சிறீதேவி காக்காடு
சிறீதேவி காக்காடு (Sreedevi Kakkad) என்பவர் இந்தியாவில் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர்.
சிறீதேவி காக்காடு Sreedevi Kakkad | |
---|---|
பிறப்பு | 1 மார்ச்சு 1935 காரல்மன்னா, பாலக்காடு, கேரள, இந்தியா |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | மலையாளம் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி | பாலக்காடு |
துணைவர் | என். என். காக்காடு |
பிள்ளைகள் | சிறீகுமார், சியாம்குமார் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிறீதேவி காக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் உள்ள கரல்மன்னாவில் பிறந்தார். இவரது பெற்றோர் கீழ நரிப்பட்ட சங்கர நாராயணன் நம்பூதிரி மற்றும் நீலி அந்தர்ஜனம் ஆவர். சிறீதேவி கார்ல்மன்னா மற்றும் செர்புளச்சேரியில் உள்ள பள்ளிகளில் படித்தார். இவர் இடைநிலை கல்வியினை பாலக்காட்டில் உள்ள விக்டோரியா கல்லூரியில் பயின்றார்.
சிறீதேவி காக்காடு 26 ஏப்ரல் 1955-ல் மலையாள எழுத்தாளரான என். என். காக்காட்டினை மணந்தார். கோழிக்கோட்டில் வசித்து வந்தனர்.
தொழில்
தொகுசிறீதேவி காக்காடு தேசாபிமானி, மாத்ருபூமி போன்ற மலையாள நாளிதழ்களில் அச்சுப் பார்வைப்படி திருத்துபவராகப் பணியாற்றினார். 1995-ல் மாத்ருபூமியிலிருந்து இருந்து ஓய்வு பெற்றார். இதன் பின்னர் சிறீதேவி காக்காடு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அனைத்திந்திய வானொலியிலும் கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றை வழங்கினார்.[1]
கோழிக்கோடு தேசபோஷினி நூலகத்தின் தலைவரா சிறீதேவி காக்காடு பணியாற்றினார். இவர் நூலகத்தில் செயலில் உறுப்பினராகவும் உள்ளார். தேசபோஷினி மகளிர் சமாஜத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.[1]
முக்கிய படைப்புகள்
தொகுசிறீதேவி காக்காடு தனது கணவர் என். என். காக்காடு பற்றிய ஆர்த்ரமீ தனுமாசரவில், வாமபக்ஷத்து வாய்மொழி, உறவினரான வாமனன் நம்பூதிரியின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதினார்.[1]