சிவானி வர்மா

சிவானி வர்மா (Shivani Verma) (பிறப்பு: புனே, மே 31, 1972) பிரம்ம குமாரி சிவானி, சகோதரி சிவானி அல்லது பி.கே.சிவானி எனவும் அழைக்கப்படும் இவர்,[1] இந்தியாவில் பிரம்ம குமாரிகள் ஆன்மீக இயக்கத்தில் ஆசிரியராக இருக்கிறார்.[2]

பாங்காக்கில் அவேக்கிங் வித் பிரம்ம குமாரிஸ் என்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பி.கே.சிவானியும், சுரேஷ் ஓபராயும் தோன்றுகின்றனர்.

சுயசரிதை தொகு

இவரது பெற்றோர் இவர் குழந்தையாக இருந்தபோது பிரம்ம குமாரி இயக்கத்தைப் பின்தொடரத் தொடங்கினர். இவர் தனது 20களின் ஆரம்பத்தில் இயக்கங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.[3]

சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைபட்டப்படிப்பை தங்கப் பதக்கத்துடன் முடித்தார். பின்னர் மகாராட்டிரா தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். ஆரம்பத்தில், தில்லியில் பிரம்மா குமாரி இயக்கத்தின் தொலைக்காட்சி விளக்கக்காட்சிகளைத் தயாரிப்பதில் இவர் பணியாற்றினார். அங்கு மூத்த ஆசிரியர்கள் போதனைகளை பதிவு செய்வார்கள். 2007ஆம் ஆண்டில், மற்ற ஆசிரியர்கள் கிடைக்காததால், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இவரே பதிலளிக்கத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.[4] 2007ஆம் ஆண்டில், ஆஸ்தா தொலைக்காட்சிக்காக அவேக்கனிங் வித் பிரம்ம குமாரிஸ் என்ற தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கப்பட்டது. இதில் இவரை இணை தொகுப்பாளர் கானு பிரியா பேட்டி கண்டார்.[2][3]

சுரேஷ் ஓபராய் உடனான அவரது தொலைக்காட்சித் தொடர் உரையாடல்கள் 2015ஆம் ஆண்டு புத்தகமான ஹேப்பினஸ் அன்லிமிடெட்: அவேக்கிங் வித் பிரம்ம குமாரிஸ் என்ற நூலில் இடம் பெற்றன.[5]

இவர், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்து, உறுப்பு தானத்தை ஊக்குவித்தல் [6] பெற்றோருக்குரிய திட்டங்கள்,[7] பிரம்ம குமாரிகளின் நிகழ்வுகள் போன்ற தொண்டு நிகழ்ச்சிகளில் தோன்றினார். 2017ஆம் ஆண்டில் இவர் உலக மனநல சங்கத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.[8]

இவருக்கு பிகேசிவானி என்ற யூடியூப் தொலைக்காட்சி இருக்கிறது.[9]

விருதுகளும் அங்கீகாரமும் தொகு

இவர் 2014இல் அசோசாம் [10] மகளிர் பத்தாண்டு வெற்றியாளர்களுக்கான விருதையும், 2019 இல் நாரி சக்தி விருதையும் பெற்றார் [11]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Being normal, being spiritual". Mid Day. 12 December 2010. Archived from the original on 16 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-03-27.
  2. 2.0 2.1 Ahuja, Aditi (7 June 2010). "Studying engineering helped me think logically: Brahmakumari Shivani". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2014-03-27.
  3. 3.0 3.1 "Being normal, being spiritual". Mid Day. 12 December 2010. Archived from the original on 16 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-03-27.
  4. "'Ensure that your happiness doesn't depend on others'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 9 March 2010. பார்க்கப்பட்ட நாள் 2014-03-27.
  5. Happiness unlimited : conversational adaptation from the internationally acclaimed TV series : awakening with Brahma Kumaris. https://www.worldcat.org/oclc/910236837. 
  6. "Greatest gift, say spiritual gurus as doctors allay fears". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  7. "Brahma Kumaris in association with New Delhi Times organizes spiritual program at India Islamic Cultural Centre". New Delhi Times. 23 November 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  8. "General Assembly – Berlin 2017". World Psychiatric Association. Archived from the original on 14 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.
  9. "BKShivani - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
  10. "BK Shivani". HuffPost India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
  11. "President confers Nari Shakti awards on 44 women". The Tribune. 9 March 2019. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவானி_வர்மா&oldid=3742294" இலிருந்து மீள்விக்கப்பட்டது