சில்க் ஏர் பறப்பு 185

சில்க் ஏர் பறப்பு 185 (SilkAir Flight 185) இந்தோனேசியாவின் ஜாகர்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு பறக்கின்ற வழமையான, அட்டவணையிலுள்ள ஓர் பயணியர் பறப்பு ஆகும். திசம்பர் 19, 1997 அன்று இயக்கப்பட்ட இந்தப் பறப்பு விபத்துக்குள்ளாகி மூசி ஆற்றில் விழுந்து பயணித்த 104 பேரும் உயிரிழந்தனர்.

சில்க் ஏர் பறப்பு 185
9V-TRF இன் விளக்கப்படம்
நிகழ்வு சுருக்கம்
நாள்19 திசம்பர் 1997
சுருக்கம்கொலை-தற்கொலை (பூசலில்)
இடம்பாலெம்பாங், சுமாத்திரா, இந்தோனேசியா
2°27′30″S 104°56′12″E / 2.45833°S 104.93667°E / -2.45833; 104.93667
பயணிகள்97
ஊழியர்7
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்104 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 737-36N
இயக்கம்சில்க் ஏர்
வானூர்தி பதிவு9V-TRF
பறப்பு புறப்பாடுசுகர்ணோ-அட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சேருமிடம்சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்

விபத்திற்கான காரணங்களை இரு அமைப்புகள் ஆய்வு செய்தன. இதில் ஒன்றான இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழுவால் (NTSC) எந்த இறுதி முடிவுக்கும் வர இயலவில்லை. மற்ற அமெரிக்க தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் (NTSB) பெரும்பாலும் தலைமை ஓட்டுனரால், வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பறப்புக் கட்டுப்பாடு செய்கைகளால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது என முடிவு செய்தது.[1][2] சன்டோசோ சயோகோ என்ற இந்தோனேசிய ஆய்வாளரின் கூற்றுப்படி இதே முடிவிற்கு இந்தோனேசியக் குழுவும் வந்தது; ஆனால் குழுத்தலைமை ஏற்கவில்லை[3]

விபத்தில் இறந்தவர்களில் பலரின் உறவினர்கள் தொடர்ந்த நட்ட ஈடு வழக்கில் முன்னரே அறியப்பட்டிருந்த போயிங் 737 வானூர்தியின் சுக்கான் பகுதியின் தானியக்கப் பிழைகள் விபத்துக்குக் காரணமாக சுட்டப்பட்டன. இந்த வகை வானூர்திகளில் சுக்கான்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் இந்த உறவினர்களுடன் நீதிமன்றத்திற்கு வெளியே உடன்பாடு கண்டு வழக்கை முடித்தது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Accident description at the Aviation Safety Network
  2. Job, MacArthur. "Final Flight: SilkAir." Flight Safety Australia. January–February 2008.
  3. "Pushed to the Limit." Mayday தொலைக்காட்சித் தொடர்.
  4. "SilkAir crash families finally receive answers with court verdict", Channel NewsAsia, 15 July 2004.

வெளி இணைப்புகள் தொகு

  வெளிப் படிமங்கள்
  சில்க் ஏரின் 737-36N வானூர்தியின் படம் ( www.airliners.net இலிருந்து)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்க்_ஏர்_பறப்பு_185&oldid=3486220" இலிருந்து மீள்விக்கப்பட்டது