சிவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

திருச்சிராப்பள்ளி மாவட்ட கல்லூரி

சிவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Shivani College of Engineering and Technology) (முன்னர் சிவானி தொழில்நுட்ப நிறுவனம்) என்பது ஐ.எஸ்.ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட [1] பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளது. 2009 இல் தொடங்கப்பட்ட இக் கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] இதற்கு புது தில்லியின் ஏ.ஐ.சி.டி.இ. ஒப்புதலைப் பெற்றுள்ளது. இக்கல்லூரியானது சிவானி குழும கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதி ஆகும்.

சிவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோள்Sowing Seeds of Knowledge
நிறுவப்பட்டது2009
வகைதனியார்
அவைத்தலைவர்முனைவர் பி. செல்வராஜ்
இயக்குனர்முனைவர் இ. இராமசாமி
அமைவுதிருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்40 ஏக்கர்
இணையதளம்http://www.shivani-sit.ac.in

நோக்கம்

தொகு

"திறமையான தொழில் வல்லுநர்களாகவும் சிறந்த குடிமக்களாகவும் இருக்க இளம் மனங்களை ஊக்குவிக்கும் உலகத்தரம் வாய்ந்த நிறுவனமாக இருக்க கல்லூரி இருக்க வேண்டும்." [3]

நிறுவனர் மற்றும் தலைவர்

தொகு

சிவானி குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவராக முனைவர் பி. செல்வராஜ் உள்ளார். இவர் தமிழ்நாட்டையும், அதைச் சுற்றியுள்ள பல கல்வி நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்கு கருவியாக இருந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார் [4] மேலும் இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான திருச்சி மாவட்ட நலக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகம் இவருக்கு 'துவக்கக் கல்வி நிலையில் குழந்தைகள் கல்வியை இடை நிற்றலை தடுக்கும் முறைகள்' என்ற பிரிவில் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. [5]

வளாகம்

தொகு

இக்கல்லூரி வளாகமானது திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைதியான சூழலில் 40 ஏக்கர் பசுமையான வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [6]

வழங்கப்படும் படிப்புகள்

தொகு

இளநிலை பட்டங்கள்:

தொகு

முதுநிலை பட்டங்கள்:

தொகு

சகோதரி நிறுவனங்கள்

தொகு
  • சிவானி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட் (எஸ்.எஸ்.பி.எம்) பரணிடப்பட்டது 2019-11-25 at the வந்தவழி இயந்திரம், திருச்சி [8] [9]
  • சிவானி பொறியியல் கல்லூரி (எஸ்.இ.சி) பரணிடப்பட்டது 2021-01-24 at the வந்தவழி இயந்திரம், திருச்சி
  • ஏ. கே. கே. வி மெட்ரிகுலேசன் பள்ளி, அண்ணாமலை நகர், திருச்சி.
  • எஸ். எஸ். கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோவை.
  • எஸ். எஸ். கே பாலிடெக்னிக் கல்லூரி, திருச்சி.
  • ஸ்ரீ ரெங்கேஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி, பொட்டிரெடிபட்டி.
  • ஸ்ரீ ரெங்கேஸ்வரர் கல்வியியல் கல்லூரி, பொட்டிரெடிபட்டி.
  • ஸ்ரீ ரெங்கேஸ்வரர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பொட்டிரெடிபட்டி.
  • ஸ்ரீ மரியம்மன் கல்வியியல் கல்லூரி, திருச்சி.
  • ஸ்ரீ மரியம்மன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி.
  • சிவானி மெட்ரிகுலேஷன் பள்ளி, தண்டேன்காரர்பேட்டை, திருச்சி.
  • சிவன் கல்வியியல் கல்லூரி, தண்டென்கர்ரன்பேட்டை, திருச்சி.
  • சிவபாகியம் தொழில்துறை பள்ளி, தண்டேன்காரன்பேட்டை, திருச்சி.

குறிப்புகள்

தொகு
  1. ISO
  2. Affiliation
  3. vision
  4. Chairman
  5. "Chairman's profile". Archived from the original on 2019-11-27. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  6. location[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "courses". Archived from the original on 2013-08-14. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.
  8. sister institutions
  9. "institutions". Archived from the original on 2014-06-15. பார்க்கப்பட்ட நாள் 2019-09-13.

வெளி இணைப்புகள்

தொகு