சிவபுரம், தஞ்சாவூர் மாவட்டம்
சிவபுரம் (Sivapuram) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிவபுரம் மொத்த மக்கள் தொகை 1,133 ஆகும்.
சிவபுரம் Sivapuram | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°56′N 79°25′E / 10.93°N 79.41°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் மாவட்டம் |
வட்டம் | கும்பகோணம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,279 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
Telephone code | 0435 |
சிவபுரத்தில் அமைந்துள்ள சிவ குருநாத சுவாமி கோயிலால் பிரபலமானது. தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 276 சிவ தலங்களில் இதுவும் ஒன்று. 1955ஆம் ஆண்டு சோழ வெண்கலங்கள் காணாமல் போன சம்பவத்தினால் இந்த கிராமம் வெளி உலகிற்குத் தெரியவந்தது.
அமைவிடம்
தொகுசிவபுரம் கும்பகோண வட்டத்தின் தலைமையகத்திலிருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.[1] சீனிவாசநல்லூர், நெய்குன்னம், கிரங்குடி, கோத்தங்குடி மற்றும் வலங்கைமான் ஆகியவை அண்டை கிராமங்களில் சில.
மக்கள் தொகை
தொகு2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவபுரத்தின் மக்கள்தொகை 1,133ஆக இருந்தது. இவர்களில் 8 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். 276 வீடுகள் உள்ளன.[2] 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 113.
கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 87.65 ஆக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 92.78 ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 82.19 ஆகவும் இருந்தது.
ஆர்வமுள்ள இடங்கள்
தொகுசிவகுரு நாதசுவாமி கோயில்
தொகுசிவபுரம் இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிவகுருநாதசுவாமி கோயிலால் பிரபலமானது.[3] பண்டைய சோழ ராஜ்யத்தில் முதன்மை தெய்வம் சிவகுரு நாதர் அல்லது சிவபுர நாதர் என்று குறிப்பிடப்படுகிறது.[1] வெவ்வேறு புனைவுகளின்படி, விஷ்ணு, பிரம்மா மற்றும் குபேரர் இங்கு சிவனை வெவ்வேறு காலங்களில் வணங்கினர் என அறியப்படுகிறது.[1] குபேரர் இங்கு வழிபட்டதாக நம்பப்படுவதால், இந்த கிராமம் குபேர புரி என்றும் அழைக்கப்படுகிறது.[1]
புனித செபாஸ்டியன் தேவாலயம்
தொகுசிவபுரத்தின் மற்றொரு முக்கிய வழிபாடுத் தலமாகப் புனித செபாத்தியார் தேவாலயம் உள்ளது.