சீனாக்கத்தூர் கோயில்

சீனாக்கத்தூர் கோயில் இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒட்டப்பாலம் அருகில்பாலப்புரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . [1] இதன் மூலவர் பகவதி ஆவார். ஆண்டுதோறும் மலையாள மாதமான கும்பத்தில் நடைபெறுகின்ற சீனக்கத்தூர் பூரம் மிகவும் புகழ் பெற்றதாகும். [2]

சீனாக்கத்தூர் கோயில்
பூரம் விழா

இரு சன்னதிகள்

தொகு

இக்கோயிலில் கீழ் சன்னதி, மேல் சன்னதி என இரண்டு சன்னதிகள் உள்ளன. கீழ் சன்னதி, மேல் சன்னதியைவிட பழமையானது என்று நம்பப்படுகிறது. மேல் சன்னதியின் பூசாரிகள் பாரம்பரியமாக பாலப்புரத்தின் குளங்கரா நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நம்பூதிரி பூசாரிகள் கீழ் சன்னதியில் பூசை செய்வதோடு, பத்து நாள்கள் நடைபெறுகின்ற பூரம் விழாவினை மேற்கொள்கின்றனர். மேல் சன்னதியின் பொறுப்பினையும் அவர்கள் ஏற்றுள்ளார்கள். ஆலமரத்தின் அருகே கோயில் வளாகத்தை ஒட்டி, கணபதி, தெய்வீக வித்யா கணபதி வடிவத்தில் இருப்பதாக நம்பப்படுகின்ற சன்னதி உள்ளது.

விழாக்கள்

தொகு

இங்கு பூரம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கும்பத்தின் மக நாளில் கொண்டாடப்படுகிறது. மாலை உற்சவத்தின் சிறப்பம்சம் 28 யானைகளின் ஊர்வலம் ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது கோயில் இசைக்குழுவின் பாரம்பரிய நிகழ்ச்சிகளான வெள்ளட்டு, தெய்யம், பூதானும் திரையும், காலவேலை, குதிரைவேலை, ஆண்டி வேடன், கரிவேலை போன்றவை நிகழ்த்தப்பெறுகின்றன. நிறைவு விழாவிற்கு முன்பாக 17 நாட்களுக்கு தினமும் மாலையில் கோயில் வளாகத்தில் தொல்பாவைக்கூத்து என்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

செல்வதற்கான வசதி

தொகு

கோயிலிலிருந்து ஒட்டப்பாலம் ரயில் நிலையம் சுமார் 5 கி.மீ. தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் விமான நிலையம் 85 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. tripblog (2018-07-24). "Sri Chinakkathoor Bhagavathy Temple" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
  2. "Chinakkathoor Pooram – the Pooram at Chinakkathoor Bhagavathy Temple | Festivals of Kerala" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாக்கத்தூர்_கோயில்&oldid=3827671" இலிருந்து மீள்விக்கப்பட்டது