சி. என். லட்சுமிகாந்தன்

சி. என். லட்சுமிகாந்தன், இந்து நேசன், சினிமாத் தூது உள்ளிட்ட மஞ்சள் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தவர்.[1][2] திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி தமிழில் ஆபாசமாக எழுதி அதன் காரணமாகவே கொலை செய்யப்பட்டவர்.

சினிமாத் தூது தொகு

சினிமாத் தூது, தமிழில் முதல் முதலாக வெளிவந்த மஞ்சள் பத்திரிகையாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட காகிதப் பற்றாக்குறையால் இவ்விதழுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசுக்குத் தெரியாமல் இவ்விதழ் சி. என். லட்சுமிகாந்தனால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

இந்து நேசன் தொகு

சினிமாத் தூது, அரசாங்கத்தால் மூடப்பட்ட பிறகு அதுவரையில் நல்ல முறையில் நடந்து வந்த இந்து நேசன் பத்திரிகையில், திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி தமிழில் ஆபாசமாக எழுதத் தொடங்கினார்.

கொலை வழக்கு தொகு

8-11-1944 அன்று, சென்னை புரசவாக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டு, 9-11-1944 அன்று உயிரிழந்தார்.[3]

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "சினிமா கிசு கிசு வளர்ந்த கதை…". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Agathiyar-Groups". பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே.வை சிறைக்கு அனுப்பிய லட்சுமிகாந்தன் கொலை எப்படி நடந்தது?
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._லட்சுமிகாந்தன்&oldid=3795626" இலிருந்து மீள்விக்கப்பட்டது