சிவ நாராயணமூர்த்தி
சிவ நாராயணமூர்த்தி (Siva Narayanamoorthy, இறப்பு: 7, திசம்பர், 2022) என்பவர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இயக்குநர் விசுவால் வீடுதோறும் வசந்தம் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டர்.[1] பின்னர் மு. களஞ்சியம் இயக்கிய பூந்தோட்டம் படத்தின் வழியாக திரைப்பட்ட நடிகராக அறிமுகமானார்.[2] தன் உடலமைப்பு, முக பாவனைகளைக் கொண்டு காவல் அதிகாரி, பண்ணையார் போன்ற படங்களில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்து நடித்ததற்காக அறியப்படும் இவர் சுமார் 2018க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3]
குடும்பம்
தொகுசிவ நாராயணமூர்த்தி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டையைச் சேர்ந்தவர்.[4] இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும், லோகேஷ், இராம்குமார் என்ற இரு மகன்களும், சிறீதேவி என்ற மகளும் உள்ளனர்.[5]
நடித்த படங்களில் சில
தொகு- பூந்தோட்டம் (1998)
- படையப்பா (1999)
- சாமி (2003)
- தாமிரபரணி (2007)
- ஈநாடு (2009)
- சந்திரமுகி (2010)
- வேலாயுதம் (2011)
- ஆதித்ய நாராணனா (2012)
- வாக்கப்பட்ட சீமை (2012)
- விந்தை (2015)
குறிப்புகள்
தொகு- ↑ Rajkumar (2022-12-08). "ஃபங்ஷனில் தோற்றத்தை பார்த்து நடிக்க அழைத்து வந்த விசு - சிவநாராயணனின் Flashback". Tamil Behind Talkies. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!". News18 Tamil. 2022-12-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "Popular Tamil actor Siva Narayanamoorthy passes away". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ "திடீர் உடல்நலக்குறைவு.. நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
- ↑ S, Karthikeyan. "Siva Narayana Moorthy passed away: நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.