சி. டி. துங்கல்

இந்திய அரசியல்வாதி

சி.டி. துங்கல் (G.T. Dhungel) (கே டிசெரிங் துங்கல்) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது மேல் தாடோங் தொகுதியில் இருந்து சிக்கிம் மாநில சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.

சி.டி. துங்கல்
சிக்கிம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிஅப்பர் தடோங் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22-ஆகத்து-1959 (வயது 64)
சிக்கிம் இராச்சியம்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
பெற்றோர்s
  • லெப்டினன்ட் அகசுடின் துங்கல் (father)
  • லெப்டினன்ட் பெமா ஓங்கிட் லெப்சா (mother)
வாழிடம்(s)காங்டாக், சிக்கிம்
முன்னாள் கல்லூரிஅசாம் பொறியியல் கல்லூரி, குவகாத்தி. இளங்கலை பொறியியல் (கட்டடக்கலை)
வேலைஅரசியல்வாதி

இவர் 2019 ஆம் ஆண்டிலிருந்து சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சியில் அரசியல் உறுப்பினராக இணைந்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

சிக்கிமில் லெப்டினன்ட் அகசிடின் துங்கல் மற்றும் பெமா ஓங்கிட் லெப்சா ஆகியோருக்கு 1959 ஆம் ஆண்டில் பிறந்தார். விக்டோரியா ஆண்கள் பள்ளியில் (குர்சியோங்) பள்ளிப்படிப்பை முடித்தார். 1984 ஆம் ஆண்டில் அசாம் பொறியியல் கல்லூரி, குவகாத்தியில் இளங்கலை பொறியியல் (கட்டடக்கலை) முடித்தார். [1]

அரசியல் வாழ்க்கை தொகு

2019 ஆம் ஆண்டு அரசியலுக்குத் திரும்பிய ஓய்வு பெற்ற பொறியாளர் மற்றும் அதிகாரியான இவர், சிக்கிம் சனநாயக முன்னணி கட்சிக்காக 2019 சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் 25-மேல் தடோங் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

துங்கல் 416 வாக்குகள் வித்தியாசத்தில் ஆனந்த் லாமாவை தோற்கடித்தார். [3] [4]

தற்போது, இவர் சாலை மற்றும் பாலங்கள் துறை, சுமார்ட் சிட்டி கேங்டாக் மற்றும் நாம்ச்சி, பொது சுகாதார பொறியியல் துறை மற்றும் சிக்கிம் அரசாங்கத்தின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் ஆலோசகராக உள்ளார். [5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._டி._துங்கல்&oldid=3822944" இலிருந்து மீள்விக்கப்பட்டது