சிறீசந்திரா
சிறீசந்திரா (Srichandra) (ஆட்சி சுமார் 930-975) கிழக்கு வங்காளத்தில் ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் இரண்டாவது மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க ஆட்சியாளனாவான்.
சிறீசந்திரன் | |
---|---|
ஆட்சிக்காலம் | 930 - 975 |
முன்னையவர் | திரைலோக்யச்சந்திரன் |
பின்னையவர் | கல்யாணசந்திரன் |
குழந்தைகளின் பெயர்கள் | கல்யாணசந்திரன் |
மரபு | சந்திர வம்சம் |
அரசமரபு | சந்திர வம்சம் |
தந்தை | திரைலோக்யச்சந்திரன் |
மதம் | பௌத்தம் |
வாழ்க்கை
தொகுதிரைலோக்யச்சந்திரனுக்குப் பிறகு, சிறீசந்திரன் "பரமசௌகதா",[1] "பரமேசுவர்", "பரம்பத்தரக்" , "மகாராசாதிராசன்" [2] ஆகிய பட்டங்களை எடுத்துக்கொண்டு அரியணை ஏறினான். [3] வரலாற்றாலாளர்அப்துல் மோமின் சௌத்ரி எழுதிய 'வங்காளத்தின் வம்ச வரலாறு' என்ற புத்தகத்தின்படி, சிறீசந்திரன் கிபி 930 முதல் 975 வரை 45 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.[4] பின்னர், ரமேஷ் சந்திர மஜும்தார் தனது 'வங்காளதேச வரலாறு' என்ற புத்தகத்தில் சிறீசந்திரன் 905 முதல் 955 வரை ஆட்சி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.[5][6] எனினும் சந்திர வம்ச அரசர்களில் இவனே அதிக காலம் ஆட்சி செய்தான்.[7] மணிக்கஞ்ச், டாக்கா, பரித்பூர், பத்மா, சில்ஹெட் , கொமில்லாப் பகுதிகள் இவனது ஆட்சியின் கீழ் வந்தன.[5] இவன் தனது தலைநகரை தேவபர்வதத்திலிருந்து விக்ரம்பூருக்கு மாற்றினான் (இன்றைய முன்சிகஞ்ச்). சந்திர வம்ச அரசர்களைப் பற்றிய விரிவான விளக்கத்தை பாசிம்பாக் செப்புப் பட்டயக் கல்வெட்டிலிருந்து காணலாம்.[8]
காமரூப இராச்சியத்திற்கு எதிரான இவனது வெற்றிகளை விவரிக்கும் மௌல்விபஜாரில் உள்ள பாஸ்சிம்பாக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மைனாமதியில் இருந்து செப்புத் தகடுகள் மற்றும் பாசிம்பாக் செப்புத்தகடு ஆகியவற்றிலிருந்து இவனைப் பற்றி அறியப்படுகிறது. தனது தந்தையின் இராச்சியத்தை வங்க நாடு, சமதாத இராச்சியங்களை உள்ளடக்கி விரிவுபடுத்தினான். இவன், ஹரிகேள ராச்சியம், பாலப் பேரரசு, வடக்கு வங்காளத்தின் காம்போஜ பால வம்சத்தினருடன் வெற்றிகரமாக போரிட்டான். இரண்டாம் கோபாலன் இவனது இவனது சமகால பால ஆட்சியாளன் ஆவான். சிறீசந்திரன் தனது பேரரசின் நிர்வாக மையத்தை தேவபர்வதத்திலிருந்து புதிதாக கட்டப்பட்ட தனது தலைநகரான விக்ரம்பூருக்கு மாற்றினான்.
மதம்
தொகுகிடைக்கக்கூடியச் செப்புத் தகடுகளின்படி, இவன் பௌத்த சமயத்தை பின்பற்றினான் என்றாலும், தனது குடிமக்களிடையே பிற மத நம்பிக்கைகளை சகித்துக்கொண்டான். இடம்பெயர்ந்த பிராமணர்களை தனது பேரரசுக்குள் குடியேற்ற இவன் மேற்கொண்டான். தனது மகன் கல்யாணசந்திரனும் ஒரு பௌத்தனாக இருந்தான். மேலும் இவனது பேரனான அதிசரும் பௌத்தப் பிக்குவாக இருந்தார்.
சான்றுகள்
தொகு- ↑ Kashem, Abul (7 November 2014). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). The Daily Ittefaq இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201113102442/https://archive1.ittefaq.com.bd/print-edition/ittefaq-shamoeki/2014/11/07/13157.html.
- ↑ "Two: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস: প্রাচীনকাল থেকে বঙ্গভঙ্গপূর্ব পর্যন্ত (Article: দক্ষিণ–পূর্ব বাংলার স্বাধীন রাজ্য: চন্দ্র রাজবংশ)". বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, classes IX-X. National Curriculum and Textbook Board, Dhaka. 2011. pp. 38–39.
- ↑ "Two: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস: প্রাচীনকাল থেকে বঙ্গভঙ্গপূর্ব পর্যন্ত (Article: দক্ষিণ–পূর্ব বাংলার স্বাধীন রাজ্য: চন্দ্র রাজবংশ)". National Curriculum and Textbook Board, Dhaka. 2011. pp. 38–39.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ Chowdhury, Dwoha (7 August 2020). (in bn)The Daily Star. https://www.thedailystar.net/bangla/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-166181.
- ↑ 5.0 5.1 Shakil, Mahfuj (20 July 2020). (in bn)Kaler Kantha (Kulaura, Moulvibazar). https://www.kalerkantho.com/online/country-news/2020/07/20/937117.
- ↑ Islam, Siful (27 July 2020). (in bn)Dhaka Tibune (Moulvibazar). https://bangla.dhakatribune.com/bangladesh/2020/07/27/25700/%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%B2.
- ↑ Russel, Tanjir Ahmed (19 July 2020). (in bn)Manab Zamin. http://www.m.mzamin.com/article.php?mzamin=235816.
- ↑ Islam, Mohammad Majharul (17 August 2020). (in bn)Samakal. https://samakal.com/editorial-subeditorial/article/200833919/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F.
- Singh, Nagendra Kr. (2003). Encyclopaedia of Bangladesh. Anmol Publications Pvt Ltd. pp. 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1390-1.
- Chowdhury, Abdul Momin (1967). Dynastic History of Bengal. Dacca: The Asiatic Society of Pakistan.