சில்வியோ பெர்லுஸ்கோனி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சில்வியோ பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, பிறப்பு செப்டம்பர் 29, 1936) முன்னாள் இத்தாலியப் பிரதமர். மூன்று முறை - 1994-1995, 2001-2006, 2008-11 ஆகிய காலகட்டங்களில் இத்தாலியின் பிரதமராக இருந்தார். ஃபோர்சா இத்தாலியா அரசியல் கட்சியை 1993இல் தொடங்கி இன்று அக்கட்சியின் தலைவர் ஆவார்.
அரசியல் தவிர தொழிலதிபர், இசை எழுத்தாளர், விளையாட்டு அணி அதிபர், வங்கி உரிமையாளர், மற்றும் ஊடக உரிமையாளரும் ஆவார். இத்தாலிய செல்வந்தர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.