சி. எஸ். ராதாதேவி

இந்தியப் பின்னணிப் பாடகி

சி. எஸ். ராதாதேவி (C. S. Radhadevi) கேரளாவைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகியும், பின்னணி குரல் கலைஞரும், வானொலிக் கலைஞரும் மற்றும் நடிகையும் ஆவார். இராதாதேவி ஏழு தசாப்தங்களாக மலையாள வானொலி ஒலிபரப்புத் துறையில் உள்ளார். 30 வருடங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். கேரளா சங்கீத நாடக அகாதமி கூட்டுறவு, கேரள சங்கீத நாடக அகாதமி விருது, கேரள சங்கீத நாடக அகாதமியின் குருபூஜா விருது, கேரளத் திரைப்பட விமர்சகர் விருது மற்றும் மலையாளத் திரைத்துறைக்கு இவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சி. எஸ். ராதாதேவி
சி. எஸ். ராதாதேவி
பிறப்பு1931 (அகவை 92–93)
திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
பணிதனி பாடகர், பின்னணிக் குரல் கலைஞர், வானொலிக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
என். நாராயணன் நாயர்
புகழ்ப்பட்டம்கேரளா சங்கீத நாடக அகாதமி கூட்டுறவு
கேரள சங்கீத நாடக அகாதமி விருது
கேரள சங்கீத நாடக அகாதமியின் குருபூஜா விருது
கேரளத் திரைப்பட விமர்சகர் விருது
மலையாளத் திரைத்துறைக்கு
இவர் செய்த சிறந்த பங்களிப்பிற்காக கேரள மாநில
திரைப்பட விருது
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரலிசை

வாழ்க்கை வரலாறு.

தொகு

சி. எஸ். ராதாதேவி 1931 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரில சிவசங்கரன் பிள்ளை மற்றும் செல்லம்மாள் ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.[1][2] சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். வைக்கம் மணி ஐயர் மற்றும் இரணியல் தங்கப்பன் இவரது முதல் குருக்கள் ஆவர்.[2] இவர் சென்னையைச் சேர்ந்த இராமநாத பாகவதரிடம் கருநாடக இசையைக் கற்றுக்கொண்டார். பின்னர் தைக்காடு இசைப் பள்ளியில் ஒரு வருடம் இசை பயின்றார்.[3]

சொந்த வாழ்க்கை

தொகு

பல்கலைக்கழக உதவி பதிவாளராக இருந்த என். நாராயணன் நாயர் என்பவரை இராதாதேவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு என். நந்தகோபன் என்ற ஒரு மகன் உள்ளார்.[4] தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.[5]

தொழில் வாழ்க்கை

தொகு

இராதாதேவி தனது 13 வயதில் டி. என். கோபிநாதன் நாயர் என்பவர் எழுதிய நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். இவரது தந்தை சிவசங்கரன் பிள்ளை ஆரம்பத்தில் இவரது நடிப்பை எதிர்த்தார். 1944 ஆம் ஆண்டில், யச்சகமோகினி மற்றும் அம்பிகாபதி (தமிழ்) ஆகிய படங்களில் குழந்தை நடிகையாக நடித்தார். இவர் யச்சகமோகினியில் நடித்தடோடல்லாமல் நடனமும் ஆடினார்.[6] 1948 ஆம் ஆண்டில், திக்குறிசி சுகுமாரன் இயக்கத்தில் ஸ்த்ரீ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.[7] பின்னர் நடிகர் பகதூர் இயக்கிய பல்லதா பஹயான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[7]

மலையாளத் திரைப்படங்களின் ஆரம்ப நாட்களிலிருந்து இராதாதேவி பின்னணி பாடும் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். திருநாயினார்குறிச்சி மாதவன் நாயர் என்பவர் இராதாதேவியை பின்னணி பாடலுக்கு அழைத்து வந்தார். 1950 ஆம் ஆண்டு நல்லதங்கா என்ற திரைப்படத்தில் கவிஞர் தட்சிணாமூர்த்தியின் பாடலுக்கு கே. ஜே. யேசுதாஸின தந்தை அகஸ்டின் ஜோசப்புடன் முதன்முதலில் பாடினார். இராதாதேவி 30 ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார்.[8]

இராதாதேவி ஏழு தசாப்தங்களாக மலையாள வானொலி ஒலிபரப்புத் துறையில் உள்ளார்.[9] 1942 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் வானொலி நிலையத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கிய இவர், 1950 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியில் ஒரு கலைஞராக சேர்ந்தார். அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் போது, இராதாதேவி பின்னணி குரல் துறையில் நுழைந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குரல் கொடுத்துள்ளார். ஒரு பின்னணி குரல் கலைஞராக, ஜி. விஸ்வநாத் இயக்கிய வனமாலா (1951) படத்தில் ஒரு குழந்தை நடிகைக்காக இவர் முதலில் குரல் கொடுத்தார்.[10] ஒரு கதாநாயகிக்கான இவரது முதல் டப்பிங் ஞானசுந்தரி (1961) படத்தில் இருந்தது.[10]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தொகு

1983 இல், இராதாமணி கேரள சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[11] 2018 ஆம் ஆண்டில், இவர் கேரள சங்கீத நாடக அகாடமி கூட்டுறவு மூலம் கௌரவிக்கப்பட்டார்.[12] கேரள சங்கீத நாடக அகாதமியின் குருபூஜா விருது, கேரள திரைப்பட விமர்சகர் விருது, தாகூர் ஜெயந்தி விருது, மலையாளத் திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பிற்கான கேரள அரசின் திரைப்பட விருது, நாட்டியகிரிகம் விருது, டி. ஆர். சுகுமாரன் நாயர் நினைவு விருது, சுவாதித்திருநாள் சங்கீதசபா விருது, சுவரம் விருது, பாரதியகலாபீடம் சங்கீத சங்கம புரஸ்காரம் மற்றும் 60 ஆண்டுகால சேவைக்கான அகில இந்திய வானொலி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Kerala Sangeetha Nataka Academy Award 2019, Handbook. Kerala Sangeetha Nataka Academi. 2019.
  2. 2.0 2.1 "Profile of Malayalam Singer CS Radhadevi". malayalasangeetham.info.
  3. "ശ്രുതിസാന്ദ്രമായ മധുരഗാനം" (in en). மாத்ருபூமி (இதழ்) Archives. https://archives.mathrubhumi.com/thiruvananthapuram/nagaram/article-1.4006349. 
  4. "തീരാ‍ത്ത പാട്ടുകള്‍, തോരാത്ത ഓര്‍മ്മകള്‍" (in ml). தேசாபிமானி (மலையாள இதழ்). https://www.deshabhimani.com/music/g-venugopal-on-c-s-radhadevi/609249. 
  5. "തീരാ‍ത്ത പാട്ടുകള്‍, തോരാത്ത ഓര്‍മ്മകള്‍" (in ml). தேசாபிமானி (மலையாள இதழ்). https://www.deshabhimani.com/music/g-venugopal-on-c-s-radhadevi/609249. 
  6. "ശബ്‌ദനായിക – സി എസ് രാധാദേവി – പൂക്കാലം". pookalam.kerala.gov.in. Government of Kerala.
  7. 7.0 7.1 . 
  8. "ശബ്‌ദനായിക – സി എസ് രാധാദേവി – പൂക്കാലം". pookalam.kerala.gov.in. Government of Kerala.
  9. "ശബ്‌ദനായിക – സി എസ് രാധാദേവി – പൂക്കാലം". pookalam.kerala.gov.in. Government of Kerala.
  10. 10.0 10.1 "'യേശുദാസ് താമസമെന്തേ പാടി; കോരിത്തരിപ്പോടെ ഞാൻ കേട്ടിരുന്നു'". Mathrubhumi (in ஆங்கிலம்). 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-06-07.
  11. "Kerala Sangeetha Nataka Akademi Award: Prakshepana Kala". Department of Cultural Affairs, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.
  12. "ശബ്‌ദനായിക – സി എസ് രാധാദേവി – പൂക്കാലം". pookalam.kerala.gov.in. Government of Kerala.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._ராதாதேவி&oldid=4155196" இலிருந்து மீள்விக்கப்பட்டது