சியோப்பூர் மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(சிவப்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சியோப்பூர் மாவட்டம் (Sheopur District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சியோப்பூர் ஆகும். விஜய்ப்பூர், கராஹல் மற்றும் பதோதா மற்ற நகரங்கள் ஆகும். இது சம்பல் கோட்டத்தில் அமைந்துள்ளது.

சியோப்பூர் மாவட்டம்
श्योपुर जिला
சியோப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சம்பல் கோட்டம்
தலைமையகம்சியோப்பூர்
பரப்பு6,606 km2 (2,551 sq mi)
மக்கட்தொகை687,952 (2011)
மக்கள்தொகை அடர்த்தி104/km2 (270/sq mi)
படிப்பறிவு58.0
பாலின விகிதம்902
வட்டங்கள்5
மக்களவைத்தொகுதிகள்மொரேனா மக்களவை தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இம்மாவட்டத்தில் குனோ வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் 21 மாவட்டங்களில் சியோப்பூர் மாவட்டமும் ஒன்றாகும்.[1]

பொருளாதாரம்

தொகு

வறண்ட வானிலை கொண்டது இம்மாவட்டம். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாக தமோ மாவட்டம் இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. [2]

மாவட்ட நிர்வாகம்

தொகு

சியோப்பூர் மாவட்டம் மூன்று வருவாய் உட்கோட்டங்களும்; சியோப்பூர், பரோடா, விஜய்ப்பூர், வீர்பூர் மற்றும் கரஹல் என ஐந்து வருவாய் வட்டங்களையும் கொண்டது. இம்மாவட்டம் சியோப்பூர், விஜய்பூர் மற்றும் கரஹல் என மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், சியோப்பூர், பரோடா மற்றும் விஜய்பூர் என மூன்று நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

அரசியல்

தொகு

சியோப்பூர், பரோடா, விஜய்ப்பூர், வீர்பூர், காரஹல் என இம்மாவட்டம் சியோப்பூர் மற்றும் விஜய்ப்பூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு சட்டமன்ற தொகுதிகளும் மொரேனா மக்களவைத் தொகுதிக்குட்பட்டது.[3]

மக்கள் தொகையியல்

தொகு

2011-ஆம் ஆண்டி மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சியோப்பூர் மாவட்ட மக்கள் தொகை 687,952 ஆகும். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.96% ஆக உயர்ந்துள்ளது. 6606 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சியோப்பூர் மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 104 ஆக உள்ளது. ஆகும். பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி எழத்தறிவு 58.02% ஆக உள்ளது.

மாவட்ட எல்லைகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 226, 250. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோப்பூர்_மாவட்டம்&oldid=3929877" இலிருந்து மீள்விக்கப்பட்டது