சீக்கியத்தில் பெண்கள்

சீக்கிய மதத்தில் பெண்களின் நிலை

சீக்கியத்தில் பெண்கள் (Women in Sikhism ) சீக்கிய மதத்தின் கொள்கைகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஆன்மாக்களைக் கொண்டுள்ளன. இதனால் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு அவர்களுக்குச் சம உரிமை உள்ளது.[1] விமோசனத்தை அடைய சம வாய்ப்புகளும் உள்ளன. [2] தொழில்நுட்ப ரீதியாக பெண் அனைத்து மத, கலாச்சார, சமூக மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பில் குறிப்பிட்டுள்ள தடையில்லா பாராயணத்தில் (புனித நூல்களைத் தொடர்ந்து ஓதுதல்) பங்கேற்கவும், கீர்த்தனை, புனித நூலை வாசிக்கும் கிரந்தியாகவும் பணி புரியலாம்.[1] பெண்களுக்கு சமத்துவம் எப்போதுமே சீக்கிய மதத்தின் முக்கிய பண்பாக இருந்தாலும், ஏராளமான பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தாலும், அது இன்னும் முன்னேற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குரு நானக் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமத்துவத்தை அறிவித்தார். அவரும் அவருக்குப் பின் வந்த குருக்களும் சீக்கிய வழிபாடு மற்றும் நடைமுறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஆண்களையும் பெண்களையும் முழுமையாகப் பங்கேற்க ஊக்குவித்தனர்.[3] சீக்கிய வரலாறு பெண்களின் பங்கைப் பதிவு செய்துள்ளது. சேவை, பக்தி, தியாகம் மற்றும் தைரியத்தில் ஆண்களுக்குச் சமமாக பெண்களைச் சித்தரிக்கிறது.[4]

வரலாறு

தொகு

இந்தியாவில் புர்தாவும் உடன்கட்டையும்

தொகு

வேத காலத்தில் (கிமு 1500 முதல்) உபநயனம், பெண்களைக் கொண்டே துவங்கப்பட்டபோது ஆண்களுடன் சமமான தகுதி இருந்தது.[5]

சீக்கிய மதத்துடன் பெண்களின் உரிமைகளை முன்வைத்தல்

தொகு
 
1705 இல்முகலாயர்களுக்கு எதிராக சீக்கிய வீரர்களை வழிநடத்திய ஒரு சீக்கியப் பெண்ணான மாய் பாகோ

சீக்கிய குருக்களும், பல்வேறு சீக்கிய மகான்களும் 15ஆம் நூற்றாண்டில் கணிசமாக தாழ்த்தப்பட்ட பெண்களின் உரிமைகளை முன்னேற்ற பெரிதும் பாடுபட்டனர். பெண்களுக்கு ஒரு புதிய சம அந்தஸ்தை உறுதி செய்வதற்காக, குருக்கள், [6] துவக்கம், அறிவுறுத்தல் அல்லது சங்கத்தில் பங்கேற்பு (புனித கூட்டுறவு), பங்கத் (ஒன்றாக உணவு உண்ணுதல்) ஆகியவற்றில் பாலினங்களுக்கிடையே வேறுபாடு காட்டவில்லை.

குரு அமர் தாஸ்

தொகு

சீக்கியர்களின் மூன்றாம் குருவான அமர் தாஸ் பெண்கள் முக்காடு பயன்படுத்துவதை விரும்பவில்லை. அவர் சில சீடர்களின் சமூகங்களை மேற்பார்வையிட பெண்களை நியமித்தார். உடன்கட்டை ஏறல் வழக்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்தார். மேலும், பெண் சிசுக்கொலைக்கு எதிராக குரல் எழுப்பினார்.[7]

குரு கோவிந்த் சிங்

தொகு

குரு கோவிந்த் சிங், கால்சாக்களிடம் பெண்களை துன்புறுத்துபவர்களிடம் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். பெண்ணிடம் பாவம் செய்பவர்களையும், பெண்ணை புறநிலைப்படுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார். கால்சாவில் திருமுழுக்கு பெற்ற பெண்களுக்கு "கௌர்" என்ற குடும்பப்பெயரை வழங்கினார். இது, ஒரு இறையாண்மை கொண்ட இளவரசியின் தகுதியாகும்.[8]

இராம் சிங் நாம்தாரி

தொகு

பாபா ராம் சிங் சிசுக்கொலையை எதிர்ப்பது, இளம் பெண்களை அடிமைத்தனமாக விற்பதை எதிர்த்தல், வரதட்சணை, பர்தா [9],உயர் கல்வியறிவு, விதவைகளின் மறுமணம் ஆகியவற்றை அடைய முயற்சி செய்தார். [10] [11]

சிங் சபா

தொகு

1870களில் தொடங்கிய சிங் சபாவின் சீக்கிய மறுமலர்ச்சி இயக்கத்தின் போது, சிங் சபா புர்தா, பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறல், விதவைகளின் மோசமான நிலைமைகள், வரதட்சணை, திருமணத்தின் போது ஆடம்பரமான செலவினங்களுக்கு எதிராக குரல் எழுப்பியது.[7]

பலதார மணம்

தொகு

பொதுவாக ஒற்றைத் திருமணமாக இருக்கும் ஒரு சீக்கியக் கலாச்சாரத்தில், பலதுணை மணம் என்பது விதிவிலக்காக அரிது.[12]

பெண் சிசுக்கொலை

தொகு

சீக்கியத்தில் பெண் சிசுக்கொலை தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையில் ஈடுபடுபவர்களுடன் சீக்கியர்களுக்கு எந்த தொடர்பும் அல்லது உறவும் இருப்பதை நடத்தை விதிமுறைகள் தடை செய்கிறது.[13] [14]

சீக்கிய மதத்தில் பெண்களின் கண்ணியம்

தொகு

சீக்கிய வரலாறு முழுவதும் மாதா குஜ்ரி, மாய் பாகோ, மாதா சுந்தரி, மாதா தேசன் கௌர், இராணி சாஹிப் கௌர், இராணி சதா, மாதா சாகெப் கௌர், இராணி ததார், மகாராணி ஜிந்த் கௌர் போன்றவர்கள் சீக்கிய வரலாறு முழுவதும் சேவை மற்றும் தியாகத்தின் மாதிரிகளாகக் கருதப்படும் பெண்களின் பல உதாரணங்கள் ஆவர்.[15]

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Sikhism: What is the role and status of women in Sikh society?". www.realsikhism.com. Archived from the original on 2015-08-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
  2. Dharma: The Hindu, Jain, Buddhist and Sikh Traditions of India.
  3. Holm, Jean; Bowker, John. Women in Religion. Continuum International Publishing.
  4. Kaura, Bhupindara. Status of women in Sikhism. Shiromani Gurdwara Parbandhak Committee.
  5. Holm, Jean; Bowker, John (January 1994). Women in Religion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780826453044.
  6. "Sikhism Religion of the Sikh People".
  7. 7.0 7.1 Gill, Manmohan (2003). Punjab Society: Perspectives and Challenges. Concept Publishing Company. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788180690389.
  8. "FAQ". Sikh Coalition (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-02.
  9. "The Panjab Past and Present". Department of Punjab Historical Studies, Punjabi University.. 1973. p. 149. 
  10. Clarke, Peter (2004). Encyclopedia of New Religious Movements. Oxon: Routledge. p. 425. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134499700.
  11. Grewal, Gurdial (1991). Freedom Struggle of India by Sikhs and Sikhs in India: The Facts World Must Know, Volume 1. Sant Isher Singh Rarewala Education Trust. p. 146.
  12. Rait, S. K. (2005). polygamy rare Sikh Women in England: Their Religious and Cultural Beliefs and Social Practices. Staffordshire: Trentham. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781858563534.
  13. Gandhi, Surjit (1978). History of the Sikh Gurus. Gur Das Kapur. p. 505.
  14. Harbans, Bhatia (1999). Political Ideology Of The Sikhs. Deep & Deep Publications. p. 33.
  15. User, Super. "Great Sikh Women – Great Sikh Women – Gateway to Sikhism Foundation". 
  • Guru Granth Sahib, p 73.
  • Guru Granth Sahib, p 788.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கியத்தில்_பெண்கள்&oldid=3675635" இலிருந்து மீள்விக்கப்பட்டது