திரைலோக்யச்சந்திரன்
சந்திர வம்ச நிறுவனர்
திரைலோக்யச்சந்திரன் (Traillokyachandra) (ஆட்சிக் காலம் பொ.ச. 900 - 930) கிழக்கு வங்காளத்தின் ஹரிகேள இராச்சியத்தை ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் முதல் ஆட்சியாளனாவான். இவனது தந்தை, சுவர்ணசந்திரன் ஹரிகேள இராச்சியத்தின் முந்தைய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்திருந்தான். திரைலோக்யச்சந்திரன், தேவபர்வதத்தை மையமாகக் கொண்டு ( மைனாமதி, கொமிலா ) வம்சத்தை நிறுவினான். மேலும் தன்னை 'மகாராசாதிராசா' என்றும் அறிவித்துக் கொண்டு நவீன கச்சுவா பகுதி வரை தனது ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தினான்.
திரைலோக்யச்சந்திரன் | |
---|---|
ஆட்சிக்காலம் | பொ.ச.900 - 930 |
முன்னையவர் | சந்திர வம்சத்தை நிறுவியவன் |
பின்னையவர் | சிறீசந்திரா |
குழந்தைகளின் பெயர்கள் | சிறீசந்திரா |
மரபு | காயஸ்தர் |
அரசமரபு | சந்திர வம்சம் |
தந்தை | சுவர்ணசந்திரன் |
மதம் | இந்து பின்னர் பௌத்தம் |
சான்றுகள்
தொகு- Singh, Nagendra Kr. (2003). Encyclopaedia of Bangladesh. Anmol Publications Pvt Ltd. pp. 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1390-1.
- Chowdhury, Abdul Momin (1967). Dynastic History of Bengal. Dacca: The Asiatic Society of Pakistan.