சிவப்பு கூண் வண்டு
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தென்னை சிவப்புக் கூன் வண்டு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சிவப்பு கூண் வண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | R. ferrugineus
|
இருசொற் பெயரீடு | |
Rhynchophorus ferrugineus (Olivier, 1790) [1] | |
வேறு பெயர்கள் | |
|
சிவப்பு கூண் வண்டு அல்லது செந்நிற நீள்மூஞ்சி வண்டு (red palm weevil, Rhynchophorus ferrugineus, Asian palm weevil or sago palm weevil. ) என்பது தென்னை மற்றும் பனை மரங்களை தாக்கும் பூச்சியாகும். இப்பூச்சி 2 முதல் 5 செ.மீ நீளம் வளரக்கூடியவை. இவை சிவப்பு நிறத்தில் காணப்படும். மற்ற நிறங்களிலும் இவை காணப்படுகின்றன அவை வேறு பெயரில் அழைக்கப்படுகிறது [2]). இதன் லார்வா எனப்படும் புழுக்கள் ஒரு மீட்டர் வரை மரத்தண்டுகளில் துளையிடும் இதனால் லார்வா உள்ள மரமானது பலவீனமடைந்து இறுதியில் பட்டுப்போய்விடும். இதனால் இவ்வண்டுகள் தென்னை, பேரிச்சம் மரம், பனை மரம் போன்றவற்றை தாக்கும் ஆற்றல் மிக்க பூச்சியினமாக கருதப்படுகிறது [3]. ஆசியாவின் வெப்பமண்டலத்தை சேர்ந்த இவ்வண்டு ஆப்பிரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் பரவியது. பின் 1980களில் நடுநிலக் கடல் (மத்திய தரைக்கடல்) நாடுகளை அடைந்தது. இவ்வகை வண்டுகள் 1994ல் முதலில் எசுப்பானியாவில் இனங்காப்பட்டது [4]. 2006ல் பிரான்சில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வகை வண்டுகள் அமெரிக்க கண்டத்தில் முதன் முதலில் குராசோ நாட்டில் இருந்தது 2009 சனவரி மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது [5], அவ்வாண்டே அருபா நாட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது [6]. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கலிபோர்னியா மாநிலத்தின் லாங்குனா பீச்சில் இருப்பது 2010ல் கண்டுபிடிக்கப்பட்டது [7][8].
மேற்கோள்கள்
தொகு- ↑ Rhynchophorus ferrugineus at European and Mediterranean Plant Protection Organization (EPPO)
- ↑ Hallett, R.H., Crespi, B.J., Borden, J.H. 2004. Synonymy of Rhynchophorus ferrugineus (Olivier), 1790 and R. vulneratus (Panzer), 1798 (Coleoptera, Curculionidae, Rhynchophorinae). J. Nat. Hist. 38:2863-2882
- ↑ Rhynchophorus ferrugineus at North American Plant Protection Organization (NAPPO)
- ↑ Ferry & Gómez. 2002. The red palm weevil in the Mediterranean. Vol. 46, No 4, Palms (formerly Principes), Journal of the International Palm Society. link பரணிடப்பட்டது 2009-02-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Biologische bestrijding Red Palm Weevil" Ben Kleine, March 28th, 2009 on Amigo.com
- ↑ 2010 California Farmer periodical "World's worst palm pest in state" Richardson[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [1] Orange County Register, "Destructive exotic beetle found in Laguna Beach."
- ↑ [2] பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் CDFA; Red Palm Weevil, Worst Known Pest of Palm Trees Detected in Laguna Beach