சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம்

(சுகர்னோ-ஹத்தா பன்னாட்டு விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Soekarno–Hatta International Airport,இந்தோனேசிய மொழி: Bandar Udara Internasional Soekarno–Hatta) (ஐஏடிஏ: CGKஐசிஏஓ: WIII), சுருக்கமாக SHIA அல்லது சொயேட்டா[3] இந்தோனேசியாவின் சாவகத் தீவில் ஜகார்த்தா பெருநகரப்பகுதியின் முதன்மையான வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவராக இருந்த சுகர்னோ மற்றும் துணைத் தலைவராக இருந்த மொகமது ஹத்தா ஆகியோரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஐஏடிஏ குறியீடான, சிஜிகே, நகரின் வடமேற்கேயுள்ள செங்கரெங் மாவட்டப் பெயரிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தோனேசியர்கள் இந்த நிலையத்தை பொதுவாக செங்கரெங் வானூர்தி நிலையம் என்றே அழைத்தாலும், டாங்கெரெங் நிர்வாகப் பகுதியிலேயே உள்ளது.

சுகர்ணோ–ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம்

பந்தர் உதரா இன்டர்நேசனோல் சுகர்ணோ–அட்டா (ஷியா)
சுகர்ணோ–ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் முனையம் 3
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்தோனேசிய அரசு
இயக்குனர்அங்காசா புரா
சேவை புரிவதுஜகார்த்தா
அமைவிடம்டாங்கெரெங், பாந்தென், இந்தோனேசியா
திறக்கப்பட்டது1998
மையம்
  • கார்டிக் ஏர்
  • எக்சுபிரசு ஏர்
  • கருடா இந்தோனேசியா
  • இந்தோனேசிய ஏர்ஏசியா
  • இலயன் ஏர்
  • மண்டலா ஏர்லைன்ஸ்
  • மேற்பட்டி நுசந்தரா ஏர்லைன்சு
  • ரிபப்ளிக் எக்சுபிரசு ஏர்லைன்சு
  • ஸ்ரீவிஜயா ஏர்
  • விங்சு ஏர்
உயரம் AMSL32 ft / 10 m
இணையத்தளம்www.jakartaairportonline.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
07R/25L 11,500 3,600 பாவப்பட்ட சாலை
07L/25R 11,545 3,600 பாவப்பட்டது
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள்57,772,762
வானூர்தி இயக்கங்கள்369,740
சரக்கு (மெட்றிக் டன்கள்)342,473
மூலம்: பயணியர் மற்றும் வானூர்தி இயக்கங்கள்: ஏசிஐயிடமிருந்து[1]
சரக்கு:அங்கர புரா II வானூர்தி நிலையங்கள் நிறுவனம்[2]


ஜகார்த்தாவின் மேற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் 1985ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; அதுவரை உள்நாட்டு பறப்புக்களுக்கு மத்திய ஜகார்த்தாவிலிருந்த கெமயோரன் வானூர்தி நிலையமும் கிழக்கு ஜகார்த்தாவிலிருந்த அலிம் பெர்டனகுசும பன்னாட்டு வானூர்தி நிலையமும் பயன்படுத்தப்படு வந்தன.[4] கெமயோரன் வானூர்தி நிலையம் பொதுவிடமாக மாற்றப்பட்டது. அலிம் பெர்டனகுசும நிலையம் இன்னமும் இயக்கத்தில் உள்ளது; பெரும்பாலும் மிக முக்கியமான நபர்கள், ஒப்பந்த வானூர்திகள் மற்றும் படைத்துறை இயக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 1992இல் இரண்டாவது முனையமும் 2009இல் மூன்றாவது முனையமும் திறக்கப்பட்டன. ஆனால் 2010இல் திட்டமிடப்பட்ட 38 மில்லியன்களை விட மொத்த பயணிகளின் தொகை 43.7 மில்லியனை எட்டியது.[5] 2012இல் பயணிக்கும் மக்கள்தொகை 57.8 மில்லியன் பயணிகளாக உயர்ந்து உலகின் ஒன்பதாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது.[1]

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "2012 Passenger Traffic (Preliminary)". Archived from the original on 2020-05-15. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
  2. "angkasapura2.co.id - Statistics". Archived from the original on 2017-06-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
  3. "Bandara Soekarno-Hatta Raih Dua Penghargaan". Archived from the original on 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2013-04-29.
  4. "Soekarno-Hatta must be expanded to meet passenger demand பரணிடப்பட்டது 2015-09-10 at the வந்தவழி இயந்திரம்." The Jakarta Post. Wednesday 1 September 2010. Retrieved on 16 September 2010. "In this August, 2010 file photo passengers crowd the domestic terminal at Soekarno-Hatta International Airport in Tangerang, Banten." and "Starting operation in 1985, Soekarno-Hatta airport replaced Kemayoran airport in Central Jakarta and Halim Perdanakusuma airport in East Jakarta"
  5. "IATA sees strong growth in Indonesia". September 23, 2011.