சிறீபதி மிசுரா
சிறீபதி மிசுரா (Sripati Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1923 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இயங்கினார். 1980- ஆம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
சிறீபதி மிசுரா Sripati Mishra | |
---|---|
13th உத்தரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 19 July 1982 – 2 August 1984 | |
முன்னையவர் | வி. பி. சிங் |
பின்னவர் | நா. த. திவாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 திசம்பர் 1923 சுல்தான்பூர் மாவட்டம், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 8 திசம்பர் 2002 (வயது 79) இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | அரசியல்வாதி |
பிறப்பு
தொகுசிறீபதி மிசுரா சுல்தான்பூரில் உள்ள சேசுபூர் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் [1] பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை
தொகுசிறீபதி மிசுரா முதன்முதலில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் அதன் அவைத்தலைவரானார், இந்த அலுவலகத்தில் 1980 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி முதல் 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி வரை இருந்தார் [2] 1982 ஆம் ஆண்டு விசுவநாத் பிரதாப் சிங் பதவி விலகல் செய்த பின்னர் இவர் முதலமைச்சரானார் [3] 1982 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் தேதி முதல் 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதி வரை பதவியில் இருந்தார் [4] யோகேந்திர நரேன் இவரது முதன்மை செயலாளராக பணியாற்றினார். [5] பின்னர், 1984 ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிராம அரசியலில் இருந்து மாநிலத்தின் முதல் இடத்தை அடைந்த சில அரசியல்வாதிகளில் சிறீபதி மிசுராவும் ஒருவராவார். .
மேலும், உத்தரபிரதேச வழ்க்கறிஞர்கள் குழுவின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். [6]
இறப்பு
தொகுசிறீபதி மிசுரா நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில் காலமானார். [7]
மற்றவை
தொகுசிறீபதி மிசுரா பட்டக் கல்லூரி என்ற ஒரு கல்லூரி .உத்தரபிரதேசம், சுல்தான்பூரில் இவரது நினைவாக நிறுவப்பட்டது, தற்போது இந்த கல்லூரி மாவட்டத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Shah, Pankaj; Chauhan, Arvind (November 17, 2021). "Mishra: Uttar Pradesh: PM Modi accuses Congress of 'humiliating' its Brahmin CM" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-19.
- ↑ http://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/speakers.htm legislativebodiesinindia.nic.in
- ↑ http://us.rediff.com/news/2007/mar/13uppoll3.htm No UP CM completed full term
- ↑ "Chief Minister". Archived from the original on 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-12. uplegisassembly.gov.in
- ↑ http://164.100.24.167:8080/members/SG_biodata.asp?code=2 Secretary-General Rajya Sabha Biodata
- ↑ [1] Do not commercialise legal profession: Judge
- ↑ [2] Sripati Mishra passes away
- ↑ http://www.ugc.ac.in/inside/alphareco_college.php?resultpage=3&st=P Colleges - University Grants Commission