சிறீகண்டேசுவரம் மகாதேவன் கோவில், திருவனந்தபுரம்
சிறீகண்டேசுவரம் மகாதேவன் கோவில் (Sreekanteswaram Mahadeva Temple) இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தின் மையப் பகுதியில் உள்ள சிறீகண்டேசுவரம் என்னும் இடத்தில் உள்ள ஒரு இந்து கோவிலாகும். இந்த கோவில் மிகப்பழைமையான சிவன் கோவில் ஆகும்.
சிறீகண்டேசுவரம் மகாதேவன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | திருவனந்தபுரம் |
மாவட்டம்: | திருவனந்தபுரம் |
அமைவு: | ஸ்ரீகண்டேஸ்வரம் |
கோயில் தகவல்கள் | |
தீர்த்தம்: | உண்டு |
இந்த கோவிலானது திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையம், பேருந்து நிலையம், கிழக்கு கோட்டை மற்றும் சிறீபத்மநாபசுவாமி கோவில் ஆகியவற்றிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பழைய சிறீகண்டேசுவரம் கோவில் என அழைக்கப்படும் மற்றொரு சிவன் கோவிலும் திருவனந்தபுரத்தில் புத்தன்சந்தை என்ற பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்கள் சிலவற்றில் இந்த சிறீகண்டேசுவரம் சிவன் கோயில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் வந்து வணங்கிச் செல்லும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
தெய்வங்கள் மற்றும் துணை தெய்வங்கள்
தொகுசிவன் மூலவர் ஆவார். மகா கணபதி, முருகன், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், சுவாமி அய்யப்பன், நாகராசர் ஆகியோர் துணை தெய்வங்கள் ஆகும்.
வழிபாடு
தொகுஅதிகாலையில் நடை திறந்ததும், முதல் நாள் இறைவனுக்குப் போடப்பட்ட மாலைகளையும், பூக்களையும் எடுத்து, மாற்றிச் சுத்தப்படுத்தும் இருபது நிமிடங்கள்தான் நிர்மால்ய தரிசன நேரம். இதைக் கண்டு தரிசிப்பதற்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வந்து சேர்கிறார்கள்.[1]
திருவிழாக்கள்
தொகுஆண்டுதோறும் மலையாள மாத தனுவில் (திசம்பர் - சனவரி) 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சிவபெருமானின் பிறந்த நாளாகக் கருதப்படும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆரட்டு இருக்கும். சிவராத்திரி பண்டிகையும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் சிலையை நாள் முழுவதும் தூய நெய்யால் அபிசேகம் செய்வது அந்த நாளில் செய்யப்படுகிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "நிர்மால்ய தரிசனம் விசேஷம்!".[தொடர்பிழந்த இணைப்பு] விகடன் (31 மே, 2007)