சீரியம் ஈரயோடைடு
சீரியம் ஈரயோடைடு (Cerium diiodide) என்பது CeI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியத்தின் அயோடைடு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
19139-47-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CeI2 | |
வாய்ப்பாட்டு எடை | 393.92 g·mol−1 |
தோற்றம் | வெண்கல நிறத் திண்மம்[1] |
உருகுநிலை | 808 °C[1] |
கட்டமைப்பு | |
புறவெளித் தொகுதி | I4/mmm (No. 139) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலாந்தனம் ஈரயோடைடு பிரசியோடைமியம் ஈரயோடைடு நியோடிமியம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு800 முதல் 900 பாகை செல்சியசு வரையிலான வெப்பநிலையில் வெற்றிடத்தின் கீழ் உலோக சீரியத்துடன் சீரியம் (III) அயோடைடைச் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் சீரியம் ஈரயோடைடைப் பெறலாம்.[2]
- Ce + 2 CeI3 → CeI2
−78 செல்சியசு வெப்பநிலையில் திரவ அம்மோனியாவில் சீரியம் மற்றும் அம்மோனியம் அயோடைடு ஆகியவற்றின் வினையிலிருந்தும் இது உருவாகலாம். இந்த வினை சீரியம் ஈரயோடைடின் அம்மோனியா அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது. இது 200 ° செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தின் கீழ் சீரியம் ஈரயோடைடாக சிதைகிறது. [2]
- Ce + 2 NH4I → CeI2 + 2 NH3 + H2
இது முதன்முதலில் இயான் டி. கார்பெட்டு [3] என்பவரால் உருவாக்கப்பட்டது.
பண்புகள்
தொகுசீரியம் ஈரயோடைடு உலோகம் போன்ற தோற்றம் மற்றும் பண்புகளைக் கொண்ட ஒரு ஒளிபுகா கருப்பு நிற திண்மமாகும். சீரியம் ஈரயோடைடில் சீரியம்(II) இல்லை. இதன் உண்மையான கட்டமைப்பு Ce 3+ (I - ) 2 e - ஆகும். இதனுடன் தொடர்புடைய அயோடைடு ஆக்சைடை உருவாக்க இச்சேர்மம் எளிதில் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. [2] லாந்தனம் டையோடைடு மற்றும் பிரசியோடைமியம் ஈரயோடைடு போன்று, சீரியம் ஈரயோடைடும் மாலிப்டினம் இருசிலிசைடு வகை கட்டமைப்பில் உருவாகிறது [4] I 4/ mmm (எண். 139) என்ற இடக்குழு கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Haynes, William (2012). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. Boca Raton, Fla. London: CRC Taylor & Francis distributor. p. 4-56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4. இணையக் கணினி நூலக மைய எண் 793213751.
- ↑ 2.0 2.1 2.2 Handbuch der präparativen anorganischen Chemie (in ஜெர்மன்). Stuttgart: Enke. 1975. p. 1081. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6. இணையக் கணினி நூலக மைய எண் 310719485.
- ↑ Jungmann, Angelika; Claessen, R.; Zimmermann, R.; Meng, Ge; Steiner, P.; Hüfner, S.; Tratzky, S.; Stöwe, K. et al. (1995). "Photoemission of LaI2 and CeI2". Zeitschrift für Physik B Condensed Matter (Springer Science and Business Media LLC) 97 (1): 25–34. doi:10.1007/bf01317584. பன்னாட்டுத் தர தொடர் எண்:0722-3277. Bibcode: 1995ZPhyB..97...25J.
- ↑ Dictionary of inorganic compounds. London New York: Chapman & Hall. 1992. p. 2820. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-30120-2. இணையக் கணினி நூலக மைய எண் 26338506.
- ↑ Structural chemistry of layer-type phases. Dordrecht, Holland Boston: D. Reidel Pub. Co. 1976. p. 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-277-0714-6. இணையக் கணினி நூலக மைய எண் 2372807.