சீதை அம்மன் கோவில்

(சீதா எலிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீதை அம்மன் கோவில் (Seetha Amman Temple) இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் "சீதா எலிய" என்ற இடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 5 கிமீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சீதா அம்மன் கோயில்
சீதா அம்மன் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்6°56′00″N 80°48′38″E / 6.9332°N 80.8105°E / 6.9332; 80.8105
மாகாணம்மலையகம்
மாவட்டம்நுவரெலியா

சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது.[1][2] இவ்விடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் வட்ட அழுத்தங்கள் இராவணனின் யானையின் கால்தடங்கள் எனவும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "WWW Virtual Library: Sita Eliya / Seetha Eliya / Sitha Eliya".
  2. "Amazing Sri Lanka : Nature : Seetha Amman Temple - Seetha Eliya". Archived from the original on 2010-11-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதை_அம்மன்_கோவில்&oldid=3686431" இலிருந்து மீள்விக்கப்பட்டது