சீர்காழி தொடருந்து நிலையம்
தமிழகத்திலுள்ள தொடர்வண்டி நிலையம்
சீர்காழி தொடருந்து நிலையம் (Sirkazhi railway station, நிலையக் குறியீடு:SY) இந்தியாவின், தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் முக்கிய தொடருந்து பாதையாக உள்ளது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு தினசரி விரைவுத் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருப்பதி, மும்பை, வாரணாசி, புவனேஸ்வர் போன்ற வெளிமாநில நகரங்களுடன் இணைக்கும் விரைவுத் தொடருந்துகளும் இவ்வழியாக இயக்கப்படுகிறது. சீர்காழிக்கு 160 கிலோமீட்டர் (99 மைல்) தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.
சீர்காழி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 45A, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°14′29″N 79°43′39″E / 11.2414°N 79.7275°E | ||||
ஏற்றம் | 6 மீட்டர்கள் (20 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | SY | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|