சுக்கிரவாரப்பட்டி
சுக்கிரவாரப்பட்டி (ஆங்கிலம்:Sukkiravarapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியதுக்குட்பட்ட ஊராட்சி ஆகும்[3] .
சுக்கிரவாரப்பட்டி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°31′01″N 77°47′42″E / 9.5170627°N 77.7950501°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 9.30° N 77.47° E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,081 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.36% ஆண்கள், 49.64% பெண்கள் ஆவார்கள். [4]
தொழில்
தொகுசுக்கிரவாரப்பட்டி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும்.இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும், கடதாசித் தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சுக்கிரவாரப்பட்டி விவசாயமும் கொண்ட ஊராகும்.[5] இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து திடமான நிலையினை எப்போதும் தக்க வைத்துகொண்டுள்ளனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியிலும், பட்டாசு உற்பத்தியிலும் பெரும் பங்கு சுக்கிரவாரப்பட்டி கிராமப்புறங்களில் தான் தயாராகின்றன. மேலும் கடதாசித் தொழிற்சாலைகளும் இருக்கின்ற காரணத்தினால், இந்த ஊர் மக்களுக்கு முழுமையான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
போக்குவரத்து
தொகுதிருத்தங்கல், சிவகாசி மேலும் திருவில்லிபுத்தூர் போன்ற நகரபகுதிகளை இணைக்கும் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் சுக்கிரவாரப்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.
- ↑ http://www.virudhunagar.nic.in/census/sivakasi.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-13. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21.