சீன குக்குறுவான்

பறவை இனம்
சீன குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. பேபர்
இருசொற் பெயரீடு
சைலோபோகன் பேபர்
(சுவைன்கோ, 1870)
வேறு பெயர்கள்

மேகாலைமா பேபர்

சீன குக்குறுவான் (Chinese barbet)(சைலோபோகன் பேபர்) என்பது மெகலைமிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1870-ல் இராபர்ட் சுவின்கோவால் விவரிக்கப்பட்டது. இது தெற்கு சீனாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இது முன்னர் கரும் புருவ குக்குறுவான் (சைலோபோகன் ஊர்தி) துணையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Psilopogon faber". IUCN Red List of Threatened Species 2016: e.T22734438A95085587. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734438A95085587.en. https://www.iucnredlist.org/species/22734438/95085587. பார்த்த நாள்: 19 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_குக்குறுவான்&oldid=3757647" இலிருந்து மீள்விக்கப்பட்டது