சிலாங்கூர் சுல்தான் சராபுதீன்

சிலாங்கூர் சுல்தான்

சுல்தான் சராபுதீன் இட்ரிஸ் சா அல்லது சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் (ஆங்கிலம்; மலாய்: Sultan Sharafuddin Idris Shah Alhaj Ibni Almarhum Sultan Salahuddin Abdul Aziz Shah Alhaj; சீனம்: 苏丹沙拉福丁伊德里斯沙阿) என்பவர் நவம்பர் 2001 தொடங்கி தற்போது வரையில் சிலாங்கூர் மாநிலத்தின் சுல்தான் ஆவார்.

சிலாங்கூர் சுல்தான் சராபுதீன்
Sultan Sharafuddin of Selangor
Sultan Sharafuddin Idris Shah
சிலாங்கூர் சுல்தான்
ஆட்சிக்காலம்22 நவம்பர் 2001 - தற்போது வரையில்
முடிசூட்டுதல்8 மார்ச் 2003
முன்னையவர்சுல்தான் சலாவுதீன்
வாரிசுதெங்கு அமீர் சா
மந்திரி பெசார்
பிறப்பு11 திசம்பர் 1945 (1945-12-11) (அகவை 79)[1][fn 1]
இசுதானா ஜெமா, கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
துணைவர்
  • ராஜா சரீனா பிந்தி ராஜா சைனல் அபிதீன்
    (தி. 1968; ம.மு. 1986)
  • நூர் லிசா இட்ரிசு பிந்தி அப்துல்லா
    (தி. 1988; ம.மு. 1997)
  • தெங்கு பரமேசுவரி நோராசிக்கின் (தி. 2016)
குழந்தைகளின்
பெயர்கள்
  • தெங்கு செராஃபினா
  • தெங்கு சடாசா
  • தெங்கு அமீர் சா
பெயர்கள்
Tengku Idris Shah ibni Tengku Abdul Aziz Shah
பட்டப் பெயர்
Sultan Sharafuddin Idris Shah Alhaj ibni Almarhum Sultan Salahuddin Abdul Aziz Shah Alhaj
மரபுஅரச லூவூ பூகிஸ்; தென் சுலாவெசி
தந்தைசிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
தாய்ராஜா சைடத்துல் இசான் தெங்கு படார்
மதம்இசுலாம்

22 நவம்பர் 2001-இல், அவரின் தந்தை சுல்தான் சலாவுதீன் இறப்பிற்குப் பின்னர், சுல்தான் சராபுதீன் அவர்கள் சிலாங்கூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். அவரது முறையான முடிசூட்டு விழா 8 மார்ச் 2003 அன்று, கிள்ளான், இசுதானா ஆலாம் சா அரண்மனையில் நடைபெற்றது.[2]

வாழ்க்கை வரலாறு

தொகு

சுல்தான் சராபுதீன் 24 டிசம்பர் 1945-இல் சிலாங்கூர், கிள்ளான், இசுதானா ஜெமா அரண்மனையில், சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் அவர்களுக்கும்; அவரின் முதல் மனைவி ராஜா சைடத்துல் இசான் தெங்கு படார் (1923–2011) அவர்களுக்கும் முதல் மகனாகப் பிறந்தார்.[3] பிறந்ததும் அவருக்கு தெங்கு இட்ரிஸ் சா என்று பெயர் சூட்டப்பட்டப்பட்டது.

சுல்தான் சராபுதீனின் தந்தை சிலாங்கூர் சுல்தான் இசாமுதீனின் மூத்த மகன் ஆவார். சுல்தான் சராபுதீனின் தந்தை மலேசியாவின் இரண்டாவது யாங் டி பெர்துவான் அகோங் பதவி வகித்தவர் ஆவார். சுல்தான் சராபுதீனின் தாயார் சிலாங்கூர் சுல்தான் சுலைமான் மற்றும் பேராக் சுல்தான் அப்துல் சலீல்; ஆகியோரின் பேத்தி ஆவார்.

சிலாங்கூர் ராஜா மூடா

தொகு

அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, ​​கோலாலம்பூர் மலாய் தொடக்கப் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அவர் ​​கோலாலம்பூர் செயின்ட் ஜான்சு பள்ளியில் 1954 முதல் 1959 வரை பயின்றார்.[3] 1960-இல், அவரின் தந்தை சுல்தான் இசாமுதீன் சிலாங்கூர் சுல்தான் ஆனார். அதே ஆண்டில், சராபுதீன் தன் பதினைந்தாவது வயதில் சிலாங்கூர் ராஜா மூடா (Raja Muda of Selangor) எனும் சிலாங்கூர் இளவரசராக அறிவிக்கப்பட்டார்.

1960-ஆம் ஆண்டு, தம் கல்வியைத் தொடர மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் உள்ள ஏல் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். 1964-இல் அவர் ஐக்கிய இராச்சியத்தின் சர்ரே நகரில் உள்ள லாங்கர்ஸ்ட் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார்.[3]

அரசு சேவை

தொகு

1968-இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரும்பிய பிறகு, சிலாங்கூர் மாநில செயலகத்தில் ஒரு பொது ஊழியராகச் சேர்ந்தார். பின்னர் கோலாலம்பூர் மாவட்ட அலுவலகம் மற்றும் கோலாலம்பூர் காவல் துறையில் பணியாற்றினார்.

1970-இல், கிள்ளான் இசுதானா ஆலாம் சா அரண்மனையில் நடைபெற்ற விழாவில் சிலாங்கூரின் 8-ஆவது இளவரசராகப் பதவியேற்றார். 24 ஏப்ரல் 1999-இல், அவரரின் தந்தை மலேசியாவின் 11-ஆவது யாங் டி பெர்துவான் அகோங் பதவி ஏற்றதும், சராபுதீன் சிலாங்கூர் மாநிலத்தின் அரசப் பிரதிந்தியாக நியமிக்கப்பட்டார்.

சிலாங்கூர் சுல்தான் பதவி

தொகு

2001 நவம்பர் 22-ஆம் தேதி, அவரின் தந்தை சுல்தான் சலாவுதீன் காலமானார். அதன் பின்னர், சராபுதீன் சிலாங்கூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். அவரின் முடிசூட்டு விழா 8 மார்ச் 2003-இல், கிள்ளான், இசுதானா ஆலாம் சா அரண்மனையில் நடைபெற்றது.[4]

அவர் சிலாங்கூர் மாநிலத்தின் சுல்தானாகப் பதவி ஏற்ற பின்னர், அவரால் அல்லது அவரின் தந்தையால் வழங்கப்பட்ட மாநில விருதுகளை அவர் நீக்கம் செய்ததாகவும் அறியப்படுகிறது. 2007-ஆம் ஆண்டில், நிதி மோசடிக்காகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட தொழிலதிபர் ஒருவரின் டத்தோ பட்டத்தை சுல்தான் சராபுதீன் நீக்கம் செய்தார்.

விருதுகள் பறிமுதல்

தொகு

பல்வேறு தவறான செயல்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்; அல்லது திவால் நிலையை எதிர்கொண்டவர்கள்; போன்றோரின் விருதுகளையும் சுல்தான் சராபுதீன் பறிமுதல் செய்துள்ளார்.[5] 2011-இல், கிள்ளான் துறைமுகத் தீர்வையற்ற மண்டலத்தின் ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சான் காங் சோய் என்பவரின் டத்தோ பட்டத்தை சுல்தான் சராபுதீன் இடைநீக்கம் செய்தார்.[6]

2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில், சிலாங்கூர் மாநிலத்தின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான மாநிலச் செயலர் பதவி நியமனம் தொடர்பான நெருக்கடியில் சுல்தான் சராபுதீன் தலையிட்டார். மலேசிய மத்திய அரசு முகமது குசுரின் முனாவி என்பவரை அந்தப் பதவிக்கு நியமித்தது. அதற்கு சுல்தான் சராபுதீன் ஒப்புதல் அளித்தார். இருப்பினும், பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான மாநில அரசு அந்த நியமனத்தை எதிர்த்தது. இறுதியில் மலேசிய மத்திய அரசின் முடிவை பாக்காத்தான் அரப்பான் ஏற்றுக்கொண்டது.

2016-இல், காஜாங் நகர்வு (Kajang Move) எனும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து. அன்வர் இப்ராகீமின் டத்தோ ஸ்ரீ பட்டத்தை சுல்தான் சராபுதீன் ரத்து செய்தார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. His birthday is celebrated on 11 December
  1. "CV HRH Sultan Selangor 100218" (PDF). selangorroyaloffice.files.wordpress.com. Selangor Royal Office. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
  2. "State to reach greater heights". The Star (Malaysia). 9 March 2003. https://www.thestar.com.my/news/nation/2003/03/09/state-to-reach-greater-heights. 
  3. 3.0 3.1 3.2 "Life's a simple and beautiful journey, says Sultan". Sultan of Selangor's Birthday (New Straits Times): pp. 6–8. 11 December 2002. https://news.google.com/newspapers?id=DkAhAAAAIBAJ&dq=sharafuddin%20of%20selangor&pg=1474%2C440681. 
  4. Fernandez, Frederick (9 March 2003). "Day steeped in tradition". The Star. https://www.thestar.com.my/news/nation/2003/03/09/day-steeped-in-tradition. 
  5. "Selangor Sultan strips trader of title". New Straits Times. 9 August 2007. http://findarticles.com/p/news-articles/new-straits-times/mi_8016/is_20070809/selangor-sultan-strips-trader-title/ai_n44373155/. 
  6. "Laman web rasmi Darjah Kebesaran Negeri Selangor". Archived from the original on 24 August 2019. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.
  7. "Selangor Sultan revokes Datuk Seri award given to Anwar Ibrahim" (in en). The Straits Times. 2014-12-04. https://www.straitstimes.com/asia/se-asia/selangor-sultan-revokes-datuk-seri-award-given-to-anwar-ibrahim. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் சிலாங்கூர் சுல்தான்
2001 – தற்போது வரையில்
பதவியில் உள்ளார்
வாரிசு:
தெங்கு அமீர் சா