சிவன் கோயில், சேந்தமங்கலம்

அன்பே சிவம்

சிவன் கோயில், சேந்தமங்கலம் என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கோயிலின் அருகே பெரிய தெப்பக்குளம் உள்ளது.

சேந்தமங்கலம் சௌந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேசுவரர் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°17′15″N 78°14′17″E / 11.28750°N 78.23806°E / 11.28750; 78.23806
பெயர்
பெயர்:சேந்தமங்கலம் சௌந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சேந்தமங்கலம்
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோமேசுவரர்
தாயார்:சௌந்திரவள்ளி

ஆலய வரலாறு

தொகு

சேந்தமங்கலத்தை ஆண்ட சோமபுரி ராஜா என்னும் மன்னனால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

தெய்வங்கள்

தொகு

வழிபடும் முறை

தொகு

இக்கோயிலின் கோபுரத்தினை கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடிமரத்தினை வணங்க வேண்டும். அதன் அருகே இருக்கும் பலிபீடத்தினை வணங்கி, அதில் தீய எண்ணங்களை பலியிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கன்னி விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணமும், தலையில் குட்டியும் வணக்கம் செய்யலாம். விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால் மற்றும் பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும். பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானைமுருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.

பூஜைகள்

தொகு

தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.

போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சிறப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு