டி. என். சிவஞானம் பிள்ளை

இந்திய அரசியல்வாதி
(சிவஞானம் பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திவான் பகதூர் சர் திருநெல்வேலி நெல்லையப்ப சிவஞானம் பிள்ளை ( டி. என். சிவஞானம் பிள்ளை, ஏப்ரல் 1, 1861 – 13 சூன் 1936)[1] ஒரு தமிழக அரசியல்வாதி, அரசு நிருவாகி மற்றும் வழக்கறிஞர். நீதிக்கட்சியை சேர்ந்த இவர் பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

தின்னவேலி நெல்லியப்ப சிவஞானம் பிள்ளை
Tinnevely Nelliappa Sivagnanam Pillai
வளர்ச்சித் துறை அமைச்சர் (சென்னை மாகாணம்)
பதவியில்
19 நவம்பர் 1923 – 3 திசம்பர் 1926
பிரதமர்பனகல் அரசர்
ஆளுநர்வெல்லிங்டன் பிரபு

சர் சார்லசு சியார்ச் டொட்ஹண்டர் (பதில்),

சியார்ச் கோசென்
முன்னையவர்கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
பின்னவர்ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1861-04-01)1 ஏப்ரல் 1861
திருநெல்வேலி, சென்னை மாகாணம்
இறப்புசூன் 13, 1936(1936-06-13) (அகவை 75)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிநீதிக் கட்சி
முன்னாள் கல்லூரிசென்னை கிறித்துவக் கல்லூரி
வேலைசட்டமன்ற உறுப்பினர், அரச நிருவாகி
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சைவ வேளாள சாதியினைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை, சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்து 1882ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் குடியியல் பணித்துறைக்கு (இந்தியன் சிவில் செர்விஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு துணை ஆட்சியராக சிறிது காலம் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நீதிக்கட்சியில் இணைந்தார். 1919ல் திருநெல்வேலித் தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923-26 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[2][3][4][5]

பிற பணிகள்

தொகு

சிவஞானம் பிள்ளை திருநெல்வேலி தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத் தலைவராகவும், திருநெல்வேலி நாட்டாண்மைக் கழக முதல் தலைவராகவும், சென்னை மாகாண வளர்நெறி அமைச்சராகவும், இருந்து பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 செய்திகளும் குறிப்புகளும், செந்தமிழ்ச் செல்வி, ஆடி 1936
  2. Studdert-Kennedy, Gerald (1998). Providence and the Raj: Imperial Mission and Missionary Imperialism. SAGE Publications. pp. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761992774, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761992776.
  3. F. Irschick, Eugene. Tamil Revivalism in the 1930s. Cre-A\year=1986. p. 29.
  4. Rajaraman, P. (1988). The Justice Party: A Historical Perspective, 1916-37. Poompozhil Publishers. p. 217.
  5. Ralhan, O. P. Encyclopaedia of Political Parties. Anmol Publications Pvt. Ltd. p. 236.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._சிவஞானம்_பிள்ளை&oldid=3943704" இலிருந்து மீள்விக்கப்பட்டது