சி. விஜயதரணி
சி. விசயதரணி (S Vijayadharani), 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
சி. விசயதரணி | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 27 மே 2011 | |
முன்னவர் | ஜி. ஜான் ஜோசப் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 அக்டோபர் 1969 தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | சிவகுமார் கென்னடி (இறப்பு. மார்ச்சு 05, 2016) |
உறவினர் | தேசிக விநாயகம் பிள்ளை |
பிள்ளைகள் | அபிராமி கென்னடி |
சமயம் | இந்து |
குடும்பம் தொகு
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியாவார்.[4] விசயதரணியின் பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். அவரது தாயார் பகவதி, 1977-ஆம் ஆண்டில், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். விஜயதரணி ஒன்பது வயதாக இருக்கும் போது தந்தை இறந்து விட்டார். சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரசில் இணைந்த விஜயதாரணி, 25 வயது வரை இளைஞர் காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டார். அதன் பிறகு காங்கிரசு கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். கணிப்பொறியாளாரான இவரது கணவர் சிவகுமார் கென்னடி என்பவர் மார்ச் 2016-இல் இறந்து விட்டார்.[5] விசயதரணிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கட்சிப் பதவிகள் தொகு
- தலைவர், தமிழ்நாடு மகளிர் அணி, இந்திய தேசிய காங்கிரசு கட்சி, (6 ஆகஸ்டு – 22 சனவரி 2016)
- பொதுச் செயலாளர், அகில இந்திய மகளிர் காங்கிரசு (4 மார்ச் 2016 முதல்)
- தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் சட்டமன்ற கொறடா.[6].
மேற்கோள்கள் தொகு
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf.
- ↑ member_list.pdf "List of MLAs from Tamil Nadu 2016". Govt. of Tamil Nadu. http://www.tn.gov.in/government/mlas?page=9/ member_list.pdf.
- ↑ "16th Assembly Members". Government of Tamil Nadu. http://www.assembly.tn.gov.in/16thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2021-05-07.
- ↑ "Lawyer with lineage has task cut out". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/elections/elections-2011/2011/mar/25/lawyer-with-lineage-has-task-cut-out-238530.html. பார்த்த நாள்: 5 May 2021.
- ↑ விசயதரணி எம்.எல்.ஏ. கணவர் மரணம் மாரடைப்பால் உயிர் பிரிந்தது
- ↑ காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவாக எம்.எல்.ஏ விசயதரணி தேர்வு