சுகைலா சித்திக்

ஆப்கானிய அரசியல்வாதி

படைத்துறை தலைவர் மருத்துவர் சுகைலா சித்திக் (Suhaila Siddiq; 11 மார்ச் 1949 [1] - 4 திசம்பர் 2020), பெரும்பாலும் 'ஜெனரல் சுகைலா' என்று குறிப்பிடப்படும் இவர், ஓர் ஆப்கான் அரசியல்வாதி ஆவார். இவர் திசம்பர் 2001 முதல் 2004 வரை பொது சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார். அதற்கு முன், இவர் ஆப்கானித்தானின் இராணுவத்தில் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவராகப் பணியாற்றினார். ஒரு அரசாங்க அமைச்சராக, இவரது பெயருக்கு முன்னால் "மாண்புமிகு" என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. ஆப்கானித்தானின் சில பெண் அரசாங்கத் தலைவர்களில் ஒருவராக சித்திக் இருந்தார். ஆப்கானித்தான் வரலாற்றில் படைத்துறைத் தலைவர் என்ற பட்டத்தை பெற்ற ஒரே பெண் இவராவார். முகமது ஜாகிர் ஷாவின் ஆட்சியில் இருந்து இவர் ஆப்கானித்தான் அரசாங்கத்திற்காக பணியாற்றினார்.

படைத்துறை தலைவர்
Lieutenant General
சுகைலா சித்திக்
பொது சுகாதாரத் துறை அமைச்சர், ஆப்கானித்தான்
பதவியில்
திசம்பர் 2001 – 2004
குடியரசுத் தலைவர்ஹமித் கர்சாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-03-11)11 மார்ச்சு 1949
காபுல், ஆப்கானித்தான்
இறப்பு4 திசம்பர் 2020(2020-12-04) (அகவை 71)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

தளபதி சுகைலா ஆப்கானித்தானின் காபுலில் மார்ச் 11 அன்று பிறந்தார். இவருடைய சரியான பிறந்த ஆண்டு தெரியவில்லை, 1938 அல்லது 1949 என்று நம்பப்படுகிறது.[2] [1] இவர் அரச குலமான பராக்சாய் முகமதுசாய் பஷ்தூன் பரம்பரையைச் சேர்ந்தவர்.[3] [4] இவரது பெற்றோருக்கு பிறந்த ஆறு மகள்களில் ஒருவர். இவரது தந்தை காந்தார மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.

உயர்நிலைப் பள்ளி முடித்த பிறகு, இவர் காபுல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர், சோவியத் ஒன்றியத்தின் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.[5]

தொழில்

தொகு

முகமது நஜிபுல்லாவின் அரசாங்கத்தின் போது (1987-1992), சித்திக்கிற்கு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தலிபான்களுக்கு முன்னும் பின்னும் வசீர் அக்பர் கானில் உள்ள முக்கிய காபுல் மருத்துவமனையில் இவர் அறுவை சிகிச்சையின் தலைவராக இருந்தார். தலிபான்களின் கீழ், இவர் பெண்களுக்கு மருத்துவ அறிவுறுத்தல்களைத் தொடர்ந்தார். மேலும் தாலிபான்கள் இதை தடை செய்த பிறகு, இவர் பணிபுரிந்த மருத்துவமனையின் மகளிர் பிரிவை மீண்டும் திறக்க முடிந்தது.

 
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் ஜூலை 24, 2002 அன்று ஓவல் அலுவலகத்தில் ஆப்கானித்தான் அமைச்சர்களுடன் ஒரு சந்திப்பில். படத்தின் இடமிருந்து இருப்பது: அப்துல்லா அப்துல்லா, சயீத் முஸ்தபா கசெமி, சுகைலா சித்திக், முகமது அமின் பர்காங்க், அபீபா சராபி ஆகியோருடன்

தாலிபான்களின் காலத்தில் இவரது செயல்களுக்காக பல ஆப்கானிய பெண்ணியவாதிகளால் சித்திக் நன்கு மதிக்கப்பட்டார். காபுல் பல்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த இவரும், இவரது சகோதரி சித்திகாவும் வெற்றிகரமாக புர்கா அணிய மறுத்த மிகச் சில பெண்களில் இருவர். இவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, " மத காவல்துறையினர் தங்கள் தடிகளுடன் வந்து என்னைத் தாக்க தங்கள் கைகளை உயர்த்தியபோது, நான் அவர்களைத் திருப்பி அடிக்க என்னுடைய கையை உயர்த்தினேன். பின்னர் அவர்கள் தங்கள் கைகளை கீழே இறக்கி என்னை விடுவித்தனர். "

ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளாலும் பிரிட்டிசு ஆயுதப் படைகளாலும் ஆப்கானித்தானில் இருந்து தலிபான் அரசாங்கம் அகற்றப்பட்ட பிறகு, ஹமித் கர்சாய் அரசாங்கத்தில் சித்திக் பொது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். பெண்களின் மருத்துவப் பணிப் படையை நிறுவுவதற்கு சர்வதேச சமூகத்திடம் உதவி கோருவது இவரது முதல் செயல்களில் ஒன்றாகும். ஆப்கானித்தான் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம், ஏனெனில் அவர்கள் சுகாதார அமைப்பில் ஒரு முக்கியமான சொத்து என்பதால் உலக சுகாதார அமைப்பின் ஒரு குழுவை இவர் சந்தித்தார். அது போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு அதன் சுகாதார தேவைகளை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்படிருந்தது.[6]

அமைச்சராக, ஏப்ரல் 2002 இல், சித்திக் ஐக்கிய நாடுகள் சிறுவர நிதியத்தின் சார்பாக சுமார் 6 மில்லியன் ஆப்கானித்தான் குழந்தைகளுக்கு இளம்பிளளை வாத தடுப்பூசிப் பணிகளை மேற்பார்வையிட்டார்.[7] சூலை 2002 இல் இவர் ஒரு சீன தூதுக்குழுவைச் சந்தித்தார். அவர்கள் ஆப்கானித்தானின் மிக நவீன மருத்துவமனை என்று உறுதியளிக்கப்பட்டதை புதுப்பிக்க ஒப்புக்கொண்டார்.[8] நவம்பர் 2006 இல், நியூயார்க் நகரத்தில் உள்ள யூரேசியானெட்டுக்கு ஆப்கானித்தானில் எய்ட்சு பற்றிய உரையை சித்திக் வழங்கினார். [9]

சித்திக் தனது வாழ்நாள் முழுவதும் ஆப்கானித்தானில் வாழ்ந்தார். இவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவர் தன் தொழிலுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கணவனுக்காக காத்திருக்க நேரம் இல்லை என்றார். "நான் திருமணம் செய்யவில்லை, ஏனென்றால் நான் ஒரு ஆணிடமிருந்து ஆணையை பெற விரும்பவில்லை".[5]

இறப்பு

தொகு

சித்திக்கிற்கு ஆல்சைமர் நோய் இருந்தது. ஆப்கானித்தானில் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது கோவிட் -19 சிக்கல்களால் இவர் 4 திசம்பர் 2020 அன்று காபுலில் தனது 72 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Haqiqat
  2. Faizi, Fatima; Gibbons-Neff, Thomas (5 December 2020). "Suhaila Siddiq, Afghanistan's First Female General, Is Dead". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/12/05/world/asia/suhaila-siddiq-dead.html. 
  3. "In Leadership - US Aid". Archived from the original on 2011-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
  4. Interim Government 2001–02 - Afghan Land
  5. 5.0 5.1 "'We Can Only Rely On Ourselves To Rebuild Our Country'". நியூஸ்வீக். December 20, 2001. http://www.thedailybeast.com/newsweek/2001/12/20/we-can-only-rely-on-ourselves-to-rebuild-our-country.html. பார்த்த நாள்: 2011-08-05. 
  6. Los Angeles Times, Health Minister Stresses Training for Women. December 29, 2001
  7. "News Notes Afghanistan - UNICEF.org". Archived from the original on 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
  8. "English.people.com". Archived from the original on 2005-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.
  9. "Eurasianet.org". Archived from the original on 2009-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-09-12.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suhaila Seddiqi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகைலா_சித்திக்&oldid=3554927" இலிருந்து மீள்விக்கப்பட்டது