 2005, ப. 20–21
  7. Mason 2005, ப. 11–12
  8. 8.0 8.1 Mason 2005, ப. 24–26
  9. Schaffner 1991, ப. 27–28
  10. 10.0 10.1 Blake 2008, ப. 41
  11. Blake 2008, ப. 33
  12. 12.0 12.1 Mason 2005, ப. 27
  13. Schaffner 1991, ப. 22–23
  14. 14.0 14.1 Blake 2008, ப. 42–44
  15. Schaffner 1991, ப. 30
  16. 16.0 16.1 Mason 2005, ப. 33–37
  17. Mason 2005, ப. 30
  18. Mason 2005, ப. 29–32
  19. Blake 2008, ப. 45
  20. Schaffner 1991, ப. 17
  21. 21.0 21.1 Schaffner 1991, ப. 32–33
  22. Mason 2005, ப. 50–51
  23. Schaffner 1991, ப. 34
  24. 24.0 24.1 Mason 2005, ப. 46–49
  25. Schaffer 1991, ப. 42–43
  26. Mason 2005, ப. 52–53
  27. Schaffner 1991, ப. 44
  28. Entertainments—Classified Advertising, The Times at infotrac.galegroup.com, 1967-01-17, பார்க்கப்பட்ட நாள் 2009-08-27 {{citation}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  29. Mason 2005, ப. 54
  30. Mason 2005, ப. 54–58
  31. 31.0 31.1 Schaffner 1991, ப. 49
  32. Mason 2005, ப. 58
  33. Schaffner 1991, ப. 50
  34. Schaffner 1991, ப. 54–55
  35. Mason 2005, ப. 59–63
  36. Mason 2005, ப. 64–66
  37. 37.0 37.1 Mason 2005, ப. 84–85
  38. Blake 2008, ப. 79
  39. Mason 2005, ப. 70
  40. Schaffner 1991, ப. 28
  41. Mason 2005, ப. 78–79
  42. Mason 2005, ப. 80
  43. 43.0 43.1 Mason 2005, ப. 86–87
  44. Blake 2008, ப. 88
  45. Blake 2008, ப. 86–87
  46. 46.0 46.1 Mason 2005, ப. 82
  47. Shaffner 1991, ப. 51
  48. Schaffner 1991, ப. 55
  49. Mason 2005, ப. 87, p. 70
  50. Mason 2005, ப. 92–93
  51. Blake 2008, ப. 84–85
  52. Schaffner 1991, ப. 36
  53. Mason 2005, ப. 95
  54. 54.0 54.1 54.2 Mason 2005, ப. 95–105
  55. Blake 2008, ப. 94
  56. Schaffner 1991, ப. 88–90
  57. 57.0 57.1 Schaffner 1991, ப. 91–92
  58. Schaffner 1991, ப. 94
  59. Blake 2008, ப. 102


பிழை காட்டு: <ref> tags exist for a group named "nb", but no corresponding <references group="nb"/> tag was found