சிவம் (தொலைக்காட்சித் தொடர்)

சிவம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொடர் ஆகும். இத்தொடரானது 'தேவோன் கே தேவ்... மகாதேவ்' என்ற பெயரில் லைப் ஓகே தொலைக்காட்சியில் திசம்பர் 18, 2013 முதல் திசம்பர் 14, 2014 வரை ஒளிபரப்பாகி 820 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

சிவம்
இத்தொடரின் சுவரொட்டி
வேறு பெயர்'மகாதேவ் (இந்தி)
கைலாசநாதன் (மலையாளம்)
ஹர ஹர மகாதேவா (தெலுகு)
சிவம் (தமிழ்)'
வகைபக்தி நாடகம்
இயக்கம்நிக்ஹில் சின்ஹா
படைப்பு இயக்குனர்அனிருத் பதக்
முகப்பிசைசிவ சிவ
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்று மொழிகள்
தமிழ்
மலையாளம்
தெலுங்கு
பருவங்கள்01
அத்தியாயங்கள்820
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைலைப் ஓகே
ஒளிபரப்பான காலம்18 திசம்பர் 2011 (2011-12-18) –
14 திசம்பர் 2014 (2014-12-14)
வெளியிணைப்புகள்
இணையதளம்

2018 முதல் இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் சிவம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. ஸ்டார் பாரத் என்ற இந்தி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 5, 2018 முதல் மறு ஒளிபரப்பு ஒளிபரப்பப்படுகின்றது.

சீசன் 1

தொகு

சிவம் தொடரின் தொடக்கம் சிவபெருமான் சதியின் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. அண்ட சராசரங்களை படைத்தப் பின்பு, உலக உயிர்களை தோற்றுவிக்க பிரம்மா முயன்றார். எனினும் அவரால் சக்தியில்லாமல் இயலவில்லை. அதனால் சிவபெருமானிடமிருந்து சக்தியை பிரிக்க கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகி்ழ்ந்த சிவபெருமான் தன்னில் பாதியாக இருந்த சக்தியை தனியே பிரித்தார். அதலிருந்து சக்தியும் சிவனும் தனித்தே இருந்தார்கள். மீண்டும் சக்தியை சிவனுடன் இணைக்க எண்ணம் கொண்ட திருமாலும் பிரம்மதேவனும் சக்தியை பிரஜாபதி தட்சனின் குமாரியாக பிறக்க வைத்தார்கள். தட்சன் தன் தந்தையான பிரம்மாவின் தலையை கொய்து, பூசை இல்லாமல் போக சாபமளித்த சிவபெருமான் மீது கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் சிவபெருமான் வணங்குவதையும், அவரைப் பற்றி பெருமையாக பேசுவதையும் தடை செய்துள்ளார். தாட்சாயினி சிவபெருமான் என்றால் யார் என்றே அறியாமல் வளர்கிறார்.

ஒரு நாள் சிவபெருமானின் ருத்திராட்சம் தாட்சாயினி நீர் எடுக்க செல்லும் போது கண்ணில் படுகிறது. அதை கையில் எடுக்கும் தாட்சாயினியை அவரின் சகோதரிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். அந்நிகழ்விலிருந்து சிவபெருமானை பல சம்பங்கள் மூலம் அறிகிறார். ததிசி முனிவர், மாதங்கி துணையுடன் சிவபெருமான் மீது தான் காதல் கொண்டிருப்பதை உணர்கிறார்.காதலை உணர்ந்த சதி தன் காதலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தி சிவனை அழைக்கிறாள்.சிவனும் அழைப்பை ஏற்று வருகை தர இருவரும் இணைந்து அனைவரின் முன்னிலையிலும் நடனத்தின் மூலம் தங்களின் காதலை வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகர்கள்

தொகு
  • விக்ரம்ஜீத் வர்ஸ்க் - பாணாசுரன்
  • பாலாக் நாஸ் / ராகினி ரிஷி - லட்சுமி
    • ருக்மணி
    • ஹரிப்ரியா

விருதுகள்

தொகு
வருடம் விருதுகள் நிகழ்வு பகுப்பு முன்மொழிதல் முடிவு
2012 5வது போரோபிளஸ் கோல்ட் அவார்ட்ல் சிறந்த நடிகர் மோகிட் ரைனா பரிந்துரை
சிறந்த நடிகை மௌனி ராய் பரிந்துரை
2013 பிக் ஸ்டார் என்டெர்டெனிங் அவார்ஸ் சிறந்த கேளிக்கை தொலைக்காட்சி நடிகர் (ஆண்) மோகிட் ரைனா வெற்றி
சிறந்த பொழுதுபோக்கு தொடர் தேவன் கி தேவ்... மகாதேவ் பரிந்துரை
2013 இந்தியன் டெலி அவார்ஸ் சிறந்த நடிகர் மோகிட் ரைனா வெற்றி
தொலைக்காட்சி சிறப்பு காட்சி வடிவமைப்பு விருது ஹார்டிக் கஜார் வெற்றி
சிறந்த கலை இயக்குனர் சோகாஸ் பார்ட்வா வெற்றி
சிறந்த ஒப்பனையாளர் நிகத் மரிமம் நீருஷா வெற்றி
சிறந்த இயக்குனர் நிஹில் சின்ஹா வெற்றி
சிறந்த கதை ஆசிரியர் அனிருத் பதக் வெற்றி
சிறப்பு தொன்மவியல்/வரலாற்று தொடர் தேவன் கி தேவ்... மகாதேவ் வெற்றி

மொழிமாற்றம்

தொகு

இத்தொடர் நாடகம் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் கைலாசநாதன் என்ற பெயரில் மலையாளத்திலும், மா தொலைக்காட்சியில் ஹர ஹர மகாதேவா என்ற பெயரில் தெலுங்கிலும், பெங்காலி, ஓடியா, மராத்தி போன்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு