சீனிவாச இராமானுசன் அடிப்படை அறிவியல் நிறுவனம்
சீனிவாச இராமானுசன் அடிப்படை அறிவியல் நிறுவனம் (Srinivasa Ramanujan Institute of Basic Sciences)[1] என்பது, இந்தியாவில் கேரள அரசு, திருவனந்தபுரத்தில், அடிப்படை அறிவியல் மேம்பாட்டு ஆராய்ச்சிக்காக, கேரள மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆய்வும் விருத்தியும் அடிப்படையில் அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். பழம்பெரும் இந்தியக் கணித மேதை சீனிவாச இராமானுசனின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தை நிறுவ கேரள அரசு முடிவு எடுத்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி 13 சனவரி 2012 அன்று இதனை அறிவித்தார். இந்த நிறுவனம் பிப்ரவரி 2013 அன்று முறையாகத் துவக்கப்பட்டது.[2] இந்நிறுவனம் தற்போது கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப வளாகத்தில் இயங்கி வருகிறது. ஜார்ஜ் சுதர்சன் தலைமையில் ஒரு ஆலோசனைக் குழு இந்நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளை வடிவமைத்தது. இதன் தொடக்கத்திலிருந்து, இந்நிறுவனம் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Srinivasa Ramanujan Institute of Basic Sciences". KSCSTE. Archived from the original on 27 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Inaugural Address by Shri Oommen Chandy, Chief Minister of Kerala" (PDF). Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)